குழந்தை பிறப்பு விகிதம் சரிவை சந்திக்க முக்கிய காரணியாக உள்ள ஸ்மார்ட்போன்.. ஆய்வு கூறும் அதிர்ச்சி தகவல்!
Reason Behind Birth Rate Falling Globally | உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகள் குழந்தை பிறப்பு விகிதத்தில் சரிவை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில், குழந்தை பிறப்பு விகிதம் கடும் சரிவை சந்திக்க ஸ்மார்ட்போன்கள் முக்கிய காரணியாக உள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.
மக்கள் தொகையில் முதன்மை வகிக்கும் நாடாக இருந்து வந்த இந்தியா (India), தற்போது மக்கள் தொகையில் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. 30 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்தியாவில் ஒரு பெண்ணுக்கு 3.4 குழந்தைகள் என்ற சாத்தியக்கூறு இருந்தது. ஆனால், தற்போது நிலமை தலைகீழாக உள்ளது. அதாவது, தற்போதைய நிலவரப்படி ஒரு பெண்ணுக்கு 2.0 என்ற அளவில் குழந்தை பிறப்பு விகிதம் சரிவை சந்தித்துள்ளது. இதற்கு பல்வேறு காரணிகள் உள்ளதாக ஆய்வுகள் கூறும் நிலையில், சமீபத்திய ஆய்வுகள் சில அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளன. அதாவது, தற்போதைய குழந்தை பிறப்பு விகிதம் சரிவுக்கு ஸ்மார்ட்போன்கள் (Smartphone) தான் முக்கிய காரணம் என கூறப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
குழந்தை பிறப்பு விகிதத்தில் சரிவை சந்திக்கும் இந்தியா
இந்தியா மட்டுமனறி பல்வேறு உலக நாடுகளும் தொடர் பிறப்பு விகித சரிவை சந்தித்து வருகிறது. குறிப்பாக சில நாடுகளில் ஒரு பெண்ணின் பிறப்பு விகிதம் ஒன்றாக உள்ளது. சில பகுதிகளில் ஒரு பெண்ணுக்கான குழந்தை பிறப்பு விகிதம் 0 சதவீதமாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாலவே உலக நாடுகள் இந்த பிறப்பு விகித சரிவை சந்தித்து வருகின்றன. இதற்கு விலைவாசி உயர்வு, கால தாமதமான திருமணங்கள், வேலை பளு உள்ளிட்டவை முக்கிய காரணிகளாக கூறப்பட்டு வந்தன. இந்த நிலையில் தான், முற்றிலும் வேறுப்பட்ட காரணத்தை சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
இதையும் படிங்க : அதிகரிக்கும் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிகள் – வந்தாச்சு சிபிஐயின் அபய் ஏஐ
ஸ்மார்ட்போன்களால் சரிவை சந்திக்கும் குழந்தை பிறக்கும் விகிதம்
உறவுகளில் ஸ்மார்ட்போன் பயன்பாடு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்கள் எப்போது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற முடிவிலும் அது தாக்கத்தை ஏற்படுத்துகிறது என சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. சின்சினாட்டி பல்கலைக்கழகத்தில் இருந்து நாதன் ஹட்சன் மற்றும் மாஸ்கசோ போயிடோ ஆகியோர் மேற்கொண்ட எஃப்டி ஆய்வு முடிவுகளின் படி, லண்டன் மற்றும் அமெரிக்காவில் 4ஜி இணைய வசதி உள்ள பகுதிகள் குழந்தை பிறப்பு விகிதத்தில் சரிவை சந்தித்துள்ள என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : இனி 15ஜிபி இலவச ஸ்டோரேஜ் கிடையாது… கூகுள் அதிரடி நடவடிக்கை – காரணம் என்ன?
அதிலும் குறிப்பாக அதிக வேகத்துடன் இணைய வசதி கிடைக்கும் பகுதிகளில் குழந்தை பிறப்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



