AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அதிக நேரம் லேப்டாப், ஸ்மார்ட்போன் பார்க்கும் நபரா நீங்கள்?.. Yellow Light Screen பயன்படுத்துங்கள்!

Yellow Light Screen In Digital Gadgets | தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் டிஜிட்டல் சாதனங்களை அதிக அளவு பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், கண்களை பாதுகாக்க உதவும் மஞ்சள் நிற ஒளி ஸ்கிரீன் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

அதிக நேரம் லேப்டாப், ஸ்மார்ட்போன் பார்க்கும் நபரா நீங்கள்?.. Yellow Light Screen பயன்படுத்துங்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 04 May 2026 15:13 PM IST

ஸ்மார்ட்போன், லேப்டாப் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்கள் மனிதர்களின் அன்றாட வாழ்வின் அங்கமாகவே மாறிவிட்டன. பலரும் பல மணி நேரம் இந்த சாதனங்களை பயன்படுத்த வேண்டிய சூழலில் உள்ளனர். இவ்வாறு தொடர்ந்து இத்தகைய சாதனங்களை பயன்படுத்துவதன் மூலம் கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இந்த நிலையில், தொடர்ந்து ஸ்கிரீனை பார்க்கும்போது கண்கள் பாதிப்படையாமல் பாதுகாக்கும் அம்சம் தான் மஞ்சள் நிற ஒளி ஸ்கிரீன் (Yellow Light Screen). லேப்டாப், ஸ்மார்ட்போன் உள்ளிட்ட சாதனங்களில் இந்த மஞ்சள் நிற ஒளியை செட் செய்வதன் மூலம் கண்களுக்கு என்ன என்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மஞ்சள் நிற ஒளி ஸ்கிரீனின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

  • இந்த மஞ்சள் நிற ஒளி ஸ்கிரீன் கண்களை சோர்வடைவதில் இருந்து பாதுகாக்க உதவும்.
  • மஞ்சள் நிற ஒளி ஸ்கிரீனில் இதமான சூழலை உருவாக்குகிறது. அது கண்களையும் பாதுகாக்கிறது.
  • இந்த மஞ்சள் நிற ஸ்கிரீனை பயன்படுத்துவது உடலில் மெலடோனின் உற்பத்தியை அதிகரித்து விரைவில் தூக்கம் வர வழிவகை செய்யும்.
  • நீல நிற ஒளி திரையை பார்க்கும் பலருக்கும் மைக்ரேன் தலைவலி வந்து சிக்கலை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில், மஞ்சள் நிற ஒளி திரையை பயன்படுத்துவது தலைவலி பிரச்ணைகளில் இருந்து நிவாரணம் தரும்.
  • கண்களுக்கு பாதுகாப்பு தரும் இந்த மஞ்சள் நிற ஒளி திரையை இரவு நேரத்தில் மட்டுமன்றி, பகல் நேரத்திலும் பயன்படுத்தி கண்களை பாதுகாத்துக்கொள்ளலாம்.

இதையும் படிங்க : கோடையில் ஏசியால் ஏற்படும் பாதிப்புகள் – நிபுணர்கள் சொல்வது என்ன?

கண்களை பாதுகாப்பதற்கான கூடுதல் அம்சங்கள்

  • கணினி மற்றும் செல்போனில் குறிப்பிட்ட அளவும் பிரைட்னஸ் வைத்து பயன்படுத்த வேண்டும்.
  • ஸ்மார்ட்போன், கணினி உள்ளிட்டவற்றை குறிப்பிட்ட அளவு தூரத்தில் வைத்து பயன்படுத்த வேண்டும்.
  • தொடர்ந்து ஸ்மார்ட்போன், கணினி திரைகளை பார்க்கும் நபர்கள் ஒவ்வொரு 20 நிமிடத்திற்கு ஒருமுறை 20 நொடிகளுக்கு 20 அடி தூரத்தில் உள்ள பொருட்களை பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க : வெயில் காலத்தில் ஐபோன் அதிக வெப்பமடைவதற்கான காரணம் என்ன? அதற்கான தீர்வு என்ன?

தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலானவர்களுக்கு கண் தொடர்பான பிரச்னைகள் ஏற்படுகிறது. எனவே இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைளை மேற்கொள்வதன் மூலம், கண்களில் எந்த வித சிக்கல்களும் ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us