மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகல் – நீட் தேர்வு போராட்டம் தீவிரமடையும் நிலையில் முடிவு
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சிகளும், மாணவர் அமைப்புகளும் தீவிரப்படுத்தியுள்ளன. இந்த நிலையில் ஜூலை 25, 2026 இன்று அவர் தனது பதிவியை ராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சிகளும், மாணவர் அமைப்புகளும் தீவிரப்படுத்தியுள்ளன. இந்த நிலையில் ஜூலை 25, 2026 இன்று அவர் தனது பதிவியை ராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகல்
— Dharmendra Pradhan (@dpradhanbjp) July 25, 2026
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் எழுதியுள்ள பதிவில், நாட்டின் இளைஞர்களின் லட்சியங்கள், உணர்வுகள் மற்றும் நியாயமான எதிர்பார்ப்புகளை நான் ஆழ்ந்து மதிக்கிறேன். இந்திய இளம் தலைமுறையினரின் கனவுகளை நனவாக்குவது எங்கள் அரசியல் மற்றும் சமூக வாழ்க்கையில் ஒரு தார்மீகக் கடமையாக இருந்து வருகிறது. பிரதமரின் தொலைநோக்குப் பார்வையிலான தலைமையின் கீழ் நாட்டிற்குச் சேவை செய்வதற்கான வாய்ப்பை வழங்கியமைக்கு அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், மே 3, 2026 அன்று நடைபெற்ற NEET-UG தேர்வு தொடர்பாக முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்தன. இவ்விவகாரத்தை உடனடியாகக் கவனத்தில் கொண்ட இந்திய அரசு, விசாரணையை சிபிஐ (வசம் ஒப்படைத்தது, தேர்வை ரத்து செய்தது மற்றும் மறுதேர்வுக்கான தேதியையும் அறிவித்தது. மேலும், அடுத்த ஆண்டு முதல் இத்தேர்வை கணினி வழித் தேர்வு றையில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
இக்காலகட்டம் முழுவதும், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்குத் தேர்வு சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதே எங்கள் முதன்மை முன்னுரிமையாக இருந்தது. இதற்காக இந்திய அரசுடன் இணைந்து மாநில அரசுகளும் குறிப்பாக மாவட்ட நிர்வாகங்களும் – முக்கியப் பங்காற்றின. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் ஒத்துழைப்புடன், ஜூன் 21, 2026 அன்று தேர்வு வெற்றிகரமாக நிறைவடைந்தது.
முதல் நாளிலிருந்தே, இச்சூழ்நிலைக்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன்; அதிலிருந்து ஒருபோதும் பின்வாங்கவில்லை. ‘தேர்வு மாஃபியா’க்களால் தகுதிவாய்ந்த எந்தவொரு மாணவரின் திறனும் வீணடிக்கப்படக்கூடாது என்பதிலும், எந்தவொரு மாணவருக்கும் அநீதி இழைக்கப்படக்கூடாது என்பதிலும் நான் உறுதியாக இருந்தேன். லை 16 அன்று அறிவிக்கப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் திருப்திகரமாக இருந்தன. பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்த பல தகுதிவாய்ந்த மாணவர்கள் இதில் வெற்றி பெற்றனர். இருப்பினும், இக்காலகட்டத்திலும் கூட, பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் தடைகளை உருவாக்கவும் மாணவர்களைத் தவறாக வழிநடத்தவும் முயன்றனர். இது எனக்கு ஆழ்ந்த மனவேதனையை அளித்தது.
ஜந்தர் மந்தர் மற்றும் நாடு முழுவதும் நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு, தேசவிரோத சக்திகள் இதனைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதைத் தடுக்கவும், நாட்டின் ஒற்றுமையைப் பாதுகாக்கவும், எந்தவொரு இந்திய மாணவரின் எதிர்காலமும் சட்டச் சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்யவும், நமது குழந்தைகள் தங்கள் நேரத்தை படிப்பிலும் தொழில் வாழ்க்கையை வடிவமைப்பதிலும் செலவிட வழிவகுக்கவும்—நான் மாண்புமிகு பிரதமரிடம் எனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.