BREAKING: தமிழகத்தில் ஜூன் 1- இல் பள்ளிகள் திறப்பு… அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!
Tamil Nadu Schools Reopen: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வருகிற ஜூன் 1- ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட முழு அறிவிப்பை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தமிழகத்தில் 1-ஆம் வகுப்பு முதல் 9- ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் முழு ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்வுகள் அனைத்தும் ஏப்ரல் 17- ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், கோடை விடுமுறை விடப்பட்டது. இதில், சுமார் 45 நாட்கள் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற காரணத்தால் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு நடத்தப்பட்டு கோடை விடுமுறை முன்னதாகவே அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கோடை விடுமுறை முடிய உள்ள நிலையில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக முதல்வர் விஜய்யுடன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆலோசனை மேற்கொண்டிருந்தார். இதைத் தொடர்ந்து, பள்ளிக் கல்வித் துறை உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழகத்தில் ஜூன் 1- இல் பள்ளிகள் திறப்பு
இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி குறித்த அறிவிப்பை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வருகிற ஜூன் 1- ஆம் தேதி ( திங்கள்கிழமை) மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதில், 1- ஆம் வகுப்பு முதல் 3- ஆம் வகுப்பு வரை பாடப் புத்தகங்கள் மாற்றப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 1- ஆம் வகுப்பு முதல் 3- ஆம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் ஆசிரிய, ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டம் தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
மேலும் படிக்க: தவெக அரசின் உண்மை முகத்தை மக்கள் உணர தொடங்கிவிட்டனர்… எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி!




1 முதல் 3 வரை ஜூன் 4- இல் வகுப்புகள் தொடங்கும்
இதனால், 1- ஆம் வகுப்பு முதல் 3- ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஜூன் 4- ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்க உள்ளன. மற்ற வகுப்புகளுக்கு ஜூன் 1-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கி நடைபெற உள்ளது. மேலும், 10- ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகிற மே 20- ஆம் தேதி ( புதன்கிழமை) காலை வெளியிடப்பட உள்ளது. இந்தியா பாகிஸ்தான் பிரச்சனையை விட 10- ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியவர்களுக்கு மிகவும் பரபரப்பாக இருக்கும்.
பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தல்
அப்படி இருந்தும் இந்த தேர்வில் பங்கேற்ற மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 20- ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது என்று தெரிவித்தார். பள்ளிகள் திறப்பையொட்டி, அனைத்து பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அத்துடன், பள்ளியில் வகுப்பறை, சமயலறை, கழிப்பறை, தலைமை ஆசிரியர் அறை, மேஜை, நாற்காலிகள், மாணவர்கள் அமரும் இருக்கைகள் உள்ளிட்டவற்றை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: அவங்களா கிளப்பி விடுறாங்க… முதல்வர் பதவி விவகாரத்தில் திருமாவளவன் கொடுத்த அதிரடி விளக்கம்!