25 ஆண்டுகளுக்கு பிறகு கூகுளில் வந்த புதிய மாற்றம்.. இனி தேடுதல் முன்பை போல இருக்காது!
Google Made New Change In 25 Years | பொதுமக்கள் மத்தியில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய தேடுபொறியாக கூகுள் இருந்து வந்தது. ஆனால், செயற்கை நுண்ணறிவு சாட்பாட்களின் வருகையால் கூகுள் பயன்பாடு குறைந்துள்ள நிலையில், அதில் முக்கிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கூகுள் (Google) என்பது மனிதர்களின் வாழ்வில் மிகப்பெரிய அங்கமாக உள்ளது. ஒரு நாளைக்கு குறைந்தது ஒருமுறையாவது கூகுள் தேடுபொறியை பயன்படுத்தாத நபர்கள் இருப்பது கடினமான ஒன்று. அந்த அளவுக்கு மனிதர்களின் வாழ்வில் கலந்த ஒரு அம்சமாக கூகுள் இருந்து வருகிறது. ஓபன் ஏஐ, சாட்ஜிபிடி உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) சாட்பாட்களின் வருகையால் கூகுள் சற்று பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த நிலையில் தான், 25 ஆண்டுகளில் இல்லாத புதிய மாற்றத்தை கூகுள் மேற்கொண்டுள்ளது. இனி முன்பு இருந்ததை போல கூகுள் செயல்படாது. தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப கூகுள் செயல்பட உள்ளது. இந்த நிலையில், கூகுள் தேடுபொறியில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
25 ஆண்டுகளுக்கு பிறகு கூகுளில் வந்த புதிய மாற்றம்
கூகுள் தேடுபொறி மனிதர்களின் வாழ்வில் மிகவும் முக்கிய அங்கம் வகிக்கும் அம்சமாக இருந்து வந்தது. ஏதேனும் ஒரு விஷயம் குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டும் அல்லது தகவல்களை உறுதி செய்ய வேண்டும் என்றால் பலரும் கூகுளை தான் தேடி செல்வார்கள். அந்த அளவுக்கு விரைவாக தகவல்களை வழங்கும் ஒரு அம்சமாக கூகுள் இருந்து வந்தது. ஆனால், காலப்போக்கில் கூகுளின் பயன்பாடு மக்கள் மத்தியில் குறைய ஆரம்பித்தது. காரணம், செயற்கை நுண்ணறிவு அம்சங்களின் வருகை தான். சாட்ஜிபிடி, ஜெமினி, ஓபன் ஏஐ உள்ளிட்ட நிறுவனங்களின் தங்களின் செயற்கை நுண்ணறிவு சாட்பாட்களை அறிமுகம் செய்துள்ள நிலையில், பெரும்பாலானவர்கள் அவற்றை தான் பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக பொதுமக்கள் மத்தியில் கூகுள் பயன்பாடு குறைந்துள்ளது.
இதையும் படிங்க : அட்டகாசமான அம்சங்கள்.. விரைவில் அறிமுகமாக உள்ள ரியல்மி 16டி ஸ்மார்ட்போன்.. முழு விவரம் இதோ!




ஏஐ சாட்பாட்களை போலவே செயல்படும் கூகுள்
முன்னதாக கூகுள் ஏதேனும் ஒரு விஷயம் குறித்து தேடினால் நீல நிறத்தில் லிங்குகள் தோன்றும். அதில் ஏதேனும் ஒரு லிங்கை கிளிக் செய்து அதில் இருக்கும் விவரங்களை படித்து தெரிந்துக்கொள்ளலாம். இதன் அடிப்படையில் தான் இத்தனை ஆண்டுகளாக கூகுள் இயங்கி வந்தது. இந்த நிலையில் தான், கூகுள் செயல்திறனில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது செயற்கை நுண்ணறிவு சாட்பாட்களில் வருவதை போல குறுகிய விடைகள் மற்றும் முடிவுகள் இனி கூகுளில் தோன்றும் வகையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனி கூகுள் ஒரு தேடுபொறியை போல செயல்படாது என்றும், அது ஏஐ சாட்பாட்களை போல செயல்படும் என்றும் குறிப்பாக பர்சனல் அசிஸ்டண்ட் போல இயங்கும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.