AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக டி.கே. சிவக்குமார் இன்று பதவியேற்பு.. சித்தராமையாவுக்கு புதிய பொறுப்பு..

1962ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி கனகபுராவில் பிறந்த டி.கே. சிவக்குமார், 1980களில் மாணவர் தலைவராக தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். 1985ஆம் ஆண்டு முதல் தேர்தலில் தோல்வி அடைந்தாலும், 1989ஆம் ஆண்டு தனது 27வது வயதில் முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் தொடர்ந்து எட்டு முறை வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக டி.கே. சிவக்குமார் இன்று பதவியேற்பு.. சித்தராமையாவுக்கு புதிய பொறுப்பு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 03 Jun 2026 10:25 AM IST

ஜூன் 3, 2026: கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்க உள்ள டி.கே. சிவக்குமாரின் பதவியேற்பு விழாவை முன்னிட்டு, அவரது சொந்த தொகுதியான கனகபுரா கலைக்கட்டியுள்ளது. புதன்கிழமை நடைபெற உள்ள பதவியேற்பு விழாவை முன்னிட்டு, சிவக்குமாரை வாழ்த்தி அவரது இல்லம் மற்றும் தொகுதி முழுவதும் பதாகைகள் மற்றும் கட்-அவுட்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெங்களூருவில் உள்ள லோக் பவனில் மாலை 4 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இதற்கிடையில், புதிய அமைச்சரவை பட்டியல் குறித்து காங்கிரஸ் உயர்மட்ட தலைமை காலை 10 மணி அல்லது நண்பகலுக்குள் இறுதி அறிவிப்பை வெளியிடும் என டி.கே. சிவக்குமார் தெரிவித்தார்.

செய்தியாளர்களை சந்தித்த அவர், ஊடகங்களில் வெளியாகும் அமைச்சர்கள் பட்டியல் அதிகாரப்பூர்வமானது அல்ல என்றும், இறுதி முடிவை கட்சி தலைமையே அறிவிக்கும் என்றும் கூறினார். மேலும், காங்கிரஸ் பவனுக்கான அடிக்கல் நாட்டும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், பதவியேற்பு விழாவுக்கு பின்னர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மற்றும் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

புதிய முதல்வராக பதவியேற்கும் டி.கே சிவகுமார்:

கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா கடந்த மே 28ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ஆளுநர் அமைச்சரவை கலைப்பை ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தலைமையியல் மாற்றத்தின் நிறைவாக டி.கே. சிவக்குமாரின் பதவியேற்பு நடைபெறுகிறது.

முன்னதாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர், டெல்லியில் டி.கே. சிவக்குமார் மற்றும் சித்தராமையாவுடன் முக்கிய ஆலோசனை நடத்தினர். இதில் புதிய அமைச்சரவை அமைப்பு, மாநிலங்களவை உறுப்பினர் நியமனங்கள் மற்றும் கட்சி அமைப்பு மாற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சித்தராமையாவுக்கு புதிய பொறுப்பு:

இதனுடன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (AICC), சித்தராமையாவை உடனடி அமலுக்கு வரும் வகையில் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராக நியமித்துள்ளது. பல தசாப்தங்களாக அரசியல் மற்றும் கட்சி அமைப்பில் பணியாற்றிய டி.கே. சிவக்குமார், தற்போது காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். எட்டு முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ள அவர், கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.

மேலும் படிக்க: உச்சநீதிமன்றத்தில் 5 புதிய நீதிபதிகள் பதவியேற்பு.. 37- ஆக உயர்ந்தது நீதிமன்றத்தின் பலம்.. முழு விவரம் உள்ளே!

காங்கிரஸ் கட்சியின் “டிரபிள்ஷூட்டர்” என அழைக்கப்படும் சிவக்குமார், மாநிலம் முழுவதும் வலுவான அடித்தள அமைப்பை உருவாக்கியுள்ளார். சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா மற்றும் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் நெருக்கமான உறவு வைத்திருப்பதும், அவரை முதலமைச்சர் பதவிக்கான முக்கிய வேட்பாளராக மாற்றியது.

முதல்வர் டி.கே சிவகுமார் கடந்து வந்த பாதை:

1962ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி கனகபுராவில் பிறந்த டி.கே. சிவக்குமார், 1980களில் மாணவர் தலைவராக தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். 1985ஆம் ஆண்டு முதல் தேர்தலில் தோல்வி அடைந்தாலும், 1989ஆம் ஆண்டு தனது 27வது வயதில் முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் தொடர்ந்து எட்டு முறை வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

அமைப்பு திறமையில் சிறந்து விளங்கும் அவர், 2002 மகாராஷ்டிர அரசியல் நெருக்கடி மற்றும் 2017 குஜராத் மாநிலங்களவைத் தேர்தல் உள்ளிட்ட பல முக்கிய தருணங்களில் காங்கிரஸ் அரசுகளை காப்பாற்ற முக்கிய பங்காற்றினார். மேலும், 2023 கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கும் முக்கிய காரணமாக இருந்தார்.

2020ஆம் ஆண்டு முதல் கர்நாடக காங்கிரஸ் தலைவராக இருந்து வரும் அவர், முந்தைய ஆட்சியில் துணை முதலமைச்சராகவும் பதவி வகித்தார். 2019ஆம் ஆண்டு பல்வேறு விசாரணைகள் மற்றும் குறுகிய கால சிறைவாசத்தையும் எதிர்கொண்டபோதிலும், அவரது அரசியல் வளர்ச்சி தடைப்படவில்லை.

காந்தி குடும்பத்தின் நெருங்கிய நம்பிக்கையாளராக கருதப்படும் டி.கே. சிவக்குமார், தற்போது கர்நாடக முதலமைச்சராக அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்க உள்ளார். இது மாநில அரசியலில் முக்கியமான தலைமையியல் மாற்றமாக பார்க்கப்படுகிறது.

Follow Us