குதிரை பேர வழக்கு.. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் ஜாமீன்.. ஆனால் ஒரு ட்விஸ்ட்!
Senthil Balaji Horse Trading Case : தமிழக வெற்றிக் கழக ஆட்சியை கவிழ்ப்பதற்காக அந்தக் கட்சியின் ஊத்தங்கரை தொகுதி எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழக அரசை கவிழ்ப்பதற்காக அந்தக் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி எம். எல். ஏ வான இளையராஜாவிடம் ஐஎப்டிஎஸ் நிறுவனத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு உள்ளிட்டோர் ரூ. 35 கோடி பேரம் பேசியிருந்தனர். இது தொடர்பாக இளையராஜா எம்எல்ஏ அளித்த புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்து திருநாவுக்கரசு உள்ளிட்ட 12 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தவெக ஆட்சி கவிழ்ப்பு விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அவர்களுக்கு திருவல்லிக்கேணி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால், இந்த விசாரணைக்கு அவர்கள் ஆஜராகவில்லை. அத்துடன் முன் ஜாமீன் கோரி சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
செந்தில் பாலாஜிக்கு மீண்டும் ஜாமீன்
அத்துடன் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் 10 நாட்கள் கையெழுத்திட வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. ஆனால், காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி, அசோக் குமார் கையெழுத்திடவில்லை. இந்த நிலையில், பிணைத்தொகை. செலுத்துவதற்காக, சென்னை முதன்மை. அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று வெள்ளிக்கிழமை ஆஜரானார். நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க. ஆஜரானதைத் தொடர்ந்து இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் படிக்க: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் CM விஜய்.. காவிரிப் பிரச்சினைக்கு நேரடி பேச்சுவார்த்தை தீர்வாகுமா?




காவல் நிலையத்தில் கையெழுத்திட உத்தரவு
மேலும், நாளை ஜூலை 25- ஆம் தேதி முதல் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி காலை 10:30 மணிக்கும், மாலை 5:30 மணிக்கும் கையெழுத்திட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே, நீதிமன்றம் இது போன்ற உத்தரவு வழங்கியிருந்த நிலையில், செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் கையெழுத்திடவில்லை. இதனிடையே, போலீசார் தங்களை துன்புறுத்த கூடாது என்று உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் இருவரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.
கைது செய்யும் முடிவில் போலீசார்
அந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கப்பட்டு இருவரும் தற்போதுவரை சரணடையவில்லை. சரணடையாத காரணத்தால். துன்புறுத்த கூடாது என எப்படி கூற முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதுடன். இருவரது மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். முன்னதாக, செந்தில் பாலாஜி, அசோக் குமார் ஆகியோர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடாத காரணத்தால் இருவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: தமிழகத்தின் மொத்த கடன்.. பட்ஜெட்டுக்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்!!