AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மத்திய ரயில்வே இணை அமைச்சர் ரவ்னீத் சிங் திடீர் ராஜினாமா – காரணம் என்ன?

மத்திய ரயில்வே இணை அமைச்சர் ரவ்னீத் சிங் திடீரென ராஜினாமா செய்தார். பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனையின் பேரில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மத்திய அமைச்சரவையிலிருந்து ரவ்னீத் சிங் பிட்டுவின் ராஜினாமாவை உடனடியாக ஏற்றுக்கொண்டுள்ளார். அது குறித்து விரிவக பார்க்கலாம்.

மத்திய ரயில்வே இணை அமைச்சர் ரவ்னீத் சிங் திடீர் ராஜினாமா  – காரணம் என்ன?
ரவ்னீத் சிங்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 24 Jul 2026 21:40 PM IST

மத்திய ரயில்வே இணை அமைச்சர் ரவ்னீத் சிங் திடீரென ராஜினாமா செய்தார். பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனையின் பேரில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மத்திய அமைச்சரவையிலிருந்து ரவ்னீத் சிங் பிட்டுவின் ராஜினாமாவை உடனடியாக ஏற்றுக்கொண்டுள்ளார். இதனையடுத்து ரவ்னீத் சிங் பிட்டு பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தலில் அவருக்குக் கட்சி முக்கியப் பொறுப்பை வழங்கலாம் அல்லது அவர் ஒரு முக்கியத் தொகுதியிலிருந்து நேரடியாகப் போட்டியிடலாம் என்றும் கூறப்படுகிறது.

மத்திய அமைச்சர் பதவியிலிருந்து பஞ்சாப் அரசியலுக்கு அவர் மாற்றப்படுவார் என்று நீண்ட காலமாக ஊகங்கள் நிலவி வந்தன. இருப்பினும், இது குறித்து கட்சியிடமிருந்தோ அல்லது பிட்டுவிடமிருந்தோ எந்த அதிகாரப்பூர்வ கருத்தும் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில் தான் அவர் தற்போது ராஜினாமா செய்துள்ளார்.

இதையும் படிக்க : மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்.. பிரதமர் மோடி வாழ்த்து!

பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியந்த் சிங்கின் பேரன்

மத்திய அரசில் ரயில்வே துறை மற்றும் உணவு பதப்படுத்துதல் துறைக்கான இணை அமைச்சராக ரவ்னீத் சிங் பிட்டு பணியாற்றியுள்ளார். பஞ்சாபின் முன்னாள் முதல்வரான மறைந்த பியந்த் சிங்கின் பேனா இவர், தற்போது பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் உள்ளார். இவரது பதவிக்காலம் 2026 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் தேதியுடன் முடிவடைந்துள்ளது.

காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த ரவ்னீத் சிங்

ரவ்னீத் சிங் பிட்டு 2024 ஆம் ஆண்டு தான் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அதற்கு முன், 2021 மார்ச் 11 முதல் ஜூலை 18 வரை மக்களவையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பணியாற்றினார். பிட்டு 2014 மற்றும் 2019 பொதுத் தேர்தல்களில் லூதியானா தொகுதியிலிருந்தும், அதற்கு முன் 2009 ஆம் ஆண்டு ஆனந்த்பூர் சாஹிப் தொகுதியிலிருந்தும் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையும் படிக்க : “வினாத்தாள் கசிவு சாதாரண விஷயமல்ல!”.. நள்ளிரவில் வீடியோ வெளியிட்டு பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு!

பஞ்சாபில் பாஜகவின் முகமாக மாறும் ரவ்னீத்

பஞ்சாபில் தனது அடித்தளத்தை வலுப்படுத்த பாஜக முயற்சித்து வருவதாகக் கருதப்படுகிறது. மாநிலக் கட்சி அமைப்பிற்குப் புத்துயிர் அளிக்கும் வகையில் ரவ்னீத் சிங் பிட்டுவை பஞ்சாப் அரசியலில் தீவிரமாக ஈடுபடுத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது. தகவல்களின்படி, ரவ்னீத் சிங் குறித்து பாஜக ஒரு விரிவான திட்டத்தை வகுத்துள்ளது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாகக் கட்சியின் ஆதரவுத் தளத்தை விரிவுபடுத்தும் வகையில் அவர் இந்த உத்தியின் கீழ் செயல்படுவார்.

Follow Us