Women’s Asia Cup 2026: தாய்லாந்தை எதிர்கொள்ளும் இந்திய மகளிர்.. போட்டியை எப்போது, எங்கு காணலாம்?
India vs Thailand Live Streaming: 2026 மகளிர் ஆசியக் கோப்பைத் தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் இன்று அதாவது 2026 ஆகஸ்ட் 30ம் தேதி விளையாடுகிறது. இந்திய அணி அடுத்ததாக வருகின்ற 2026 செப்டம்பர் 3 ஆம் தேதி ஹாங்காங் அணியை எதிர்கொள்கிறது. அதைத் தொடர்ந்து, செப்டம்பர் 5 ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
2026 மகளிர் ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணி (Indian Womens Cricket Team) தனது முதல் போட்டியில் இன்று அதாவது 2026 ஆகஸ்ட் 30ம் தேதி விளையாடுகிறது. இத்தொடர் கடந்த 2026 ஆகஸ்ட் 28ம் தேதி தொடங்கியது. ஆனால் இந்திய மகளிர் அணியின் தனது முதல் போட்டியில் இன்றுதான் துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தாய்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்தியா 7 முறை ஆசியக் கோப்பையை வென்ற நடப்பு சாம்பியன் ஆகும். ஆனால், இந்திய அணியின் டி20 ஆட்டத்திறன் தொடர்ந்து கவலையளிப்பதாகவே இருந்து வருகிறது. இந்தநிலையில், இந்தியா – தாய்லாந்து இடையிலான ஆசிய கோப்பை (2026 Asia Cup) போட்டியை எங்கு காணலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: தொடங்கிய மகளிர் ஆசியக் கோப்பை.. இந்திய மகளிர் அணியின் சாதனை என்ன?
இந்தியா மற்றும் தாய்லாந்து அணிகளுக்கு இடையேயான மகளிர் ஆசிய கோப்பை 2026 போட்டி எப்போது நடைபெறும்?
2026 மகளிர் ஆசியக் கோப்பைத் தொடரில், இந்தியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான போட்டி, வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று இந்திய நேரப்படி இரவு 8:00 மணிக்குத் தொடங்கும்.




இந்தியா – தாய்லாந்து மகளிர் ஆசிய கோப்பை 2026 போட்டி எங்கு நடைபெறுகிறது?
இந்தப் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உள்ள துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும்.
இந்தியா – தாய்லாந்து மகளிர் ஆசிய கோப்பை 2026 போட்டியை எந்த தொலைக்காட்சி சேனல்கள் நேரலையில் ஒளிபரப்புகின்றன?
இந்தியா – தாய்லாந்து மகளிர் ஆசிய கோப்பை 2026 போட்டி சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரலையாக ஒளிபரப்பப்படும்.
இந்தியா – தாய்லாந்து மகளிர் ஆசிய கோப்பை 2026 போட்டியின் நேரலையை நான் எங்கே பார்க்கலாம்?
இந்தியா – தாய்லாந்து மகளிர் ஆசிய கோப்பை 2026 போட்டியை சோனி லிவ் செயலி மற்றும் இணையதளத்தில் நேரலையாகக் காணலாம்.
இந்திய அணியின் அடுத்த போட்டி எப்போது..?
2026 ஆசியக் கோப்பையை வெல்வதற்கான வலுவான போட்டியாளராக இந்தியா உள்ளது. இந்த 2026ம் ஆண்டு விளையாடிய 16 டி20 போட்டிகளில் இந்திய மகளிர் அணி 9 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. மேலும், டி20 உலகக் கோப்பையிலும் இந்தியாவின் செயல்பாடு ஏமாற்றமளித்தது. குரூப் ஸ்டேஜ் போட்டி தாண்டி முன்னேறத் தவறியது.
ALSO READ: மகளிர் ஆசிய கோப்பை இன்று தொடக்கம்.. இந்தியா – பாகிஸ்தான் போட்டி எப்போது?
இந்திய அணி சரித்திரம் படைக்குமா?
மகளிர் ஆசியக் கோப்பை 2004-ல் தொடங்கி, 2026-க்கு முன்பாகவே ஒன்பது பதிப்புகளைக் கண்டுள்ளது. இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தாலும் இல்லாவிட்டாலும், அது எப்போதும் ஆசியக் கோப்பைத் தொடரை ஒரு வெற்றியுடனேயே தொடங்கியுள்ளது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, இந்த 22 ஆண்டுகால தொடர் வெற்றியைத் தொடர முயற்சிக்கும்.
2024 ஆசியக் கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இம்முறை, இந்திய மகளிர் அணி, தாய்லாந்தின் சவாலை எதிர்கொள்ள உள்ளனர். டி20 தரவரிசையில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. அதே சமயம், தாய்லாந்து 12வது இடத்தில் உள்ளது.
இதனை தொடர்ந்து, இந்திய மகளிர் அணி அடுத்ததாக வருகின்ற 2026 செப்டம்பர் 3ம் தேதி ஹாங்காங் அணியை எதிர்கொள்கிறது. அதைத் தொடர்ந்து, வருகின்ற 2026 செப்டம்பர் 5ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.