AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சம்மர் சேலை அறிவித்த ஒன்பிளஸ்.. ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி!

OnePlus Summer Sale | இந்தியாவின் மிக முக்கிய ஸ்மார்ட்போன் நிறுவனமாக ஒன்பிளஸ் உள்ளது. இந்த நிலையில், ஒன்பிளஸ் நிறுவனம் தனது சம்மர் சேலை அறிவித்துள்ளது. எந்த எந்த ஸ்மார்ட்போன்களுக்கு எவ்வளவு தள்ளுபடி மற்றும் சலுகை வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சம்மர் சேலை அறிவித்த ஒன்பிளஸ்.. ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி!
ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 04 May 2026 18:08 PM IST

இந்தியாவில் மிக முக்கிய ஸ்மார்ட்போன் (Smartphone) நிறுவனமாக உள்ள ஒன்பிளஸ் (OnePlus), தனது சம்மர் சேலை (Summer Sale) அறிவித்துள்ளது. இந்த சேலில் ஒன்பிளஸ் 15R, பேட் 3 ஆகியவற்றுக்கு அசத்தல் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த சம்மர் சேலில் எந்த எந்த ஸ்மார்ட்போன்களுக்கு எவ்வளவு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஸ்மார்ட்போன்களுக்கு சம்மர் சேலை அறிவித்த ஒன்பிளஸ்

ஒன்பிளஸ் நிறுவனம் தனது சம்மர் சேலை அறிவித்துள்ளது. இந்த சேலில் தனது முன்னணி மாடல் ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடியை வழங்கியுள்ளது.

ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன்

ரூ.77,999 மதிப்பிலான இந்த ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் (OnePlus 15 Smartphone) விலை குறைக்கப்படவில்லை. ஆனால், இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் நபர்கள் ரூ.4,000 வங்கி சலுகை பெற முடியும். இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனை வெறும் ரூ.73,999-க்கே வாங்கிக்கொள்ளலாம்.

இதையும் படிங்க : இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்கு போட்டியாக களமிறங்கும் நெட்ஃபிளிக்ஸ் – புதிய கிளிப்ஸ் வசதி – எப்படி பயன்படுத்துவது?

ஒன்பிளஸ் 15R ஸ்மார்ட்போன்

ரூ.54,999-க்கு விற்பனை செய்யப்படும் இந்த ஒன்பிளச் 15R ஸ்மார்ட்போனுக்கு (OnePlus 15R Smartphone) ரூ.2,000 சலுகை மற்றும் ரூ.2,000 வங்கி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனை வெறும் ரூ.50,999-க்கே வாங்கிக்கொள்ளலாம்.

ஒன்பிளஸ் 13 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள்

ரூ.69,999 மதிப்புள்ள ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனுக்கு (OnePlus 13 Smartphone) ரூ.7,000 தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, கூடுதலாக ரூ.5,000 வங்கி தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனை வெறும் ரூ.57,999-க்கே வாங்கிக்கொள்ளலாம். ஒன்பிளஸ் 13R ஸ்மார்ட்போன் (OnePlus 13R Smartphone) ரூ.42,999-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், அதற்கு ரூ.3,000 தள்ளுபடி மற்றும் ரூ.2,000 வங்கி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் காரணமாக இந்த ஸ்மார்ட்போனை வெறும் ரூ.37,999-க்கே வாங்கிக்கொள்ளலாம்.

இதையும் படிங்க : கோடையில் ஏசியால் ஏற்படும் பாதிப்புகள் – நிபுணர்கள் சொல்வது என்ன?

ரூ.54,999 மதிப்புள்ள ஒன்பிளஸ் 13S ஸ்மார்ட்போனுக்கு (OnePlus 13S Smartphone) ரூ.5,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதுமட்டுமன்றி, ரூ.3,000 வங்கி தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக இந்த ஸ்மார்ட்போனை வெறும் ரூ.46,999-க்கே வாங்கிக்கொள்ளலாம்.

ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போன்

ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போன் (OnePlus Nord 6 Smartphone) ரூ.38,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி எதுவும் வழங்கப்படாத நிலையில், ரூ.2,000 வங்கி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனை வெறும் ரூ.36,999-க்கே வாங்கிக்கொள்ளலாம்.

Follow Us