Asian Games 2026: காலில் கிழிந்த தசைநார்கள்.. ஆசிய விளையாட்டு போட்டியில் விலகிய நீரஜ் சோப்ரா!
Neeraj Chopra Injury: கடந்த 2026 ஆகஸ்ட் 21ம் தேதி லோசான் டயமண்ட் லீக்கில் நீரஜ் 88.05 மீட்டர் தூரம் எறிந்திருந்தார். இதன்மூலம், 2026 செப்டம்பர் மாதம் நடைபெறும் லோசான் டயமண்ட் லீக் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். அதனை தொடர்ந்து, இன்று அதாவது 2026 ஆகஸ்ட் 29ம் தேதி நீரஜ் சோப்ரா காயம் காரணமாக தனது விலகலை அறிவித்தார்.
இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா, 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் (Asian Games 2026) இருந்து காயம் காரணமாக விலகியுள்ளார். இது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்தக் காயம் நீரஜ் சோப்ராவுக்கு (Neeraj Chopra) பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது காயம் மற்றும் இந்தப் பருவத்தின் மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகும் தனது முடிவை அறிவித்து சமூக ஊடகங்களில் ஒரு பதிவைப் பகிர்ந்திருந்தார். பயிற்சியின் போது அவரது கணுக்காலில் தசைநார் கிழிவு ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
ALSO READ: ஜப்பானில் வசதி குறைவு.. அனுபவ வீரர்களை அனுப்ப யோசிக்கும் பிசிசிஐ!




இந்த சீசனில் தனது சிறந்த எறிதலை வெளிப்படுத்திய பிறகு நீரஜ் சோப்ரா இந்த முடிவை எடுக்க வேண்டியிருந்தது. கடந்த 2026 ஆகஸ்ட் 21ம் தேதி லோசான் டயமண்ட் லீக்கில் நீரஜ் 88.05 மீட்டர் தூரம் எறிந்திருந்தார். இதன்மூலம், 2026 செப்டம்பர் மாதம் நடைபெறும் லோசான் டயமண்ட் லீக் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். அதனை தொடர்ந்து, இன்று அதாவது 2026 ஆகஸ்ட் 29ம் தேதி நீரஜ் சோப்ரா காயம் காரணமாக தனது விலகலை அறிவித்தார். அவரது பதிவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் குறிப்பிடப்படவில்லை என்றாலும், இந்தப் பருவம் முழுவதிலிருந்தும் அவர் விலகியிருப்பது, அடிப்படையில் அதிலிருந்தும் அவர் வெளியேறிவிட்டார் என்பதையே குறிக்கிறது.
நீரஜ் சோப்ராவின் விலகல் பதிவு
— Neeraj Chopra (@Neeraj_chopra1) August 29, 2026
நீரஜ் தனது பதிவில், “மிகுந்த கடின உழைப்பிற்குப் பிறகு, லோசானில் நான் வீசிய ‘இந்த சீசனின் சிறந்த எறிதல்’ மூலம் நான் தேடிக்கொண்டிருந்த தாளத்தைக் கண்டதாக உணர்ந்தேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, சிறிது காலத்திற்குப் பிறகு, பயிற்சியின் போது எனது கணுக்காலில் தசைநார் கிழிவு ஏற்பட்டது. மருத்துவர் மற்றும் அணியுடன் கலந்தாலோசித்த பிறகு, இந்த சீசனின் மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன். இது ஏமாற்றமளிக்கிறது, குறிப்பாக நான் எனது இயல்பான ஆட்டத்திறனைக் கண்டறியும் தருவாயில் இருப்பதாக உணர்ந்ததால். ஆனால், சொல்வது போல, பின்னடைவுகள் பயணத்தின் ஒரு பகுதி. இப்போது எனது கவனம், நன்றாகக் குணமடைந்து இன்னும் வலிமையாகத் திரும்புவதில் உள்ளது.” என்று தெரிவித்திருந்தார்.
ALSO READ: டைமண்ட் லீக் பைனலுக்கு நீரஜ் சோப்ரா தகுதி.. இறுதிப்போட்டி எப்போது? எங்கே?
கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா:
கடந்த 2023ம் ஆண்டு நடைபெற்ற கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார். சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்ற இப்போட்டியில், அவர் 88.88 மீட்டர் தூரம் எறிந்தார். கிஷோர் ஜெனா வெள்ளிப் பதக்கத்தை வென்றார். ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா இரட்டைப் பதக்கம் வென்றது.