அட்டகாசமான அம்சங்கள்.. விரைவில் அறிமுகமாக உள்ள ரியல்மி 16டி ஸ்மார்ட்போன்.. முழு விவரம் இதோ!
Realme 16T Smartphone | ரியல்மி நிறுவனம் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது தனது புதிய மாடல் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது ரியல்மி 16டி ஸ்மார்ட்போனை அந்த நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.
இந்தியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள ஸ்மார்ட்போன் நிறுவனம் தான் ரியல்மி (Realme). இந்த நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது 8000 எம்ஏஎச் பேட்டரி அம்சத்துடன் கூடிய புதிய 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிலையில், அது என்ன ஸ்மார்ட்போன், அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் அறிமுகமாகும் ரியல்மி 16டி ஸ்மார்ட்போன்
ரியல்மி நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், மே 22, 2026 அன்று இந்தியாவில் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட தயாராக உள்ள நிலையில், அதில் என்ன என்ன சிறப்பு அம்சங்கள் இடம்பெறும் என்பது குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க : mAadhaar செயலி நிறுத்தம்? புதிய ஆதார் செயலியை மட்டும் பயன்படுத்த அறிவுறுத்தல்
ரியல்மி 16டி – சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த சிப்செட் அம்சம் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறனை கொண்டுள்ளதன் காரணமாக இது சிறப்பாக செயலாற்றும் என கூறப்பட்டுள்ளது. கூடுதல் சிறப்பாக இந்த அம்சத்தின் மூலம் எந்த வித தடைகளும், சிக்கல்களும் இன்றி இந்த ஸ்மார்ட்போன் மூலம் கேம் விளையாட முடியும்.
இதையும் படிங்க : அதிகரிக்கும் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிகள் – வந்தாச்சு சிபிஐயின் அபய் ஏஐ
இந்த ஸ்மார்ட்போனில் 6.8 இன்ச் பிளாட் எல்சிடி டிஸ்பிளே கொடுக்கப்பட்டு இருக்கும் என்றும், இதன் டிஸ்பிளே 144 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் கொண்டு இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பெரிய டிஸ்பிளே உடன் அறிமுகமாகும் என கூறப்பட்டுள்ள நிலையில், அது பயன்படுத்த மிகவும் எளிதானதாக இருக்கும் என கூறப்படுகிறது. 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி அம்சத்துடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பல்வேறு அட்டகாசமான அம்சங்கள் உடன் கூடிய இந்த ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாக உள்ளது.