Indian Football Team: ஜாம்பவான் அணிகளுடன் மோதும் இந்திய கால்பந்து அணி.. சுனில் சேத்ரி பெருமிதம்!
Sunil Chhetri: இந்தியா மற்றும் பிரேசில் அணிகளுக்கு இடையேயான நட்புப் போட்டி, வருகின்ற 2026 அக்டோபர் 3 ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் நடைபெறும். இதைத் தொடர்ந்து, வருகின்ற 2026 அக்டோபர் 6 ஆம் தேதி அதே மைதானத்தில் உருகுவே அணிக்கு எதிரான போட்டியும் நடைபெறும்.
இந்திய கால்பந்து அணிக்கு (Indian Football Team) வருகின்ற 2026 செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்கள் ஒரு சிறப்பான மாதமாக அமையவிருக்கிறது. பிரேசில் மற்றும் உருகுவே போன்ற உலக கால்பந்து ஜாம்பவான் அணிகளுக்கு எதிராக இந்திய அணி விளையாட இருக்கிறது. இந்தநிலையில், இந்திய கால்பந்து ஜாம்பவானும், முன்னாள் கேப்டனுமான சுனில் சேத்ரி (Sunil Chhetri) தனது நீண்ட சர்வதேச கால்பந்து வாழ்க்கையில் பிரேசில் அல்லது உருகுவே போன்ற அணிகளை எதிர்கொள்ள தனக்கு ஒருபோதும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும், தனது நீண்ட சர்வதேச கால்பந்து வாழ்க்கையில் பிரேசில் அல்லது உருகுவே போன்ற அணிகளை எதிர்கொள்ள தனக்கு ஒருபோதும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
ALSO READ: 17 வீரர்களுக்கு அர்ஜுனா விருது! 2025ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிப்பு!
சுனில் சேத்ரி கூறியது என்ன..?
இந்திய கால்பந்து அணியானது பிரேசில் மற்றும் உருகுவே போன்ற அணிகளுக்கு எதிராக விளையாடுவது குறித்து பேசிய சுனில் சேத்ரி, “பிரேசில், உருகுவே மற்றும் பனாமா அணிகளுக்கு எதிராக நம் வீரர்கள் விளையாடவிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், அதே சமயம் சற்று பொறாமையையும் அளிக்கிறது. எனது 26 ஆண்டுகால தொழில்முறை விளையாட்டு மற்றும் 20 ஆண்டுகால தேசிய அணி வாழ்க்கையில், எனக்கு அத்தகைய வாய்ப்பு ஒருபோதும் கிடைக்கவில்லை… நம் வீரர்களைச் சிறந்த உடல் தகுதியுடன் தயார்படுத்த முடியும் என்று நம்புகிறேன்… இந்தப் போட்டியிலிருந்து அவர்கள் சிறந்த அனுபவத்தைப் பெற வேண்டும் என்பதே என் விருப்பம்.




நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு குறித்து அவர் கூறுகையில், “இது மிகவும் துயரமான ஒன்று. நேபாளத்தில் எனக்குப் பலரைத் தெரியும்… அவர்கள் எங்காவது நிம்மதியைக் கண்டடைய வேண்டும் என்று விரும்புகிறேன். இப்பகுதியைச் சுற்றியுள்ள அனைவரும் முன்வந்து, அவர்கள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப உதவ வேண்டும் என்று நம்புகிறேன்.”என்றார்.
ALSO READ: ஹாக்கி உலகக் கோப்பையில் 5வது இடம்.. இந்திய மகளிர் அணிக்கு பரிசு மழை!
ஒன்றிணைய வேண்டும்..
இந்திய கால்பந்து அணி குறித்து பேசிய சுனில் சேத்ரி, “நானும் தேசிய அணியில் இருந்திருக்கிறேன். தரவரிசை ஏன் சரிந்தது? நாங்கள் விளையாடிய விதத்தால், வென்றிருக்க வேண்டிய போட்டிகளில் தோற்றோம். தற்போது விளையாடும் வீரர்களும் பொறுப்பேற்பார்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால், நாட்டில் கால்பந்தை மேம்படுத்த விரும்பினால், நாம் அனைவரும் சமமான பொறுப்பைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
இந்த வீரர் மோசமானவர், இந்தப் பயிற்சியாளர் மோசமானவர், அல்லது இந்த ஏஐஎஃப்எஃப் மோசமானது என்று நாம் ஒருவரையொருவர் குறை சொல்லக்கூடாது. ஒருவரையொருவர் குறை சொல்வதற்குப் பதிலாக, நாம் ஒன்றிணைய வேண்டும்.” என்றார்.
இந்திய அணியின் நட்பு போட்டி அட்டவணை:
இந்தியா மற்றும் பிரேசில் அணிகளுக்கு இடையேயான நட்புப் போட்டி, வருகின்ற 2026 அக்டோபர் 3 ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் நடைபெறும். இதைத் தொடர்ந்து, வருகின்ற 2026 அக்டோபர் 6 ஆம் தேதி அதே மைதானத்தில் உருகுவே அணிக்கு எதிரான போட்டியும் நடைபெறும். மேலும், இந்தியா வருகின்ற 2026 செப்டம்பர் மாதம் பனாமாவுடன் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது, இருப்பினும் அந்தப் போட்டிகளுக்கான தேதிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.