10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது?.. தமிழக அரசு அறிவிப்பு!!
விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, மதிப்பெண்களைக் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகளும் அண்மையில் முழுமையாக நிறைவடைந்தன. ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டிருந்த கல்வி ஆண்டு அட்டவணையின்படி, மே 20-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போதைய சூழலில், எவ்வித மாற்றமும் இன்றி திட்டமிட்ட தேதியிலேயே முடிவுகள் வெளியாக உள்ளது.
தமிழகப் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட பத்தாம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வரும் மே 20-ஆம் தேதி (புதன்கிழமை) வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் குறித்து முதல்வர் விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். மாணவர்களின் மதிப்பெண் பட்டியலைத் தயார் செய்வது மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி ஆகிய நடைமுறைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதையும் படிக்க: தமிழகத்தில் ஜூன் 1- இல் பள்ளிகள் திறப்பு… அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!
அண்மையில்தான் தமிழகப் பள்ளிக் கல்வித்துறையின் புதிய அமைச்சராக ராஜ்மோகன் பொறுப்பேற்றிருந்தார். அமைச்சர் பொறுப்பை ஏற்ற பிறகு, அவர் தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் நேரில் சந்தித்து இந்த முக்கிய ஆலோசனையில் பங்கேற்றுள்ளார். இவர்களுடன் பள்ளிக் கல்வித்துறையின் முக்கிய உயர் அதிகாரிகளும் உடனிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளை மறுநாள் தேர்வு முடிவுகள் வெளியீடு:
இதில் திட்டமிட்டபடி, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிட முடிவ செய்யப்பட்டது. தொடர்ந்து, இதற்கான இறுதிக்கட்டப் பணிகளில் அரசுத் தேர்வுத்துறை அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 11-ந் தேதி தொடங்கி, ஏப்ரல் மாதம் 6-ந் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 9 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதியுள்ளனர். தேர்வுகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, விடைத்தாள்கள் திருத்தும் பணி மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு சிறப்பு மையங்களில் தீவிரமாக நடைபெற்றது.
திட்டமிட்ட தேதியிலேயே முடிவுகள்:
தொடர்ந்து, விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, மதிப்பெண்களைக் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகளும் அண்மையில் முழுமையாக நிறைவடைந்தன. ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டிருந்த கல்வி ஆண்டு அட்டவணையின்படி, மே 20-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போதைய சூழலில், எவ்வித மாற்றமும் இன்றி திட்டமிட்ட தேதியிலேயே முடிவுகள் வெளியாகும் என அமைச்சர் ராஜ்மோகன் உறுதிப்படுத்தியுள்ளார்.
தேர்வு முடிவுகளைப் பார்ப்பது எப்படி?
மே 20-ஆம் தேதி காலை 9.00 மணியளவில் தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக இணையதளங்களில் வெளியிடப்படும். மாணவர்கள் தங்களது பதிவு எண் (Registration Number) மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்களது தற்காலிக மதிப்பெண் பட்டியலைத் தெரிந்துகொள்ளலாம். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் முடிவுகள் வெளியாகும்.
மேலும், மாணவர்கள் பள்ளிகளில் சமர்ப்பித்திருந்த கைபேசி எண்களுக்கும் குறுஞ்செய்தி (SMS) வழியாகத் தேர்வு முடிவுகள் நேரடியாக அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: தவெக அரசின் உண்மை முகத்தை மக்கள் உணர தொடங்கிவிட்டனர்… எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி!