AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திருப்பூர் ஆயுதப்படை பெண் போலீஸ் தற்கொலை சம்பவம்.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்!

Tiruppur Female Constable Self Harm : திருப்பூரில் ஆயுதப்படை பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து நல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்ட விசாரணையில் இந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

திருப்பூர் ஆயுதப்படை பெண் போலீஸ் தற்கொலை சம்பவம்.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்!
பெண் போலீஸ் தற்கொலையில் அதிர்ச்சி தகவல்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 24 Jul 2026 18:08 PM IST

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் ரஞ்சனி ( 24 வயது). இவர், திருப்பூர் மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரிந்து வந்த நிலையில் காங்கேயம் சாலையில் உள்ள நல்லூர் காவலர் குடியிருப்பில் தங்கி இருந்து வந்தார். இந்த நிலையில், நேற்று அவர் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், காவலர் ரஞ்சனிக்கு மாநகர ஆயுதப்படையில் பணிபுரிந்து வரும் ஆண் போலீஸ் ஒருவருடன் பழக்கம் இருந்ததாகவும், இவர்களது காதல் விவகாரம் இரு குடும்பத்தினருக்கும் தெரிந்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில், இருவரிடையே ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதா என்ற கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், அவரது செல்போனை போலீசார் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.

3 பேரிடம் செல்போனில் பேசிய பெண் காவலர்

இதில், ரஞ்சனி தற்கொலை செய்வதற்கு முன்னதாக எந்தெந்த எண்களில் பேசி உள்ளார். எந்தெந்த எண்களில் இருந்து அழைப்பு வந்துள்ளது என்பது குறித்த விவரங்களை போலீசார் சேகரித்தனர். அதில் வெவ்வேறு எண்களில் இருந்து 3 அழைப்புகள் வந்துள்ளது. அந்த மூன்று அழைப்புகளிலும் வேறு வேறு நபர்களிடம் ரஞ்சனி பேசி இருப்பதும் தெரியவந்தது. அந்த செல்போன்களை போலீசார் ஆய்வு செய்த நிலையில், இந்த மூன்று எண்களும் மூன்று போலீசாருக்கு தொடர்புடையது தெரியவந்தது. அவர்களை நல்லூர் காவல் நிலையத்துக்கு வரவழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் படிக்க: 1.75 டன் செம்மரக்கட்டை திருட்டு வழக்கு.. 5 வன ஊழியர்கள் சஸ்பெண்ட்.. திருப்பத்தூர் வன அலுவலர் அதிரடி!

பெண் தற்கொலையில் அதிர்ச்சி தகவல்

இதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ரஞ்சனியும், திருவண்ணாமலையை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் இரு குடும்பத்தினருக்கும் தெரியவந்த நிலையில், இரு தரப்பினரும் பேசி திருமணம் செய்வதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். அதன்படி, திருமணத்துக்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில், திருப்பூரில் பணி புரிந்து வரும் மற்றொரு போலீஸ்காரருடன், ரஞ்சனிக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

காதலனுடனான தகராறில் தற்கொலை

அதன்படி, இருவரும் செல்போனில் மணிக்கணக்கில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் ரஞ்சனியின் காதலனுக்கு தெரிய வந்த நிலையில், ஆத்திரமடைந்த அவர் அந்த ஆண் காவரை நேரில் சென்று மிரட்டி உள்ளார். இதைத் தொடர்ந்து, ரஞ்சனிக்கும், அவரது காதலனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதேபோல, சம்பவத்தன்றும் இருவரும் செல்போனில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், கடும் மன உளைச்சலுக்கு ஆளான காவலர் ரஞ்சனி பணி முடிந்து காவலர் குடியிருப்பில் உள்ள தனது அறைக்கு சென்ற நிலையில், அங்கு தூக்கிட்டு தற்கொல் செய்து கொண்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க: சென்னை கீழ்ப்பாக்கத்தில் கொடூரம்.. வாய் பேச முடியாத கைதி அடித்துக் கொலை… குற்றப்பின்னணி வார்டில் அதிர்ச்சி!!

Follow Us