AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க அரசு வழங்கும் இலவச கோர்ஸ்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

Cyber Security Course | இந்தியாவில் சைபர் குற்றங்கள் மற்றும் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், அவற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் சைபர் பாதுகாப்பு என்ற கோர்ஸை மத்திய அரசு வழங்கி வருகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க அரசு வழங்கும் இலவச கோர்ஸ்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 26 May 2026 21:06 PM IST

இந்தியாவை டிஜிட்டல் இந்தியாவாக (Digital India) மாற்ற வேண்டும் என்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வரும் சூழலில், சைபர் மோசடிகள் மற்றும் குற்ற சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், சைபர் குற்றங்களில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் அரசு, இலவச சைபர் பாதுகாப்பு கோர்ஸ் (Cyber Security Course) வழங்குகிறது. வெறும் 2.30 மணி நேரத்திற்குள்ளாகவே இந்த கோர்ஸை முடித்துவிட முடியும். இந்த நிலையில், சைபர் பாதுகாப்புக்காக அரசு வழங்கும் இந்த கோர்ஸ் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆன்லைன் மோசடியில் பாதிக்கப்படும் பொதுமக்கள்

ஆண்டுதோறும் இந்தியா, ஏராளமான சைபர் குற்றங்களை எதிர்க்கொள்ளும் வகையில் உள்துறை அமைச்சகம், இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (Indian Cyber Crime Coordination Center) மூலம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.  இந்த அம்சம், டிஜிட்டல் தளங்களை பயன்படுத்தி எவ்வாறு மோசடிகள் மற்றும் குற்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன என்பதை பொதுமக்களுக்கு விளக்கும் விதமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : பணப்பரிவர்த்தனை முதல் ஷாப்பிங் வரை – அனைத்து வேலைகளையும் செய்யும் ஏஐ

அதிகரிக்கும் மோசடிகள் – பொதுமக்களை பாதுகாக்க புதிய முயற்சி

இது குறித்து எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது, இந்த கோர்சில் பங்கேற்கும் நபர்களுக்கு அதற்கான சான்றிதழ் வழங்கப்படும். போலி அழைப்புகள், போலி லிங்குகள், மோசடி குறுஞ்செய்திகள் ஆகியவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் தான், பொதுவான சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்துக்கொள்ளும் வகையில் இந்த கோர்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : கடும் வெயிலில் காரில் வைக்கக்கூடாத 5 பொருட்கள் – பெரும் விபத்தை ஏற்படுத்தலாம் – நிபுணர்கள் எச்சரிக்கை

இந்த கோர்சில் ஆன்லைனில் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பது எப்படி, போலியான லிங்குகள் மற்றும் போன் கால்களை கண்டறிவது எப்படி, சந்தேகத்திற்குரிய குறுஞ்செய்திகளை கண்டறிவது எப்படி, பாதுகாப்பாக ஆன்லைன் தளங்களை பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து கற்பிக்கப்படுகிறது. இந்த கோர்ஸ் கல்லூரி மாணவர்கள், பணி செய்யும் நபர்கள், அரசு ஊழியர்கள், மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு கிடைக்கிறது. டிஜிட்டல் தளங்களை பாதுகாக்கவும், மோசடி மற்றும் குற்ற சம்பவங்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ளவும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us