உலகில் வாழ சிறந்த நகரங்கள் பட்டியல்.. சென்னைக்கு எந்த இடம்.. இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளனவா?
Best Cities To Live In 2026 | ஒவ்வொரு ஆண்டும் உலகில் வாழ சிறந்த நகரங்கள் பட்டியலை பொருளாதார நிபுணர் புலனாய்வுப்பிரிவு அமைப்பு வெளியிடும். அந்த வகையில், 2026 ஆம் ஆண்டுக்கான பட்டியலையும் வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 173 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
சென்னை, ஜூலை 25 : 2026 ஆம் ஆண்டுக்கான உலகின் வாழ சிறந்த நகரங்களுக்கான (Best Cities To Live) பட்டியலை பொருளாதார நிபுணர் புலனாய்வு பிரிவு அமைப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 173 நகரங்களை கொண்டு இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த பட்டியலில் சென்னை (Chennai) எந்த இடத்தில் உள்ளது, மேலும் இந்தியாவின் (India) எந்த எந்த நகரங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வாழ சிறந்த நகரங்களுக்கான பட்டியல்
பொருளாதார நிபுணர் புலனாய்வுப்பிரிவு (Economist Intelligence Unit) அமைப்பு, ஒவ்வொரு ஆண்டும் உலகின் வாழ சிறந்த நகரங்களுக்கான பட்டியலை வெளியிட்டு வருகிறது. ஒரு நகரத்தின் அரசியல் சூழல், பொருளாதாரம், சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக இந்த பட்டியலில் இடம்பெறும் நகரங்களின் தரவரிசையில் சில மாற்றங்கள் ஏற்படும்.
இதையும் படிங்க : தமிழ்நாட்டில் 5 முக்கிய ரயில்வே திட்டங்கள் தாமதம் ஏன்? மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கொடுத்த விளக்கம்!
2026 ஆம் ஆண்டுக்கான் பட்டியலை வெளியிட்ட அமைப்பு
அந்த வகையில் இந்த அமைப்பு 2026 ஆம் ஆண்டுக்கான சிறந்த நகரங்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் சுமார் 173 நகரங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில் டென்மார்க்கின் கோபன்ஹேகன் முதல் இடம் பிடித்துள்ளது. அடுத்ததாக ஆஸ்திரியாவின் வியன்னா, ஆஸ்திரேலியாவின் மென்போர்ன், சிட்னி, சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
சென்னைக்கு எந்த இடம் கிடைத்துள்ளது?
இந்த பட்டியலில் இந்திய நகரங்களும் சில இடம்பெற்றுள்ளன. ஆனால், இந்திய நகரங்கள் அனைத்தும் 120-க்கு மேல் தான் இடம் பிடித்துள்ளன. உதாரணமாக தலைநகர் டெல்லிக்கு 120வது இடம் வழங்கப்பட்டுள்ளது. மும்பைக்கு 121வது இடமும், சென்னைக்கு 123வது இடமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பெங்களூரு 127வது இடத்தை பிடித்துள்ளது. அதாவது பெங்களூருவை, சென்னை முந்தியுள்ளது.
இதையும் படிங்க : கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றால் பணி நீக்கம் – டாஸ்மாக் பணியாளர்களுக்கு எச்சரிக்கை
இந்திய நகரங்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் நல்ல முன்னேற்றத்தை பெற்றிருந்தாலும் சுற்றுசூழல், காற்று மாசுபாடு உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளில் பின்தங்கியுள்ளனதன் காரணமாக இந்திய நகரங்கள் பட்டியலில் பின்தங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.