நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் – ரூ.10 கோடி அபராதம்… 7 ஆண்டுகள் சிறை – கடுமையாக்கப்படும் சட்டங்கள்
வினாத்தாள் கசிவைத் தடுக்கக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இச்சட்டத்தின் விதிகள் மேலும் கடுமையாக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வினாத்தாள் கசிவுச் சம்பவங்களில் ஈடுபடும் கும்பல்களைக் கட்டுப்படுத்த புதிய வழிகாட்டுதல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, 10 கோடி ரூபாய்க்கும் அதிகமான அபராதம் மற்றும் ஏழு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவைத் தடுக்கக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளனதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதற்கான விதிமுறைகள் மேலும் கடுமையாக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வினாத்தாள் கசிவுக்கு எதிராக வலுவான சட்டத்தை இயற்ற வேண்டும் என்று 1986 ஆம் ஆண்டின் கல்விக் கொள்கை முதன்முதலில் பரிந்துரைத்தது. 2024-ஆம் ஆண்டில், மத்திய அரசு ‘பொதுத் தேர்வுகள் சட்டம், 2024ஐ இயற்றியது. இச்சட்டம் தேர்வு முறைகேடுகளில் ஈடுபடும் கும்பல்களுக்கு எதிராக ஒரு வலுவான தடுப்பு நடவடிக்கையாக அமைந்துள்ளது. தற்போது, இச்சட்டத்தின் விதிமுறைகள் மேலும் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.
கடுமையாக்கப்படும் சட்டங்கள்
வினாத்தாள் கசிவைத் தடுக்கக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இச்சட்டத்தின் விதிகள் மேலும் கடுமையாக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வினாத்தாள் கசிவுக்கு எதிராக வலுவான சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று 1986-ஆம் ஆண்டின் கல்விக் கொள்கை முதன்முதலில் பரிந்துரைத்தது. 2024-ஆம் ஆண்டில், மத்திய அரசு ‘பொதுத் தேர்வுகள் (முறையற்ற நடைமுறைகளைத் தடுத்தல்) சட்டம், 2024’-ஐ இயற்றியது. இச்சட்டம் தேர்வு முறைகேடுகளில் ஈடுபடும் கும்பல்களுக்கு எதிராக ஒரு வலுவான அரணாக அமைந்துள்ளது. தற்போது, இச்சட்டத்தின் விதிகள் மேலும் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிக்க : நீட் தேர்வு விவகாரம்… 47 என்டிஏ அதிகாரிகள் கூண்டோடு நீக்கம்.. மத்திய அரசு வைத்த செக்!
போட்டித் தேர்வுகளின் நம்பகத்தன்மையைப் பாதுகாப்பதற்காக, மத்திய அரசு ‘பொதுத் தேர்வுகள் சட்டம் – 2024’ஐ மேலும் வலுப்படுத்தியுள்ளது. வினாத்தாள் கசிவுச் சம்பவங்களில் ஈடுபடும் கும்பல்களைக் கட்டுப்படுத்த புதிய வழிகாட்டுதல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, 10 கோடி ரூபாய்க்கும் அதிகமான அபராதம் மற்றும் ஏழு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படும். மேலும், சிறப்புப் பணிப்படை மூலம் இரண்டு மாதங்களுக்குள் விசாரணையை நிறைவு செய்யவும், விரைவு நீதிமன்றங்கள் வாயிலாக மூன்று மாதங்களுக்குள் தீர்ப்புகளை வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தண்டனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ. 50 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.
மேலும் முறைகேடுகளில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு ரூ.5 கோடி அபராதம் விதிக்கப்படுவதோடு, அவை 8 ஆண்டுகளுக்குக் பிளாக் லிஸ்ட்டில் சேர்க்கப்படும். தேர்வு நடத்தும் நிறுவனங்களின் நிர்வாகம் அல்லது செயல்பாடுகளுக்குப் பொறுப்பானவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டால், அவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.5 கோடி அபராதமும் விதிக்கப்படும்.
மேலும், திட்டமிட்ட கும்பல்களாகச் செயல்படும் வினாத்தாள் கசிவு மாஃபியாக்களின் உறுப்பினர்களுக்கு, ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் ரூ.10 கோடி வரையிலான மிகப் பெரிய அபராதமும் விதிக்கப்படும்.