ஆபரேஷன் சிந்தூர் 2.0-க்கு முப்படைகளும் தயாராக உள்ளன.. ராணுவ தளபதி உபேந்திர திவேதி!
Army Chief Upendra Dwivedi About Operation Sindoor | ஜம்மு மற்றும் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டது. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் 2.0-க்கு தயாராக உள்ளதாக ராணுவ தளபதி கூறியுள்ளார்.
புதுடெல்லி, மே 30 : இந்தியா ஆபரேஷன் சிந்தூர் 2.0-க்கு (Operation Sindoor 2.0) தயாராகி வருவதாக ராணுவ தளபதி உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார். தற்போது போர் நடவடிக்கை மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுளதாகவும், ஆபரேஷன் சிந்தூர் தொடர்வதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் 2.0 குறித்து ராணுவ தளபதி உபேந்திர திவேதி கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பஹல்ஹாமில் கொல்லப்பட்ட அப்பாவி சுற்றுலா பயணிகள்
ஜம்மு மற்றும் காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான பஹல்காமில் 2025 ஆம் ஆண்டில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலை பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்தியது தெரியவந்த நிலையில், பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
இதையும் படிங்க : ஆர்ட் ஆஃப் லிவிங் அமைப்பின் ஆண்டு நிறைவு – 5 திட்டங்களை தொடங்கி வைத்த துணைக் குடியரசுத்தலைவர்




இந்த தாக்குதல்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயர் வைத்த இந்திய ராணுவம், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை தாக்கி அழித்தது. இந்த நிலையில் தான் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. இதன் காரணமாக இரு நாடுகளும் தாக்குதல்களை கைவிடுவதாக அறிவித்தன. தற்போது இந்த ஆபரேஷன் சிந்தூர் குறித்து தான் ராணுவ தளபதி முக்கிய தகவல்களை கூறியுள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் 2.0-க்கு தயாராகும் இந்திய ராணுவம்
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் கூறியுள்ளதாவது, ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. தற்போது போர் நடவடிக்கைன மட்டும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு புதிய நவடிக்கை அவசியம் என கருதப்பட்டால், தரைப்படை மட்டுமல்லாமல் விமானப்படை மற்றும் கடற்படையும் தயாராக உள்ளன.
இதையும் படிங்க : நீட்-யுஜி மறுதேர்வு: களமிறங்கும் விமானப்படை.. வினாத்தாள்களைப் பாதுகாப்பாகக் கொண்டு புது ஏற்பாடு!
ஆபரேஷன் சிந்தூர் 2.0-க்கும் அடுத்தக்கட்ட போருக்கும் முப்படைகள் தயாராகி வருகின்றன. தற்போது முப்படைகளுக்கு இடையேயான உறவை மேமப்டுத்துவதிலும், அடுத்தக்கட்ட போருக்கு 24 மணி நேரமும் நம்மை தயார்படுத்திக்கொள்வதிலும் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.