AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இனி வாட்ஸ்அப் மூலம் பிறப்புச் சான்றிதழ் பெறலாம் – எப்படி தெரியுமா?

Birth Certificate on WhatsApp : பிறப்பு சான்றிதழ் என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாகும். வாட்ஸ்அப் மூலம் பிறப்புச் சான்றிதழ் வழங்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி நடைமுறைப்படுத்துகிறது. பெற்றோரின் மொபைல் போனுக்கு பிடிஎஃப் வடிவில் தானாகவே பிறப்பு சான்றிதழ் தரப்படும். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இனி வாட்ஸ்அப் மூலம் பிறப்புச் சான்றிதழ் பெறலாம் – எப்படி தெரியுமா?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 18 May 2026 20:00 PM IST

சென்னை, மே 18 : பிறப்பு சான்றிதழ் என்பது ஒருவருக்கு மிக முக்கியமான ஆவணமாகும். குறிப்பாக ஒருவரின் குடியுரிமையை பிறப்பு சான்றிதழ் மூலமாகவே நிரூபிக்க முடியும் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. ஒரு குழந்தை பிறந்த பின் மருத்துவமனைகளின் வாயிலாக பிறப்பு சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். பின்னர் அந்த குழந்தைக்கு பெயர் வைத்ததும் பிறப்பு இறப்பு பதிவாளர் அலுவலகம் மூலம் பெயர் சேர்த்து பெற்றுக்கொள்ளலாம். குழந்தை பிறந்து 12 மாதத்திற்குள் கட்டணமின்றி பெயரை பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வாட்ஸ்அப் மூலம் பிறப்பு சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் மூலம் பிறப்புச் சான்றிதழ்

இந்த நிலையில் வாட்ஸ்அப் மூலம் பிறப்புச் சான்றிதழ் வழங்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி நடைமுறைப்படுத்துகிறது. பெற்றோரின் மொபைல் போனுக்கு பிடிஎஃப் வடிவில் தானாகவே பிறப்பு சான்றிதழ் தரப்படும். மேலும், 94450 61913 என்ற எண்ணுக்கு பெற்றோர் தகவல் அனுப்பி பிறப்புச் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதையும் படிக்க : கிளாண்டர்ஸ் நோய்த்தொற்று.. தமிழகம் முழுவதும் குதிரை சவாரிக்கு கட்டுப்பாடு..

ஒரு குழந்தை பிறந்து 12 மாதங்களுக்குள் குழந்தையின் பெயரை கட்டணமின்றி பிறப்பு இறப்பு பதிவாளரிடம் பதிவு செய்துகொள்ளலாம். 12 மாதங்களுக்கு பின்னர் குழந்தையின் பெயரை 15 ஆண்டுகள் வரை ரூ.200 கட்டணம செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். இதுவரை பிறப்பு இறப்பு பதிவர் மூலமாகவோ அல்லது மாநகராட்சியின் இணையதளம் மூலமாகவோ பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இந்த நிலையில் தான் தற்போது சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதன் படி பிறப்பு சான்றிதழை பெற்றோரின் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பும் வகையில் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் மூலம் கிடைக்காத பட்சத்தில் 9445061913 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் நம் விவரங்களை அனுப்பி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஓரிரு தினங்களில் இது அமலாக உள்ளது.

குழந்தை பிறந்ததும் அதன் பெயர், பிறந்த வரும் தேதி, பாலினம் போன்ற அனைத்து விவரங்களும் அடங்கிய பிறப்பு சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழ் தான் குழந்தையின் விவரங்களுக்கு சட்டப்பூர்வமான ஆதாரம் என்பதால் பிறப்பு சான்றிதழ் பெறுவது மிக முக்கியம். ஆனால் பிறந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வாங்கும்போது அதில் பெரும்பாலும் பெயர் இடம்பெற்றிருக்காது. பின்னர் பெயர் வைத்ததும் பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்ப்பது அவசியம்.

இதையும் படிக்க  : 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது?.. தமிழக அரசு அறிவிப்பு!!

பெயர் சேர்க்கவில்லை என்றால் பின்னாளில் சிக்கலை சந்திக்க நேரிடும். இந்திய பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம் 1969ன் படி குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பதிவாளர் அலுவலகத்தில் தகவல் தெரிவிப்பது கட்டாயம். அப்படி பிறந்த சில நாட்களுக்குள் பதிவு செய்தால் எந்தவித கட்டணமும் இன்றி பிறப்பு சான்றிதழை பெறலாம். இது குழந்தையின் அடிப்படை உரிமைகளை பெற மிக முக்கியமான ஆவணமாகும்.

Follow Us