China Masters 2026: சீனாவிற்குள் நுழைந்து சீன ஜோடியை வீழ்த்திய இந்திய ஜோடி.. சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்!
BWF CHINA MASTERS 2026: இந்திய ஜோடியான சத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி சீனாவின் ஜிடிங் மற்றும் ரென் சியாங்யு ஜோடியை 11-21, 21-13, 21-17 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி, தங்களின் 10-வது உலக சுற்றுப் பட்டத்தை வென்றது. இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியின் மூலம், சத்விக் மற்றும் சிராக் ஜோடியானது சீன ஜோடிக்கு எதிரான தங்களின் தோல்வியற்ற சாதனையைத் தக்கவைத்தது.
இந்தியாவின் நட்சத்திர ஜோடியான சத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி (Satwik Rankireddy) மற்றும் சிராக் ஷெட்டி, சைனா மாஸ்டர்ஸ் 2026 (China Masters 2026) தொடரின் இறுதிப் போட்டியில் சரித்திரம் படைத்துள்ளனர். இன்று அதாவது 2026 செப்டம்பர் 6ம் தேதி நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், இந்திய ஜோடியான சத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி சீனாவின் ஜிடிங் மற்றும் ரென் சியாங்யு ஜோடியை 11-21, 21-13, 21-17 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி, தங்களின் 10-வது உலக சுற்றுப் பட்டத்தை வென்றது. இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியின் மூலம், சத்விக் மற்றும் சிராக் ஜோடியானது சீன ஜோடிக்கு எதிரான தங்களின் தோல்வியற்ற சாதனையைத் தக்கவைத்து, நேருக்கு நேர் மோதிய சாதனையை 3-0 என உயர்த்தியுள்ளது.




முதல் ஆட்டத்தில் சறுக்கிய சத்விக்-சிராக்:
இறுதிப் போட்டியின் ஆரம்பத்தில் சீன ஜோடி ஆதிக்கம் செலுத்தியது. ஹீ ஜிடிங் மற்றும் ரென் சியாங்யு ஆக்ரோஷமாக விளையாடி, தொடக்கத்திலேயே 5-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றனர். இதன் காரணமாக, இடைவேளையின்போது சீன ஜோடி 11-5 என்ற கணக்கில் முன்னிலை வகித்தனர். சத்விக் மற்றும் சிராக் ஜோடியால் மீண்டு வர முடியவில்லை, வெறும் 18 நிமிடங்களில் முதல் ஆட்டத்தை 11-21 என்ற கணக்கில் இழந்தனர்.
முதல் ஆட்டத்தில் விட்டு கொடுத்த பிறகு, இந்திய ஜோடி இரண்டாவது ஆட்டத்தில் தங்கள் உத்தியை மாற்றியது. ஆரம்பத்தில் சமநிலைக்காகப் போராடிய பிறகு, சத்விக் மற்றும் சிராக் ஆட்டத்தைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, இடைவேளையின்போது 11-7 என்ற கணக்கில் முன்னிலை பெற்றனர். அதன்பிறகு, சிராக் ஷெட்டியின் சக்திவாய்ந்த ஸ்மாஷ்களும், சத்விக்கின் வலுவான பேக்கார்ட் ஆட்டமும் சீன வீரர்களை செய்வதறியாது தவிக்கவிட்டன. இந்திய ஜோடி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து, அந்த ஆட்டத்தை 21-13 என்ற கணக்கில் வென்று, போட்டியை 1-1 என சமன் செய்தது.
இந்திய ஜோடியின் திருப்பு முனை ஆட்டம்:
SATCHI ARE THE CHAMPIONS OF BWF CHINA MASTERS 2026 ❤️🏆#ChinaMasters2026 https://t.co/9flzsQ7vKJ pic.twitter.com/i7yLgrvDJ3
— Badminton Media (@BadmintonMedia1) September 6, 2026
யார் வெற்றியாளர்கள் என்று தீர்மானிக்கும் மூன்றாவது ஆட்டத்தில் போட்டி மிகவும் விறுவிறுப்பானது. சீன வீரர்கள் மீண்டும் 4-0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று அழுத்தம் கொடுக்க முயன்றனர். ஆனால், சத்விக் மற்றும் சிராக் மனம் தளரவில்லை. இந்திய ஜோடி அபாரமாக மீண்டு வந்து, ஆட்டத்தை 7-7 என சமன் செய்து, இடைவேளையின்போது 11-9 என்ற முக்கியமான முன்னிலையைப் பெற்றது.
ALSO READ: ஒரு அணிக்காக களமிறங்கும் மெஸ்ஸி, ரொனால்டோ.. சிலிர்த்துப்போன ரசிகர்கள்.. எப்போது தெரியுமா?
ஆட்டத்தின் இறுதித் தருணங்களில், சீன ஜோடி பதிலடி கொடுத்து, புள்ளிகளை 16-16 என்றும் பின்னர் 17-17 என்றும் சமன் செய்தபோது, பரபரப்பு உச்சத்தை அடைந்தது. இருப்பினும், நெருக்கடியான சூழலிலும், இந்திய ஜோடி தங்களது அனுபவத்தை வெளிப்படுத்தி நிதானத்தைக் கடைப்பிடித்தது. சத்விக் மற்றும் சிராக் அடுத்தடுத்து நான்கு புள்ளிகளைப் பெற்று, தீர்க்கமான அந்த ஆட்டத்தை 21-17 என்ற கணக்கில் வென்றனர்.