கூகுள் பிக்சல் 11 ப்ரோ, பிக்சல் 11 ப்ரோ எக்ஸ்எல்.. வெளியான சிறப்பு அம்சங்கள்!
Google Pixel 11 Pro and Google Pixel 11 Pro XL | கூகுள் நிறுவனம் தனது அடுத்த மாடல் ஸ்மார்ட்போன்களான கூகுள் பிக்சல் 11 ப்ரோ மற்றும் கூகுள் பிக்சல் 11 ப்ரோ எக்ஸ்எல் ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது.
கூகுள் (Google) நிறுவனம் இந்தியாவில் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தனது அடுத்த கூகுள் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. அதாவது, கூகுள் பிக்சல் 11 ப்ரோ (Google Pixel 11 Pro) மற்றும் கூகுள் பிக்சல் 11 ப்ரோ எக்ஸ்எல் (Google Pixel 11 Pro XL) ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிலையில், கூகுள் நிறுவனம் தான் அறிமுகம் செய்ய உள்ள இந்த புதிய மாடல் ஸ்மார்ட்போன்களுக்கான சிறப்பு அம்சங்களை அறிவித்துள்ளது. அவை என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கூகுள் பிக்சல் 11 ப்ரோ, பிக்சல் 11 ப்ரோ எக்ஸ்எல் – சிறப்பு அம்சங்கள் என்ன?
கூகுள் நிறுவனத்தின் இந்த கூகுள் பிக்சல் 11 ப்ரோ மற்றும் கூகுள் பிக்சல் 11 ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போன்களில் கூகுளின் புதிய டென்சார் ஜி6 சிப்செட் அம்சம் கொடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த பிக்சல் 11 சீரீஸில் புதிய அம்சமாக பிக்சல் க்லோ (Pixel Glow) அம்சம் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. அதாவது, இந்த அம்சத்தில் ஸ்மார்ட்போன்களில் நோடிஃபிகேஷன் வரும்போது பின்பக்கத்தில் லைட் எரியும்.
இதையும் படிங்க : கோடையில் எளிதாக வெப்பமடையும் ஸ்மார்ட்போன்.. பாதுகாப்பாக வைப்பது எப்படி?




டிஸ்பிளே மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன?
இந்த பிக்சல் 11 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.3 இன்ச் LTPO டிஸ்பிளே அம்சத்தை கொண்டு இருக்கும், இதுவே பிக்சல் 11 ப்ரோ எக்ஸ்எல் 6.8 இன்ச் அம்சத்தை கொண்டு இருக்கு என்று கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் சாம்சங்கின் புதிய M16 OLED பேனல்கள் கொடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த அம்சம், கூர்மையான நிறங்கள் மற்றும் பேட்டரி திறனை கொண்டு இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்கு போட்டியாக களமிறங்கும் நெட்ஃபிளிக்ஸ் – புதிய கிளிப்ஸ் வசதி – எப்படி பயன்படுத்துவது?
இந்த கூகுள் பிக்சல் 11 ப்ரோ மற்றும் கூகுள் பிக்சல் 11 ப்ரோ எக்ஸ்எல் இரண்டு ஸ்மார்ட்போன்களிலுமே ஃபேஸ் ஐடி அம்சம் கொடுக்கப்பட்டு இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 50 மெகாபிக்சல் மெயின் கேமரா, 48 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 48 மெகாபிக்சல் 5எக்ஸ் டெலிபோட்டோ கேமரா ஆகிய கேமரா அம்சங்கள் கொடுக்கப்பட்டு இருக்கும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.