AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கூகுளில் ஏஐ பதில்களால் குழப்பமா? அதனை எப்படி நிறுத்துவது?

Google AI Search : கூகுள் புதிய ஏஐ அடிப்படையிலான சர்ச் பாக்ஸ் என தொடர்ந்து மாற்றங்களை அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. ஏஐ அடிப்படையிலான பதில்கள் பயனர்களை குழப்புவதாக அமைந்து வருகின்றன. அதனை எப்படி தவிர்ப்பது என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

கூகுளில் ஏஐ பதில்களால் குழப்பமா? அதனை எப்படி நிறுத்துவது?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 24 May 2026 19:28 PM IST

உலகின் மிகப்பெரிய சர்ச் இன்ஜின் நிறுவனமான கூகுள், கடந்த சில ஆண்டுகளாக தனது சர்ச் பக்கத்தில் செயற்கை நுண்ணறிவு அம்சங்களை அதிக அளவில் அறிமுகப்படுத்தி வருகிறது. . முதலில் ஏஐ ஓவர் வியூஸ் என்ற அம்சத்தை அறிமுகப்படுத்திய கூகுள், அதனைத் தொடர்ந்து ஏஐ மோட், தற்போது புதிய ஏஐ அடிப்படையிலான சர்ச் பாக்ஸ் என தொடர்ந்து மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த மாற்றங்களை கூகுள் நிறுவனம், கடந்த 20 ஆண்டுகளில் சர்ச் இன்ஜின் பகுதியில் நடந்த மிகப்பெரிய மாற்றம் என்று தெரிவித்தாலும், எல்லா பயனர்களும் இதை விரும்பவில்லை. குறிப்பாக பலர், ஏஐ உருவாக்கும் தவறான அல்லது குழப்பமான பதில்கள் சர்ச் அனுபவத்தை பாதிக்கின்றன என்று பலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஆனால், தற்போது கூகுள் சர்ச் பகுதியில் உள்ள ஏஐ அம்சங்களை முழுமையாக ஆஃப் செய்யும் வசதியை பயனர்களுக்கு வழங்கவில்லை. மேலும், ஏஐ ஓவர்வியூஸ் என்பது கூகுள் சர்ச்சின் முக்கிய அம்சம் என்பதால் அதனை தவிர்க்க முடியாது என்று கூகுள் தெரிவித்துள்ளது. இருப்பினும், சில எளிய வழிகள் மூலம் ஏஐ முடிவுகளை குறைக்க முடியும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிக்க : வாட்ஸ்அப்பில் ஆன்லைனில் இருப்பவர்களை தெரிந்துகொள்ள புதிய வசதி – பிரைவசி பாதிக்குமா?

ஏஐ பதில்களை எப்படி தவிர்ப்பது?

ஏஐ ஓவர்வியூஸை தவிர்க்க மிகவும் எளிய வழிகளில் ஒன்று சர்ச் பகுதியில் நாம் ஏதேனும் தேடும்போது அதனுடன் AI என்பதையும் சேர்க்க வேண்டும். உதாரணமாக பெஸ்ட் கேமிங் லேப்டாப் குறித்த தகவல்களை பெற வேண்டும் கூகுள் சர்ச் பாரில் Best Gaming Laptop 2026 – AI என சேர்க்கலாம். அதே போல How to bake Pizza என்று தேடினால் ஏஐ பதில்கள் குறைவாக கிடைக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது கூகுள் சர்ச் ஆபரேட்டர்ஸ் முறையில் செயல்படுகிறது. ஏற்கனவே site: மற்றும் filetype: என சர்ச் ஆபரேட்டர்ஸ் பயன்படுத்தப்படுவது போல, -AI பயன்படுத்தும்போது ஏஐ தொடர்பான முடிவுகளை தவிர்க்கலாம் என கூறப்படுகிறது. இந்த முறையால் எல்லா நேரங்களிலும் பலனளிக்காது என்றாலும் ஏஐ ஓவர் வியூஸ் அளவு கணிசமாக குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

பயனர்களுக்கு கூகுள் வழங்கும் வப் ஃபில்டர் வசதியை பயன்படுத்தும்போது ஏஐ ஓவர் வியூஸ், ஷாப்பிங் விட்ஜெட், ஏஐயால் கிடைக்கும் தகவல்கள் போன்ற அம்சங்கள் மறைந்து பழயை கூகுள் சர்ச் போல லிங்க் அடிப்படையிலான பதில்கள் கிடைக்கும். இதற்கு கூகுள் சென்று Search Bar அருகே More என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் Web என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும். இந்த முறையில் பழைய பாணியிலான சர்ச் அனுபவம் கிடைக்கும்.

இதையும் படிக்க : ஸ்மார்ட்போனில் விரைவில் ஸ்டோரேஜ் Full ஆக என்ன காரணம்?.. இவை தான்!

கூகுளில் ஏஐ பிரச்னைகளால் அவதிக்குள்ளாகும் நபர்கள், Duck Duck Go அல்லது பிரேவ் சாஃப்ட்வேர் சர்ச் ஆகியவற்றை பயன்படுத்தலாம். குறிப்பாக டக்டக்கோவில் சர்ச் அசிஸ்ட் என்ற ஏஐ வசதி இருந்தாலும், அதை ஆஃப் செய்து பயன்படுத்த முடியும். அதோ போல பிரேவ் சஃப்ட்வேர் சர்ச்சில், ஆன்ஸர் வித் ஏஐ என்ற வசதி இருந்தாலும், அதை செட்டிங்ஸ் எளிதாக நீக்க முடியும்.
வேறு Search Engine பயன்படுத்தலாமா?

Follow Us