மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்.. பிரதமர் மோடி வாழ்த்து!
மருத்துவமனையில் வெளியான காட்சிகளில், படுக்கையில் இருந்த சோனம் வாங்சுக்கை ஜிதேந்திர சிங் எழுந்து அமர உதவினார். பின்னர், ஜே.பி. நட்டா அவருக்கு முதல் முறையாக பழச்சாறு வழங்கி உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். அந்த உணர்ச்சிகரமான தருணத்தில் சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஆங்க்மோவும் உடனிருந்தார்.
ஜூலை 24, 2026: குருகிராமில் உள்ள மெடான்டா மருத்துவமனையில் 26 நாட்களாக மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் முடித்துக் கொண்டார். மத்திய அரசுடன் பல வாரங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் முன்னிலையில் அவர் தனது உண்ணாவிரதத்தை முடித்தார்.
சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்த மத்திய அமைச்சர் ஜே.பி நட்டா:
Mr. Sonam Wangchuk has ended his fast after Union Ministers Shri JP Nadda and Shri Jitendra Singh met him at Medanta Hospital, Gurugram, and assured him of the government’s commitment to address the concerns.
Shri JP Nadda said:
“The government is positive on not registering… pic.twitter.com/lVSr83Af8y
— BJP (@BJP4India) July 23, 2026
மருத்துவமனையில் வெளியான காட்சிகளில், படுக்கையில் இருந்த சோனம் வாங்சுக்கை ஜிதேந்திர சிங் எழுந்து அமர உதவினார். பின்னர், ஜே.பி. நட்டா அவருக்கு முதல் முறையாக பழச்சாறு வழங்கி உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். அந்த உணர்ச்சிகரமான தருணத்தில் சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஆங்க்மோவும் உடனிருந்தார்.
“எனது உண்ணாவிரதத்தை முடிப்பதில் மகிழ்ச்சியும் நன்றியும் உள்ளது. நன்றி,” என்று கூறிய சோனம் வாங்சுக், தனது மனைவியை நோக்கி, “கீதாஞ்சலி எப்போதும் எனக்கு ஆதரவாக இருந்துள்ளார். உங்களுக்கு நன்றி என்று மட்டும் கூற விரும்பவில்லை; எனது உணர்வுகளை வெளிப்படுத்த விரும்புகிறேன்,” என தெரிவித்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஆலோசனை நடத்திய பின்னர், ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் சோனம் வாங்சுக்கை சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்புக்குப் பிறகு அவர் தனது உண்ணாவிரதத்தை முறையாக முடித்தார்.
உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்:
DAY 26
PEACE & ONLY PEACE IS MY WAY…
While at Jantar Mantar the protests remain peaceful I’m pained to learn that elsewhere some antisocial elements are taking advantage of the peaceful protests to provoke violence.
No matter what the other side does our response must only be…— Sonam Wangchuk (@Wangchuk66) July 23, 2026
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட சோனம் வாங்சுக், நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும், போராட்டம் வன்முறையாக மாறக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாகவும் உண்ணாவிரதத்தை முடித்ததாகத் தெரிவித்தார். மேலும், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னை நேரில் சந்தித்ததாகவும் அல்லது உண்ணாவிரதத்தை முடிக்குமாறு வேண்டுகோள் விடுத்ததாகவும் அவர் கூறினார்.
அதே நேரத்தில், தனது ஆதரவாளர்கள் அமைதியான முறையில் போராட்டத்தைத் தொடர வேண்டும் என்றும், எந்தவிதமான வன்முறைக்கும் இடமளிக்கக் கூடாது என்றும் சோனம் வாங்சுக் வலியுறுத்தினார்.
பிரதமர் மோடி சொன்னது என்ன?
मैं सोनम जी से आग्रह करता हूँ की वो डॉक्टरों की सलाह के अनुसार अपनी दिनचर्या रखें और जल्द से जल्द अपना पुराना वज़न फिर से प्राप्त करें।
मैं प्रभु से प्रार्थना करता हूँ कि सोनम जी स्वस्थ रहें।@Wangchuk66 @GitanjaliAngmo
— Narendra Modi (@narendramodi) July 23, 2026
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி சோனம் வாங்சுக் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார். மருத்துவர்களின் ஆலோசனையைப் பின்பற்றி, உடல்நலத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் படிக்க: “வினாத்தாள் கசிவு சாதாரண விஷயமல்ல!”.. நள்ளிரவில் வீடியோ வெளியிட்டு பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு!
ஜூன் 28ஆம் தேதி முதல் சோனம் வாங்சுக் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். போராட்டத்தின் போது அவர் சுமார் 11 கிலோ எடை குறைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். முன்னதாக, போராட்டக் களத்திலிருந்து அகற்றப்பட்ட அவர் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவரது மனைவி டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியதைத் தொடர்ந்து, குருகிராமில் உள்ள மெடான்டா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
போராட்டம் தொடரும் – சி.ஜே.பி:
இதற்கிடையே, உண்ணாவிரதத்தை சோனம் வாங்சுக் முடித்திருந்தாலும், காக்ரோச் ஜனதா கட்சி தலைமையிலான போராட்டம் தொடர்கிறது. கல்வி சீர்திருத்தங்கள், தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்புக்கூறல் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்களை நடத்த அந்த அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.