கேரளம் தீம் பார்க்கில் ராட்டினம் முறிந்து விபத்து.. 5 பேர் படுகாயம்!
Keralam Theme Park Accident | கேரளத்தில் ஹேப்பி லேண்ட் என்ற கேளிக்கை பூங்கா ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பூங்காவில் ராட்டினம் ஒன்று திடீரென முறிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலர் காயமடைந்துள்ளனர். சிலர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
திருவனந்தபுரம், மே 28 : கேரளத்தில் (Keralam) உள்ள கேளிக்கை பூங்கா ஒன்றில் அமைக்கப்பட்டு இருந்த ராட்டினம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 5 தமிழர்கள் படுகாயமடைந்துள்ள நிலையில், பலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் கேரளத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கேரளத்தில் உள்ள கேளிக்கை பூங்காவில் நடைபெற்ற விபத்து சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
கேரளத்தில் கேளிக்கை பூங்காவில் ராட்டினம் விழுந்து விபத்து
கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஹேப்பி லேண்ட் (Happy Land) என்ற கேளிக்கை பூங்கா ஒன்று உள்ளது. இந்த பூங்காவில் சுற்றிக்கொண்டு இருந்த ராட்டினம் ஒன்று திடீரென முறிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. அந்த ராட்டினத்தில் சில பொதுமக்கள், குழந்தைகள் உடன் ஏறி மகிழ்ச்சியாக சுற்றிக்கொண்டு இருந்த நிலையில், இந்த பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க : நெருங்கி வரும் நெருக்கடி: இந்தியப் பொருளாதாரத்தை அச்சுறுத்தும் 4 பெரும் சவால்கள்!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
🚨 Shocking video from Happyland Amusement Park, Venjaramoodu, Thiruvananthapuram, Kerala.
A cone-shaped skyride/swing ride (giant wheel style) suddenly collapsed while spinning with riders today afternoon. The central support failed, bringing down the entire structure.
5–7… pic.twitter.com/DhvyMp6N9F
— Aparajite (@amshilparaghu) May 28, 2026
தமிழகத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 5 பேர் படுகாயம்
இந்த ராட்டின விபத்தில் தமிழகத்தின் நாகர்கோயில் பகுதியை சேர்ந்த 2 பெண்கள், 3 குழந்தைகள் உட்பட பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த நிலையில், படுகாயமடைந்த அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க : சிபிஎஸ்இ தேர்வு மதிப்பீட்டில் 40 கோடி பக்கங்கள் ஸ்கேன்- ஓஎஸ்எம் அமைப்பு குறித்து விளக்கிய தர்மேந்திர பிரதான்!
இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் சிலரின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து சம்பவம் தமிழகம் மற்றும் கேரளாவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.