தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல்… பொது சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Tamil Nadu Corona Virus : தமிழகத்தில் ஆர். எஃப். 5 வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாகவும், இந்த வகை கொரோனா வீரியம் இல்லாதது என்று பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை கூறியதை விரிவாக பார்க்கலாம் .
ஆந்திர பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில், சுமார் நான்கு பேர் வரை உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இதன் காரணமாக தமிழகத்திலும் கொரோனா தொற்று பரவுவதாக பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் எழுந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்பாக பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ஆந்திரா மாநிலத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய அதே வகை கொரோனா தமிழகத்திலும் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், அந்த கொரோனாவில் வீரிய தன்மை இல்லை.
தமிழகத்தில் பரவி வரும் ஆர்எஃப் வகை கொரோனா
தமிழகத்தில் உள்ள கொரோனா எந்த வகை என்பதை கண்டறிவதற்காக, அதன் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அங்கு, அந்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு, அது எந்த வகையான கொரோனா, அதன் வீரியம் என்ன என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அடங்கிய ஆய்வு அறிக்கை மீண்டும் தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில், நாடு முழுவதும் இருக்கும் குறிப்பாக ஆந்திர மாநிலத்தில் பரவி வரும் ஒ மைக்காரனின் ஆர். எஃ.ப். 5 வகை கொரோனா பாதிப்பு என்பது தெரியவந்தது.
மேலும் படிக்க: நாகர்கோவில் கைதி லாக்கப் டெத்.. அதிரடி விசாரணையில் இறங்கிய சிபிசிஐடி போலீசார்..!




நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை
தமிழகத்தில் தீவிர நீரிழிவு நோயாளிகள் மற்றும் நிமோனியா பாதிப்பால் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதில், கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் நபர்களுக்கு அவை வீரியம் இல்லாத கொரோனாவாகவே உள்ளது. தற்போது, பரவி வரும் ஆர். எஃப். 5 வகை கொரோனா வீரியம் இல்லாத கொரோனா வகையை சார்ந்ததாக உள்ளது. இதனால், பொது மக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்படாது.
பொது மக்கள் அச்சப்பட தேவையில்லை
எனவே, பொதுமக்கள் பெரிதளவில் அச்சப்பட தேவை இல்லை. பயப்படும் அளவுக்கு கொரோனா பரவாலும் பெரிதளவு இல்லை. சில இடங்களில் கொரோனா பரவல் இருந்தாலும் அவை வீரியமில்லாத கொரனாவாகவே உள்ளது என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார். வேலூர் தனியார் மருத்துவமனையில் ஆந்திராவை சேர்ந்தவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் திடீரென உயிரிழந்த நிலையில், அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: திருப்பூர் ஆயுதப்படை பெண் போலீஸ் தற்கொலை சம்பவம்.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்!