உங்கள் அன்பும் நம்பிக்கையும் எனக்கு வலிமை” – இளைஞர்களுக்கு நன்றி சொல்லி வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி..
“நமக்கிடையேயான பந்தம் எப்போதும் வலுவாக இருக்கும். நீங்கள் காட்டிய அன்பும் நம்பிக்கையும் எனக்கு வலிமையை அளித்துள்ளது” என பிரதமர் மோடி குறிப்பிட்டார். மேலும், “நேற்று இரவு தாமதமாக உங்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. எனது வீடியோவுக்கு நீங்கள் அளித்த பதிலுக்கும், நேர்மறையான ஆலோசனைகளுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி” என அவர் தெரிவித்தார்.
ஜூலை 25, 2026: பிரதமர் நரேந்திர மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். வெள்ளிக்கிழமை இரவு சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் இளைஞர்களுக்காக வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்ட அவர், அவர்களை நோக்கிப் பேசினார். தனது முந்தைய வீடியோவுக்கு பதிலளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை பகிர்ந்தவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
இளைஞர்களுக்கு நன்றி சொன்ன பிரதமர் மோடி:
View this post on Instagram
“நமக்கிடையேயான பந்தம் எப்போதும் வலுவாக இருக்கும். நீங்கள் காட்டிய அன்பும் நம்பிக்கையும் எனக்கு வலிமையை அளித்துள்ளது” என பிரதமர் மோடி குறிப்பிட்டார். மேலும், “நேற்று இரவு தாமதமாக உங்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. எனது வீடியோவுக்கு நீங்கள் அளித்த பதிலுக்கும், நேர்மறையான ஆலோசனைகளுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி” என அவர் தெரிவித்தார்.
தலைநகர் டெல்லியில் தொடரும் போராட்டம்:
இதனிடையே, வியாழக்கிழமை இரவு பிரதமர் மோடி வீடியோ செய்தி ஒன்றின் மூலம் மாணவர்களிடம் உரையாற்றினார். அப்போது, வினாத்தாள் கசிவுக்கு எதிராக கடுமையான சட்டங்களை கொண்டு வர வேண்டும் என அவர் வலியுறுத்தியிருந்தார். தேசிய தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக, நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – பிரதமர் உறுதி:
இந்தப் போராட்டம் ஒருபுறம் வலுப்பெற்றுள்ள சூழலில், நேற்று முன்தினம் நள்ளிரவில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அதில், “வினாத்தாள் கசிவு என்பது சாதாரண விஷயம் அல்ல. இதனால் லட்சக்கணக்கான மாணவர்களும், பெற்றோர்களும் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். கடந்த இரண்டரை மாதங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 22 லட்சம் மாணவர்களின் ஓர் கல்வியாண்டு வீணாகிவிடக் கூடாது என்பதால், விரைவாகத் தேர்வு நடத்தப்பட்டு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன.
இருப்பினும், இதோடு நாம் அமைதியாக இருந்துவிட முடியாது. விசாரணை நீதிமன்றங்களை அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தேன். அவர்கள் நல்லதொரு சட்ட வரைவைத் தயார் செய்து என்னிடம் வழங்கியுள்ளனர். நாடாளுமன்ற அமர்வில் இந்த மசோதாவை நிறைவேற்றத் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பலரும் கருத்துகளைத் தெரிவித்திருந்தனர். மாணவர்களும் பிரதமர் மோடியின் வீடியோவுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியிருந்தனர். இந்தச் சூழலில், பிரதமர் மோடி மீண்டும் ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தனது முந்தைய வீடியோவுக்கு பதிலளித்து, ஆலோசனைகளை வழங்கிய அனைத்து இளைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.