AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

யூடியூப் சேனலை உருவாக்குவது எப்படி? தமிழக அரசின் புதிய பயிற்சி திட்டம் – எப்படி விண்ணப்பிப்பது?

யூடியூப் செயல்முறையை கற்றுக்கொடுக்க தமிழக அரசு புதிய பயிற்சி திட்டத்தை அறிவித்துள்ளது. 3 நாட்கள் நடைபெறும் இந்த திட்டத்தில் யூடியூப் சேனல் உருவாக்குவது எப்படி? வீடியோ மற்றும் ஸ்லைடு ஷோ உருவாக்குதல், திறமையான மார்க்கெட்டிங் மற்றும் விளம்பர நுட்பங்கள் போன்றவை கற்றுக்கொடுக்கப்படவிருக்கின்றன.

யூடியூப் சேனலை உருவாக்குவது எப்படி? தமிழக அரசின் புதிய பயிற்சி திட்டம் – எப்படி விண்ணப்பிப்பது?
தமிழக முதல்வர் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 15 May 2026 16:19 PM IST

பலருக்கும் யூடியூபில் வீடியோ வெளியிடுவது கிட்டத்தட்ட புதிய தொழிலாக மாறி வருகிறது. மக்களை மகிழ்விக்க, அவர்களுக்கு தகவல்களை வழங்க, சமையல் கலை, தோட்டக் கலை என போன்ற பல்வேறு தலைப்புகளில் கிரியேட்டர்கள் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இதன் மூலம் அவர்களுக்கு கனிசமான வருமானம் கிடைத்து வருகிறது. எனவே இது தற்போது புதிய தொழில் வாய்ப்பாக மாறி வருகிறது. இந்த நிலையில் இதற்காக மக்கள் முறையாக யூடியூப் செயல்முறையை கற்றுக்கொடுக்க தமிழக அரசு புதிய பயிற்சியை வழங்குகிறது.

தமிழக அரசின் புதிய பயிற்சி திட்டம்

இது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் வெளியான அறிக்கையில், தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் தொழில்முனைவோருக்கான சொந்தமாக யூடியூப் சேனல் உருவாக்குதல் பயிற்சி வழங்குகிறது. அதில், சொந்த யூடியூப் சேனலை உருவாக்குவது எப்படி என்ற தலைப்பில் மூன்று நாள் பயிற்சி திட்டம் 25.05.2026 முதல் 27.05.2026 வரை தினமும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை EDII-TN வளாகம், சென்னையில் நடைபெற உள்ளது.

யூடியூப் பயிற்சி திட்டம்

 

இதையும் படிக்க : உங்கள் போன் காணாமல் போனால் உடனே செய்ய வேண்டிய 4 விஷயங்கள்

இந்த பயிற்சியில் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கம் மற்றும் ஆன்லைன் விளம்பர முறைகள் குறித்து பயிற்சி வழங்கப்படும். பயிற்சியில் இடம்பெறும் தலைப்புகள் பின்வருமாறு:

  • வீடியோ மற்றும் ஸ்லைடு ஷோ உருவாக்குதல்
  • சமூக வலைதள சந்தைப்படுத்தல் மற்றும் சமூக வலைதள இணைப்பு
  • வாடிக்கையாளர் வலையமைப்பை அதிகரிக்கும் முறைகள்
  • திறமையான மார்க்கெட்டிங் மற்றும் விளம்பர நுட்பங்கள்
  • ஆன்லைன் மார்க்கெட்டிங் முறைகள்
  • டொமைன் பெயர் மற்றும் ஹோஸ்டிங் தொடர்பான அறிமுகம்
  • இணையதள வடிவமைப்பு நுட்பங்கள் மற்றும் விதிமுறைகள்

இந்த பயிற்சி, YouTube சேனலை தொடங்கி திறமையாக நிர்வகிக்க விரும்பும் தொழில் முனைவோர், மாணவர்கள் மற்றும் உள்ளடக்க உருவாக்குநர்களுக்கு பயனுள்ளதாக அமையும். இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் ஆண்/பெண், திருநங்கைகள், திருநம்பிகள் என 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்ச கணினி அறிவு வேண்டும். 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதையும் படிக்க : வாட்ஸ்அப் மெட்டா ஏஐ-ல் “Incognito Tab” அறிமுகம்.. சிறப்பு அம்சங்கள் என்ன?

பயிற்சியில் பங்கேற்கும் பயிற்சியாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் தங்கும் வசதி வழங்கப்படும். தங்கும் வசதி தேவையுள்ளவர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சி தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய விரும்புவோர் www.editn.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். அலுவலக வேலை நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

Follow Us