AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“தமிழகத்திலும் ஆசிரியர் நியமனத் தேர்வில் வினாத்தாள் கசிந்தது!”.. மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு!!

JP Nadda Explanation: தமிழ்நாட்டில் ஆசிரியர் நியமன நுழைவுத் தேர்வில் வினாத்தாள் கசிவு நடந்ததாக மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா குற்றம்சாட்டியுள்ளார். மேலும், எதிர்க்கட்சிகள் வினாத்தாள் கசிவு விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது என்றும், இதுகுறித்து நாடாளுமன்றத்தில் எந்த நேரமும் விரிவாக விவாதிக்க மத்திய அரசு முழுமையாகத் தயாராக உள்ளது என்றும் அவர் டெல்லியில் தெரிவித்துள்ளார்.

“தமிழகத்திலும் ஆசிரியர் நியமனத் தேர்வில் வினாத்தாள் கசிந்தது!”.. மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு!!
ஜே.பி.நட்டா
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 23 Jul 2026 06:34 AM IST

டெல்லி, ஜூலை 23: நீட் தேர்வு மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்கள் தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் மற்றும் விவாதங்கள் வலுத்துவரும் நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும் பாஜக தேசிய தலைவருமான ஜே.பி.நட்டா டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சியில் இருந்த மாநிலங்களில்தான் வினாத்தாள் கசிவு சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்றுள்ளதாகச் சாடினார்.

தமிழ்நாட்டில் வினாத்தாள் கசிவு:

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஜே.பி.நட்டா, “மாணவர்களின் போராட்டங்களை எதிர்க்கட்சிகள் அரசியல் ஆக்கக் கூடாது. தமிழ்நாடு, தெலுங்கானா, இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வினாத்தாள் கசிவு சம்பவங்கள் நடந்துள்ளன. குறிப்பாக, தமிழ்நாட்டில் ஆசிரியர் நியமன நுழைவுத் தேர்வில் வினாத்தாள் கசிவு ஏற்பட்டது. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களில்தான் இதுபோன்ற தேர்வுத்தாள் கசிவு சம்பவங்கள் பெருமளவில் நடந்துள்ளன” என்று குற்றம்சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு அரசு தயார்:

நாட்டின் எதிர்காலமான மாணவர்களின் நலன் குறித்துச் சிந்திப்பதே அரசின் முதன்மை கடமை என்று குறிப்பிட்ட அவர், “பரஸ்பரக் குற்றச்சாட்டுகளைத் தாண்டி இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிப்பதே சரியான தீர்வாகும். எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் எத்தனை மணி நேர விவாதத்தைக் கோரினாலும் அதற்கு மத்திய அரசு முழுமையாகத் தயார் நிலையில் உள்ளது. எதிர்க்கட்சிகள் தங்களின் கருத்துக்களை முன்வைக்க வேண்டும், அதற்கு அரசு முறையான பதிலளிக்கும்” என்று தெரிவித்தார்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ஒரு பொறுப்புள்ள அரசு என்பதைத் தெரிவித்த நட்டா, வினாத்தாள் கசிவுக்கான காரணங்கள் என்ன, இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார், மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது மற்றும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படாத வகையில் காணப்பட வேண்டிய தீர்வுகள் குறித்து ஆழமாக விவாதிக்க அரசு ஆர்வமாக உள்ளதாகக் கூறினார்.

ராகுல் காந்திக்கு கேள்வி:

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து விரிவாக விசாரிக்கப்படும் என்று கூறிய ஜெ.பி.நட்டா, “ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் நடந்த தவறுகள் குறித்து ராகுல் காந்தி ஏன் பேசுவதில்லை? மாணவர்களின் நலன் மற்றும் கல்வியின் தரத்தை உயர்த்துவதில் எதிர்க்கட்சிகளுக்கு ஆர்வம் இல்லை; மாணவர்களின் பிரச்சினைகளை வைத்து அரசியல் ஆதாயம் தேடவே அவர்கள் விரும்புகிறார்கள்” எனக் கடுமையாகச் சாடினார்.

சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் சந்திப்பு:

சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் குறித்தும் பேசிய அவர், “சப்தர்ஜங் மருத்துவமனையிலிருந்து மேடான்டா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்த சோனம் வாங்சுக்கின் உடல்நலம் குறித்து விசாரிக்க நாங்கள் சென்றிருந்தோம். அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்ததால் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், அவரது நலம் குறித்து விசாரித்தோம். அவர் தனது உண்ணாவிரதத்தைக் கைவிட்டு, பொதுவாழ்வில் இணைந்து மாணவர்களைச் சரியான பாதையில் வழிநடத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளோம். அவர் எழுதியுள்ள திறந்த கடிதத்திற்குப் பதிலளித்து, பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்வோம்” எனத் தெரிவித்தார்.

Follow Us