AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

உச்சநீதிமன்றத்தில் 5 புதிய நீதிபதிகள் பதவியேற்பு.. 37- ஆக உயர்ந்தது நீதிமன்றத்தின் பலம்.. முழு விவரம் உள்ளே!

Supreme Court New Judges: உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக 5 நீதிபதிகள் இன்று பதவி ஏற்றுள்ளனர். அவர்கள் யார் என்பது குறித்த தகவலை இந்தப் பதிவில் சற்று விரிவாக பார்க்கலாம். இதில், தமிழகத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் நீதிபதியாக பதவி ஏற்றுள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் 5 புதிய நீதிபதிகள் பதவியேற்பு.. 37- ஆக உயர்ந்தது நீதிமன்றத்தின் பலம்.. முழு விவரம் உள்ளே!
உச்சநீதிமன்றத்தில் 5 புதிய நீதிபதிகள் பதவியேற்பு
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 02 Jun 2026 13:10 PM IST

இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தில் புதிதாக பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஷீல் நாகு, மும்பை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஸ்ரீ சங்கரசேகர், மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் சச்தேவா, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அருண் பல்லி மற்றும் தமிழகத்தை சேர்ந்த மூத்த வழக்கறிஞரான வெங்கட சுப்ரமணி மோகனா ஆகிய 5 நீதிபதிகள் உச்சநீதிமன்ற நீதிபதியாக இன்று செவ்வாய்க்கிழமை பதவியேற்றனர். இந்திய தலைமை நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான கொலீஜியம் அங்கீகரித்த நீதிபதிகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்பட உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை 37- ஆக உயர்ந்துள்ளது. இதில், ஒரு இடம் மட்டும் காலியாக உள்ளது. தற்போது, இந்த நீதிபதிகள் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

நீதிபதி ஷீல் நாகு:- கடந்த 1965- ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி பிறந்த ஷீல் நாகு 1987- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய பிரதேச வழக்கறிஞர் மன்றத்தில் பதிவு செய்தார். மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் உரிமையியல், அரசியலமைப்பு சட்ட வழக்குகளில் பயிற்சி பெற்றார். 2011- ஆம் ஆண்டு மே மாதம் கூடுதல் நீதிபதியாக பதவி உயர்வு பெற்று 2013- ஆம் ஆண்டு நிரந்தர நீதிபதியானார். பின்னர் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றிய அவர் பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணிபுரிந்துள்ளார்.

மேலும் படிக்க: ஒன்றரை வயது அர்ஷித் கொலை வழக்கு: 51 காயங்கள், பல மர்ம சம்பவங்கள்… அஷ்கர் – அகிலா மீது தீவிர விசாரணை

நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர்:- 1965- ஆம் ஆண்டு மே 25-ஆம் தேதி பிறந்த ஸ்ரீ சந்திரசேகர் 1993- ஆம் ஆண்டு டெல்லி வழக்கறிஞர் மன்றத்தில் சேர்ந்த பின்னர் தனது பணியை தொடங்கினார். உரிமையியல், குற்றவியல் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்றவராவார். 140-க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட உச்ச நீதிமன்ற வழக்குகளில் வழக்கறிஞராக ஆஜராகி உள்ளார். கடந்த 2014- ஆம் ஆண்டு ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதி ஆனார். நீதிபதி யஸ்வந்த் வருமா வழக்கில் அங்கம் வகித்தவர் ஆவார்.

நீதிபதி சஞ்சீவ் சரச்தேவா:- மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் இவர் 1964- ஆம் ஆண்டு டிசம்பர் 26- ஆம் தேதி பிறந்தார் 1988- ஆம் ஆண்டு டெல்லி வழக்கறிஞர் மன்றத்தில் சேர்ந்த இவர் 2013- ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். முக்கிய நீதித்துறை பதவிகளை வகித்துள்ளார்.

நீதிபதி அருண் பல்லி:- 1964- ஆம் ஆண்டு செப்டம்பர் 18- ஆம் தேதி பிறந்த இவர் சட்ட பாரம்பரியம் கொண்ட குடும்பத்தை சேர்ந்தவராவார். இவரது தந்தை மற்றும் தாத்தா பாட்டியாலாவில் வழக்கறிஞராக பணிபுரிந்தனர். 2004 முதல் 2007 வரை பஞ்சாப் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞராக பணிபுரிந்த நிலையில் 2013- இல் பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதியாக பதிவு உயர்வு பெற்றார். தற்போது, ஜம்மு காஷ்மீர் லடாக் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்தார்.

மூத்த வழக்கறிஞர் வி. மோகனா:- தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வெங்கட சுப்பிரமணி மோகனாவின் பதவி உயர்வு உச்ச நீதிமன்ற வரலாற்றில் ஒரு முக்கிய தருணத்தை குறிக்கிறது. 2018- இல் நீதிபதி இந்து மல்கோத்ராவின் நியமனத்துக்குப் பிறகு வழக்கறிஞர் சங்கத்தில் இருந்து நேரடியாக உச்ச நீதிமன்றத்திற்கு நியமிக்கப்படும் 2- ஆவது பெண் வழக்கறிஞர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கடந்த ஆகஸ்ட் 2021- ஆம் ஆண்டுக்குப் பிறகு கொலீஜியம் ஒரு பெண்ணை உச்ச நீதிமன்ற நீதிபதியாக பரிந்துரைப்பது இதுவே முதல் முறையாகும். தற்போது நீதிபதி பி. வி. நாகரத்னா மட்டுமே உச்ச நீதிமன்ற அமர்வில் ஒரே பெண் நீதிபதியாகவும், கொலிஜியத்தின் உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

மேலும் படிக்க: இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளை அனுமதிக்கமாட்டோம் – மியான்மர் அதிபர் உறுதி

Follow Us