Asian Games 2026: ஆசிய விளையாட்டில் இந்திய ஹாக்கி அணியின் ஜெர்சி நிறம் இதுவா..? ஹாக்கி இந்தியா ஓபன்!
Indian Hockey Jersey: ஹாக்கி உலகக் கோப்பைக்குப் பிறகு நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தோல்வியைக் குறித்துக் கவலைப்படாமல், அதற்கான காரணங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாகச் செயல்படுமாறு அணி கேப்டன்கள் மற்றும் பயிற்சியாளர்களைக் கேட்டுக்கொண்டார்.
ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெறவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் (Asian Games 2026) இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணிகள் நீல நிற ஜெர்சிகளில் விளையாடும் என்று ஹாக்கி இந்தியா (Hockey India) தலைவர் திலீப் திர்கி இன்று அதாவது 2026 செப்டம்பர் 8ம் தேதி தெரிவித்தார். முன்னதாக, இந்திய ஹாக்கி அணியின் நிறங்கள் குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கம் (IOA) பல விருப்பங்களை வழங்கியதாகவும், அதன் பிறகு இந்திய அணியின் ஜெர்சிக்கு நீல நிறத்தை ஹாக்கி இந்தியா முதல் தேர்வாக வைத்ததாகவும் கூறப்பட்டது.
ALSO READ: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டி! இந்திய கிரிக்கெட் அணி எப்போது, யாருடன் மோதும்?
ஹாக்கி இந்தியா விளக்கம்:
இந்திய ஹாக்கி அணியின் ஜெர்சி நிறம் குறித்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கச் செல்லும் வீரர்களுக்கான பிரியாவிடை விழாவில் பேசிய ஹாக்கி இந்தியா தலைவர் திலீப் திர்கி, “இந்திய ஹாக்கி அணியின் ஜெர்சிக்கான வண்ணத் தேர்வுகளை இந்திய ஒலிம்பிக் சங்கம் எங்களுக்கு வழங்கியது. இந்திய அணியின் சீருடைக்கு முதல் நிறமாக நீலத்தையும், இரண்டாவது நிறமாக ஆரஞ்சையும் ஹாக்கி இந்தியா தேர்ந்தெடுத்துள்ளது,” என்று கூறினார்.
ஆரஞ்சு நிறத்திற்கு மாற்றப்பட்டதால் சர்ச்சை:
சமீபத்தில் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் நடைபெற்ற உலகக் கோப்பைக்கு சற்று முன்பு, இந்திய ஹாக்கி அணியின் சீருடை நிறம் பாரம்பரிய நீலத்திலிருந்து ஆரஞ்சு நிறத்திற்கு மாற்றப்பட்டது குறித்து சர்ச்சை வெடித்தது. அப்போது, சீருடை நிறத்தை மாற்றும் முடிவு தனக்கோ அல்லது நிர்வாகக் குழுவிற்கோ தெரியாமல் எடுக்கப்பட்டதாகக் கூறி, திர்கி அந்த செயல்முறையை பற்றி பேசினார்.
தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா இந்திய அணிகள்..
ஹாக்கி உலகக் கோப்பைக்குப் பிறகு நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தோல்வியைக் குறித்துக் கவலைப்படாமல், அதற்கான காரணங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாகச் செயல்படுமாறு அணி கேப்டன்கள் மற்றும் பயிற்சியாளர்களைக் கேட்டுக்கொண்டார். தகவல்களின்படி, நேற்று அதாவது 2026 செப்டம்பர் 7ம் தேதி விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ஆண்கள் அணிப் பயிற்சியாளர் கிரேக் ஃபல்டன், இந்திய ஹாக்கி ஆடவர் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், பெண்கள் அணிப் பயிற்சியாளர் ஷௌர்ட் மரைன் மற்றும் இந்திய ஹாக்கி மகளிர் அணியின் சலிமா டெட்டே ஆகியோருடன் நடத்திய கூட்டத்தில், உலகக் கோப்பையில் அணியின் செயல்பாட்டை ஆய்வுசெய்தார். மேலும், குறைகளைக் கண்டறிந்து அவற்றை நீக்குவதில் கவனம் செலுத்துமாறும் அவர்களைக் கேட்டுக்கொண்டார்.
ALSO READ: சீனாவிற்குள் நுழைந்து சீன ஜோடியை வீழ்த்திய இந்திய ஜோடி.. சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்!
தகவல்களின்படி, சாய் தலைமையகத்தில் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற சந்திப்பின்போது, விளையாட்டுத்துறை அமைச்சர் இரு அணிகளின் கேப்டன்கள் மற்றும் பயிற்சியாளர்களுடனும், ஹாக்கி இந்தியா அதிகாரிகளுடனும் பேசினார். உலகக் கோப்பை ஏமாற்றத்தை மறந்து, லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கிற்குத் தகுதிபெறும் வகையில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தினார்.


