Rajinikanth: 2001ல் அரசியலுக்கு வந்திருந்தால் 100% ஜெயிச்சிருப்பேன் – அரசியல் குறித்து பேசிய ரஜினிகாந்த்
Thalaivar Rajinikanth on 2001 Politics: கோலிவுட் மக்கள் மத்தியில் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் ரஜினிகாந்த். இவர் முன்னதாக அரசியலுக்குவருவதாக கூறி, பின் அரசியல் வரவில்லை என கூறியிருந்தார். இந்நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியிருந்த ரஜினிகாந்த், 2001ம் ஆண்டில் அரசியலுக்கு வந்தால் ஜெயிச்சிருப்பேன் என என கூறியுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்துவருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth). இவர் சினிமாவில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து ஹிட் படங்களை கொடுத்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக கூலி (Coolie) படமானது வெளியாகியிருந்த நிலையில், கிட்டத்தட்ட ரூ 400 கோடிகளுக்கு மேல் வசூலித்து ஹிட் கொடுத்தது. இதை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கியிருந்தார். இப்படத்தை அடுத்ததாக நெல்சன் திலீப்குமாரின் (Nelson Dilipkumar) இயக்கத்தில், ஜெயிலர் 2 (Jailer 2) படத்தில் ரஜினிகாந்த் இணைந்திருந்தார். இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முழுமையாக் நிறைவடைந்திருந்தது. இதையடுத்து தனது 173வது திரைப்படத்திற்காக ரஜினிகாந்த் தயாராகிவருகிறார். அந்த வகையில் இன்று 2026 மே 17ம் தேதியில்,போயஸ் கார்ட்டனில் உள்ள தனது இல்லத்தின் முன்பு பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார்.
அந்த சந்திப்பின்போது பேசிய ரஜினிகாந்த், தனது அரசியல் பயணம் மாற்றம் மற்றும் தமிழக முதல்வர் விஜய் (CM Vijay) பற்றி, அவரின் வெற்றியை பற்றி விவரமாக பேசியிருந்தார். மேலும் அதில், 2001ம் ஆண்டில், அரசியலுக்கு வந்திருந்தாள் வெற்றிருப்பேன் என்றும் பேசியுள்ளார். இது குறித்து விவரமாக பார்க்கலாம்.
இதையும் படிங்க: விஜய் சார் எனது நெருங்கிய நண்பர்.. நடிகை மாளவிகா மோகனன் பேச்சு!




அரசியலில் இறங்கியிருந்தால் வெற்றிபெற்றிருப்பது பற்றி ரஜினிகாந்த் பேசிய விஷயம்:
நடிகர் ரஜினிகாந்த், இன்று 2026 மே 17ம் தேதியில் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்திருந்தார். இந்த சந்திப்பில் முதல்வர் விஜக்கு வாழ்த்து தெரிவித்தும், தனது அரசியல் பயணம் மாற்றம், என அரசியல் வரவில்லை என்பது குறித்தும் பேசியிருந்தார். அப்போது, அவர் முன்பு கலைஞர் வெற்றி பெற்றிருக்கும்போது, “அவர் (கலைஞர்) அழைத்ததன் காரணமாகதான் அவரை நேரில் சந்தித்து வாழ்த்தினேன்” என்றும் கூறினார். இதையடுத்து செய்தியாளர் ஒருவர், ரஜினியிடம், “நீங்கள் 2001ம் ஆண்டில் அரசியலில் வந்திருந்தாள் வெற்றி பெற்றிருப்பீர்களா?” என கேள்வியை கேட்டிருந்தார்.
இதையும் படிங்க: திரைத்துறை மேம்பாடு.. முதலமைச்சர் விஜய்க்கு 6 கோரிக்கை வைத்த கமல்ஹாசன் – வைரலாகும் பதிவு!
அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், “அந்த தேர்தலில் நான் இறங்கியிருந்தகால் 100 சதவீதம் வெற்றிபெற்றிருப்பேன், அதில் எந்த டவுட்டு கிடையாது” என கூறினார். மேலும் செய்தியாளர் ஒருவர், “நீங்கள் அந்த வாய்ப்பை மிஸ் செய்துவிட்டேன் என நினைக்கிறீர்களா?” என கேள்வி கேட்டிருந்தார். அதற்கு உடனே ரஜினிகாந்த், “அடுத்த கேள்வி” என அந்த கேள்வியை தவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்கள் சந்திப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியது தொடர்பான பதிவு:
இந்த சந்திப்பில் ரஜினிகாந்த், பல்வேறு விஷயங்கள் மற்றும் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். இவரின் நடிப்பில் தற்போது இந்த 2026ம் ஆண்டில் வெளியாக தயாராகியுள்ள படம்தான் ஜெயிலர் 2. இதில் ரஜினிகாந்துடன் பல்வேறு நட்சத்திர நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.