AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தவெகவின் 3 மாத ஆட்சியில் 4 லாக்கப் மரணங்கள்.. சீமான் காட்டமான விமர்சனம்!

NTK Seeman : தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சி பொறுப்பேற்ற 3 மாதங்களில் 4 லாக்கப் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டி உள்ளார். அவர் கூறியவற்றை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

தவெகவின் 3 மாத ஆட்சியில் 4 லாக்கப் மரணங்கள்.. சீமான் காட்டமான விமர்சனம்!
சீமான் விஜய்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 24 Jul 2026 16:22 PM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டத்துக்கு புறம்பாக மதுபானம் விற்றதாக அருணாச்சலம் என்ற இளைஞரை தென்பாகம் போலீசார் செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், அந்த இளைஞர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார் . இந்த சம்பவத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தூத்துக்குடி தென்பாகத்தில் அருணாச்சலம் என்ற இளைஞர் காவல் துறையால் அடித்து கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அவர் இறப்பதற்கு முன்பு மரணம் வாக்குமூலமாக தான் தாக்கப்பட்டதை குறித்து வெளியிட்ட வீடியோ நெஞ்சை பதை பதைக்க செய்கிறது. நாகர்கோவிலில் சிறையில் உள்ளே சபரி வர்மன் என்ற நபர் அடித்துக் கொல்லப்பட்ட ரணத்தின் சுவடு மறைவதற்குள் அருணாச்சலம் என்ற இளைஞர் காவல் நிலையத்தில் வைத்து அடித்து கொல்லப்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது.

தவெக 3 மாத ஆட்சியில் 4 லாக்கப் மரணங்கள்

3 மாதம் கூட நிறைவு செய்யாத தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் 4 லாக்கப் மரணங்கள் நிகழ்ந்திருப்பது அரசின் நிர்வாக தோல்வியை எடுத்துக்காட்டுகிறது. கடந்த திமுக ஆட்சியில் மரணங்களின் போது ஆளும் ஆட்சியாளர்களுக்கு எதிராக சீறிய முதல்வர் விஜய் தனது ஆட்சியில் நடக்கும் காவல் மரங்களுக்கு தார்மீக பொறுப்பேற்று வருத்தம் தெரிவிக்கவோ அல்லது பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் எதுவும் கூறாமல் இருப்பது ஏன். இது வாக்கு செலுத்திய மக்களுக்கு செய்யப்படும் ஜனநாயக துரோகம் ஆகும்.

மேலும் படிக்க: 200-க்கும் மேற்பட்ட காவலர் குடும்பங்களிடம் ரூ.20 கோடி மோசடி.. பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு சிறை!!

ஆட்சி அதிகாரம், பதவி மமதை கண்களை மறைக்கிறது

திரைப்பட வெளியீட்டுக்காக ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் நிறுத்தி வைத்த முதல்வர் விஜய் ஒரு உயிருக்கான நீதியை பெற்று தர மனம் இல்லையா. ஆட்சி அதிகாரமும், பதவி மமதையும் முதல்வர் விஜயின் கண்களை மறைக்கிறது. ஏழை, எளிய மக்களின் அழு குரல்களும், ஒப்பாரியும், ஒலமும் முதல்வரின் செவிக்கு வந்து சேரவில்லையா. கடந்த திமுக ஆட்சியில் காவல் நிலைய மரணங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூட நீதியை பெற்று தருவதாக தேர்தல் பரப்புரை கூட்டத்தில் முதல்வர் விஜய் பேசியிருந்தார்.

தவெக அரசின் போக்கு ஏற்புடையதல்ல

ஆனால், முதல்வர் விஜய் ஆட்சியில் பறிபோன உயிருக்கான நீதியை பெற்று தனது ஏன். குற்றவாளிகளை காப்பாற்றுவது தான் மிக இழிவான செயல் இல்லையா. ஆளும் தமிழக வெற்றிக்கழக அரசின் போக்கு ஒருபோதும் ஏற்புடையது இல்லை. இதை வன்மையாக கண்டிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: ‘அறிவு முதிர்ச்சி பெற்றவர்கள்தானா?’ – முதல்வருக்கு திருஷ்டி என கூறி சேவலை பலியிட்ட நபர் – வானதி சீனிவாசன் கண்டனம்

Follow Us