பிரதமர் மோடியின் இன்ஸ்டாகிராம் வீடியோ புதிய உலக சாதனை: 325 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை..
தேர்வு முறையில் சீர்திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் சூழலில், இளைஞர்களுடன் நெருக்கமாகத் தொடர்பை ஏற்படுத்தும் வகையில் பிரதமர் மோடியின் இந்த வீடியோ வெளியாகியுள்ளது. இதனிடையே, பிரதமர் மோடி முந்தைய இரவு வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ 1.6 கோடிக்கும் அதிகமான லைக்குகளையும், 15 லட்சத்துக்கும் அதிகமான கருத்துகளையும் பெற்றுள்ளது.
ஜூலை 25, 2026: பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 24 மணி நேரத்திற்குள் இரண்டாவது ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். வினாத்தாள் கசிவுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து அவர் நள்ளிரவில் வெளியிட்ட முந்தைய வீடியோ 325 மில்லியன் பார்வைகளை கடந்து, இன்ஸ்டாகிராம் தளத்தில் புதிய உலக சாதனையைப் படைத்துள்ளது. இந்த வைரல் வீடியோவின் மூலம் பிரதமர் மோடியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் ஒரே இரவில் சுமார் 10 லட்சம் அதிகரித்துள்ளது.
இதற்கு முன்பு, ஃபிஃபா உலகக் கோப்பையின்போது BTS குழுவினரைச் சந்தித்தது தொடர்பாக IShowSpeed வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ 30 கோடி பார்வைகளுடன் சாதனை படைத்திருந்தது. தற்போது பிரதமர் மோடியின் வீடியோ அந்தச் சாதனையை முறியடித்துள்ளது.
இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி:
நாடு முழுவதும் தேர்வு வினாத்தாள் கசிவு சம்பவங்களால் கவலையடைந்துள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை நள்ளிரவில் இன்ஸ்டாகிராமில் செல்ஃபி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
வினாத்தாள் கசிவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் புதிய சட்ட மசோதா ஒன்று அடுத்த வாரம் நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என பிரதமர் மோடி தனது வீடியோ செய்தியில் தெரிவித்திருந்தார்.
புதிய உலக சாதனை படைத்த பிரதமரின் வீடியோ:
View this post on Instagram
இந்த வீடியோ வெளியான 24 மணி நேரத்திற்குள் 325 மில்லியன், அதாவது 32.5 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று, உலகிலேயே அதிக பார்வைகளைப் பெற்ற இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ என்ற உலக சாதனையைப் படைத்தது. தற்போது, இந்த செய்தி எழுதப்படும் நேரத்தில் பிரதமர் மோடியின் வீடியோ 325 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
இதனிடையே, தேர்வு வினாத்தாள் கசிவில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்படும் என அறிவித்த தனது வீடியோவுக்கு கிடைத்த வரவேற்புக்கும், நேர்மறையான ஆலோசனைகளுக்கும் பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை இரவு நன்றி தெரிவித்தார். இதற்காக, “Thank You Friends” எனக் கூறி மற்றொரு பின்தொடர் வீடியோவை வெளியிட்ட பிரதமர் மோடி, இளைஞர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
32.5 கோடி பார்வையாளர்களை பெற்ற வீடியோ:
பிரதமர் மோடி வெளியிட்ட முதல் வீடியோ 24 மணி நேரத்திற்குள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதற்கு முன்பு பிரபல சமூக ஊடக உள்ளடக்க உருவாக்குநர் IShowSpeed-ன் இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியான வீடியோ 300 மில்லியன் பார்வைகளுடன் சாதனை படைத்திருந்தது. தற்போது பிரதமர் மோடியின் வீடியோ அந்தச் சாதனையை முறியடித்துள்ளது.
மேலும், இந்த ஒரு வீடியோ மூலம் பிரதமர் மோடியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரே இரவில் சுமார் 10 லட்சம் அதிகரித்துள்ளது. வினாத்தாள் கசிவு என்பது சாதாரண விஷயம் அல்ல என்றும், இதற்கு எதிராக அரசு மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.10 கோடி வரை அபராதமும் விதிக்கும் வகையில் கடுமையான திருத்தங்களுடன் கூடிய சிறப்புச் சட்டம் கொண்டுவரப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், சமூக வலைதளங்கள் மூலம் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் வழங்கிய நேர்மறையான ஆலோசனைகள் மற்றும் ஆதரவையும் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
நீட் தேர்வு முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனக் கோரி, காக்ரோச் ஜனதா கட்சி (CJP) சார்பில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ‘சன்சத் சலோ’ பேரணியில் பங்கேற்ற நான்கு நாட்களுக்குப் பிறகு பிரதமர் மோடி இளைஞர்களை நோக்கி இந்த வீடியோ செய்தியை வெளியிட்டுள்ளார்.