AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Atlee: தனது பெண் குழந்தைக்கு பெயரிட்ட அட்லீ – பிரியா தம்பதி.. என்ன பெயர் தெரியுமா?

Atlee Girl Baby Name: தென்னிந்திய சினிமாவில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இயக்குநராக இருந்துவருபவர் அட்லீ. இவர் நடிகை பிரியா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஏற்கனவே மீர் என்ற ஆண் குழந்தை உள்ள நிலையில், சமீபத்தில் 2வது பெண் குழந்தை பிறந்திருந்தது. தற்போது அந்த குழந்தைக்கு பெயர் வைத்துள்ளதாக அட்லீ பதிவை வெளியிட்டுள்ளார்.

Atlee: தனது பெண் குழந்தைக்கு பெயரிட்ட அட்லீ – பிரியா தம்பதி.. என்ன பெயர் தெரியுமா?
அட்லீ - பிரியா தம்பதியின் பெண் குழந்தையின் பெயர்Image Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Updated On: 17 May 2026 12:52 PM IST

கோலிவுட் சினிமா முதல் பாலிவுட் சினிமா வரை மிகவும் பிரபலமான இயக்குநராக இருந்துவருபவர் அட்லீ குமார் (Atlee Kumar). இவர் ஆரம்பத்தில் இயக்குநர் சங்கரின் உதவி இயக்குநராக பணியாற்றிய நிலையில், ஜெய் மற்றும் ஆர்யாவை வைத்து ராஜா ராணி (Raja Rani) என்ற படத்தை இயக்கி ஹிட் கொடுத்திருந்தார். இந்த படமானது இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுக்க, தனது இரண்டாவது படத்தை தளபதி விஜயை (Thalapathy Vijay) வைத்து இயக்கியிருந்தார். அந்த படம்தான் தெறி (Theri). இப்படம் இவருக்கு சிறப்பான வெற்றியை கொடுத்திருந்தது. இந்நிலையில், அட்லீ குமார் மற்றும் பிரியா (Priya) இருவரும் 2014ம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு 2023ம் ஆண்டில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்நிலையில் இதையடுத்து, கடந்த 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பெண் குழந்தை பிறந்திருந்தது. இந்நிலையில், தனது 2வது பெண் குழந்தைக்கு பெயரிட்டுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அட்லீ மற்றும் பிரியா தம்பதி 2வது பெண் குழந்தைக்கு, மியூ (Miyou) என பெயரிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 2001ல் அரசியலுக்கு வந்திருந்தால் 100% ஜெயிச்சிருப்பேன் – அரசியல் குறித்து பேசிய ரஜினிகாந்த்

தனது இரண்டாவது குழந்தைக்கு பெயர் குறித்து அறிவிப்பை வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இயக்குநர் அட்லீயை மற்றும் பிரியா தம்பதியின் முதல் ஆண் குழந்தைக்கு மீர் என்று பெயரிட்டுள்ள நிலையில், தற்போது இவர்களுக்கு பிறந்திருக்கும் பெண் குழந்தைக்கு மியூ என பெயர் வைத்துள்ளனர். இந்த பெயருக்கு, அழகு, மேன்மை மற்றும் அன்பு என்ற அர்த்தம் என அதையும் அட்லீ பகிர்ந்துள்ளார். இந்நிலையில், தற்போது இதற்க்கு பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துவருகிறார்கள். தற்போது இயக்குநர் அட்லீ வெளியிட்ட இப்பதிவு ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: பெத்தி பட 3 நிமிட ட்ரெய்லர்.. முழுக்க அனல் பறக்கும் – அப்டேட் கொடுத்த சிரஞ்சீவி!

அட்லீயின் புதிய திரைப்படம் :

இயக்குநர் அட்லீ குமார் தற்போது, அல்லு அர்ஜுனை வைத்து ராக்கா என்ற படத்தை இயக்கிவருகிறார். இந்த படமானது பான் இந்திய திரைப்படமாக தயாராகிவரும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் சிறப்பான எதிர்பார்ப்புகள் இருக்கிறது. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துவருகிறார். இப்படத்திற்கு தமிழ் இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இசையமைத்துவரும் நிலையில், 2027ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Follow Us