AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்தியாவில் 500 மில்லியன் டாலர் முதலீடு செய்யும் ஆஸ்திரேலிய நிறுவனம் – பிரதமர் மோடி வரவேற்பு

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆஸ்திரேலியா சூப்பர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பால் ஷ்ரோடர் இந்தியாவில் 500 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் முதலீடு செய்வதாக அறிவித்ததை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, இந்த முதலீடு இந்தியாவின் வளர்ச்சி மற்றும் சீர்திருத்தப் பயணத்தின் மீது உலக முதலீட்டாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 500 மில்லியன் டாலர் முதலீடு செய்யும் ஆஸ்திரேலிய நிறுவனம் – பிரதமர் மோடி வரவேற்பு
பிரதமர் மோடி
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 09 Jul 2026 10:22 AM IST

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆஸ்திரேலியா சூப்பர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பால் ஷ்ரோடர் இந்தியாவில் 500 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் முதலீடு செய்வதாக அறிவித்ததை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, இந்த முதலீடு இந்தியாவின் வளர்ச்சி மற்றும் சீர்திருத்தப் பயணத்தின் மீது உலக முதலீட்டாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

மெல்போர்னில் ஜூலை 9, 2026 காலை ‘ஆஸ்திரேலியன் சூப்பர்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பால் ஷ்ரோடர் அறிவித்த 500 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் முதலீட்டை இந்தியா வரவேற்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் சீர்திருத்தப் பாதையின் மீது உலக அளவில் நிலவும் நம்பிக்கைக்கு இது மற்றொரு சான்றாகும். நமது துடிப்பான பொருளாதாரம் உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு வழங்கும் அபரிமிதமான வாய்ப்புகளையும் இது பிரதிபலிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் 500 மில்லியன் டாலர் முதலீடு

இந்தியாவின் தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதியில் தனது முதலீட்டை கூடுதலாக 500 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் வரை அதிகரிக்க ஆஸ்திரேலியன் சூப்பர்’ முடிவு செய்துள்ளது. இதன் மூலம், இந்தியாவில் பல்வேறு சொத்துக்களில் அந்நிறுவனம் செய்துள்ள மொத்த முதலீடு 3.3 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களாக உயர்கிறது.

பிரதமர் மோடியின் பதிவு

2019- ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட 240 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் ஆரம்ப முதலீட்டைத் தொடர்ந்து இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘ஆஸ்திரேலியன் சூப்பர்’ உறுப்பினர்களுக்கு மிக அதிக வருவாயை ஈட்டித் தந்த சிறந்த ‘உள்கட்டமைப்பு’ முதலீடுகளில் இதுவும் ஒன்று என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் துறைகளுக்கு மூலதனத்தை ஈர்க்கும் நோக்கில் 2015-ஆம் ஆண்டில் NIIF நிறுவப்பட்டது. இந்த முதலீடு குறித்த அறிவிப்பு குறித்து விவாதிக்க, ‘ஆஸ்திரேலியன் சூப்பர்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பால் ஷ்ரோடர் இன்று நடைபெறவுள்ள ஆஸ்திரேலியா-இந்தியா வருடாந்திரத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.

இந்த முயற்சி தங்களின் மிகவும் வெற்றிகரமான கூட்டாண்மைகளில் ஒன்று என்று ‘ஆஸ்திரேலியன் சூப்பர்’ நிறுவனத்தின் தலைமை முதலீட்டு அதிகாரி சீன் மானுவல் தெரிவித்துள்ளார். அதனால்தான் தங்கள் உறுப்பினர்களுக்கு இன்னும் சிறந்த வருவாயை உறுதி செய்யும் வகையில் மீண்டும் முதலீடு செய்வதில் தாங்கள் உற்சாகமாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Follow Us