AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

உங்கள் ஸ்மார்ட்போன் போலியானதா? கண்டுபிடிக்க எளிய 5 டிப்ஸ்!

Fake Smartphone Check : பிரபல நிறுவனங்களின் ஒரிஜினல் ஸ்மார்ட்போன்களைப் போலவே தோற்றமளிக்கும் போலியான போன்களும் தற்போது அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக ஆங்காங்கே சில போன்கள் வெடிப்பது போன்ற பிரச்னைகளும் ஏற்படுகின்றன. இந்த நிலையில் போன்கள் போலியானதா என எப்படி கண்டுபிடிப்பது என பார்க்கலாம்.

உங்கள் ஸ்மார்ட்போன் போலியானதா? கண்டுபிடிக்க எளிய 5 டிப்ஸ்!
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 15 May 2026 15:28 PM IST

இப்போது மார்கெட்டில் போலி ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் நாம் ஆர்டர் செய்து வாங்கும் ஸ்மார்ட்போன்கள் போலியானது என சமூக வலைதளங்களில் பதிவுகளை அடிக்கடி பார்க்க முடிகிறது. சமீப காலமாக இது மிகப்பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. சந்தையில் மிக பிரபலமாக இருக்கும் ஸ்மார்ட்போன்களை போன்று போலியான ஸ்மார்ட்போன்களும் சந்தைகளில் கிடைக்கின்றன. விலை குறைவாகவும் அதிரடி ஆஃபர்களுடன் கிடைக்கும் நிலையில் அதனை வாங்கி மக்கள் ஏமாறும் நிலை தொடர்கிறது. இந்த நிலையில் நாம் வாங்கும் மொபைல் உண்மையானதா அல்லது போலியானதா என்பதை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமாகியுள்ளது.

பிரபல நிறுவனங்களின் ஒரிஜினல் ஸ்மார்ட்போன்களைப் போலவே தோற்றமளிக்கும் போலியான போன்களும் தற்போது அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக ஆங்காங்கே சில போன்கள் வெடிப்பது போன்ற பிரச்னைகளும் ஏற்படுகின்றன. பலருக்கும் போனில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டு பழுதான பிறகே பலருக்கும் அது போலியான போன் என தெரிய வருகிறது.

இதையும் படிக்க : இனி உங்கள் இன்ஸ்டாகிராம் சாட்க்கு பாதுகாப்பு இல்லை.. End-To-End Encryption அம்சத்தை நீக்கிய மெட்டா!

அதனால், புதிய மொபைல் வாங்கிய பிறகு சில எளிய வழிகளில் வீட்டிலேயே அதனை சரிபார்க்கலாம். அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

1. IMEI நம்பரை சரிபார்க்கவும்

ஒவ்வொரு மொபைலுக்கும் தனித்துவமான IMEI நம்பர் இருக்கும். அதனை தெரிந்து கொள்ள, நம் போனில் டயலர் பேடில் *#06# என்று டைப் செய்யவும். உடனே IMEI நம்பர் திரையில் தோன்றும். அந்த எண்ணை, மொபைல் பாக்ஸில் உள்ள எண்ணுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். எண்கள் பொருந்தவில்லை என்றால், அது போலியான போனாக இருக்க வாய்ப்பு அதிகம். மேலும் IMEI.info போன்ற இணையதளங்களில் IMEI நம்பரை சரிபார்த்து அந்த போன் உண்மையானதா என்பதை உறுதி செய்யலாம்.

2. சாஃப்ட்வேரை கவனமாக பாருங்கள்

பல போலி போன்கள் வெளிப்புற தோற்றத்தை மட்டும் ஒரே மாதிரி உருவாக்கும். ஆனால் சாஃப்ட்வேர் மூலம் அவற்றை எளிதாக கண்டுபிடிக்கலாம். இதற்கு போன் செட்டிங்க்ஸில் ஐகான், மெனு, சரியாக இருக்கிறதா என சரிபார்க்க வேண்டும். எதாவது செயலிகள் சரியாக வேலை செய்யாமல் இருக்கிறதா? அடிக்கடி விளம்பரங்கள் திரையில் தோன்றுகிறதா என்பதை கவனிக்க வேண்டும். உண்மையான ஸ்மார்ட்போன் ஸ்மூத்தாக இயங்கும்.

3. போனின் பாடி குவாலிட்டியை சரி பார்க்கவும்

போலியான ஸ்மர்ட்போன்கலில் பில்ட் குவாலிட்டி குறைவாக இருக்கும். குறிப்பாக டச் சரியாக வேலை செய்கிறதா, பட்டன் வேலை செய்கிறதா, கேமரா சரியான இடத்தில் இருக்கிறதா லோகோ வித்தியாசமாக இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும்.

இதையும் படிக்க : பொது இடங்களில் இருக்கும் வைஃபை பயன்படுத்துகிறீர்களா?.. உஷார்.. இந்த சிக்கல்களை நினைவில் கொள்ளுங்கள்!

4. ஹார்ட்வேர் இன்ஃபோ ஆப்ஸ்

பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரில் கிடைக்கும் ஹார்ட்வேர் இன்ஃபோ ஆப்ஸ் மூலம் போனின் உள்ள விஷயங்களை சரிபார்க்கலாம். குறிப்பாக பிராசசர், ரேம், ஸ்டோரேஜ், கேமரா தகவல்கள், பேட்டரி விவரங்கள் போன்றவை கிடைக்கும். அதனை சரிபார்த்து உண்மையை தெரிந்துகொள்ளலாம். அவற்றை ஸ்மார்ட்போன் நிறுவனங்கலின் உள்ள விவரங்களுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். விவரங்கள் பொருந்தவில்லை என்றால் அது போலியானதாக இருக்கலாம்.

5. நம்பிக்கையான கடைகளில் மட்டும் வாங்க வேண்டும்

போலி போன்களை தவிர்க்க போன் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும். அல்லது நம்பிக்கைக்குரிய ஆன்லைன் நிறுவனங்களில் மட்டுமே வாங்க வேண்டும். போனின் சராசரி விலையை விட குறைவான விளையில் விற்கப்படும் போன்கள் குறித்து சந்தேகம் கொள்ள வேண்டும்.

Follow Us