சொன்னதை விட அதிகமாக வந்த மாப்பிள்ளை உறவினர்கள்.. உணவில் பேதி மாத்திரை கலந்த மணமகளின் தந்தை.. பீகாரில் சுவாரஸ்ய சம்பவம்!
Bride's Father Mixed Dysentery Tablet In Food | பீகாரில் திருமண நிகழ்ச்சியில் மாப்பிள்ளை வீட்டார் சொன்னதை விட 100 பேர் கூடுதலாக திருமண விருந்திற்கு வந்த நிலையில், ஆத்திரமடைந்த மகணமளின் தந்தை உணவில் பெதி மாத்திரை கலந்த சம்பவம் பேருபொருளாக மாறியுள்ளது.
பாட்னா, மே 28 : பீகாரில் (Bihar) திருமண நிகழ்ச்சியின் போது மாப்பிள்ளை வீட்டாரை பழிவாங்க மணகளின் தந்தை செய்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சொன்னதை விட மாப்பிள்ளை வீட்டின் தரப்பில் இருந்து அதிக உறவினர்கள் திருமண விருந்துக்கு வந்த நிலையில், மாப்பிள்ளை வீட்டுக்கு பாடம் புகட்டும் வகையில் அவர் உணவில் பேதி மாத்திரைகளை கலந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
சொன்னதை விட அதிக உறவினர்களை அழைத்து வந்ததால் ஆத்திரம்
பீகார் மாநிலம், சிவான் பகுதியில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு மாப்பிள்ளை தரப்பில் இருந்து வெறும் 100 பேர் மட்டுமே திருமண விருந்திற்கு வருவார்கள் என மணமகளின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், திருமணத்தன்று சொன்னதை விட அதிகமாக, அதாவது 100 பேர் சொன்ன இடத்தில் 200 பேர் வந்துள்ளனர். இதன் காரணமாக, திருமண விருந்திற்கு திட்டமிட்டிருந்த பெண் வீட்டாருக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க : சிபிஎஸ்இ தேர்வு மதிப்பீட்டில் 40 கோடி பக்கங்கள் ஸ்கேன்- ஓஎஸ்எம் அமைப்பு குறித்து விளக்கிய தர்மேந்திர பிரதான்!
உணவில் பேதி மாத்திரைகளை கலந்த மணமகளின் தந்தை
மாப்பிள்ளை வீட்டாரின் இந்த அலட்சியமான செயல், மணமகளின் தந்தைக்கு கடும் ஆத்திரத்தை வரவழைத்துள்ளது. இதன் காரணமாக அவர், மாப்பிள்ளை வீட்டுக்கு பாடம் கற்பிக்க விரும்பியுள்ளார். அதன் காரணமாக, மாப்பிள்ளை வீட்டாருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பிரியாணி, இனிப்பு உள்ளிட்ட உணவு பொருட்களில் பேதி மாத்திரைகளை கலந்துள்ளார்.
இதையும் படிங்க : கர்நாடகாவில் அடுத்தடுத்து திருப்பம்.. முழுவதாக மாறப்போகும் அமைச்சரவை.. அடுத்து என்ன?
போதிய கழிவறைகள் இல்லாமல் மண்டபத்தை விட்டு ஓடிய உறவினர்கள்
அதனை தொடர்ந்து, உணவு சாப்பிட்ட மாப்பிள்ளை வீட்டாருக்கு அடுத்தடுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. திருமண மண்டபத்தில் போதிய அளவு கழிவறைகள் இல்லாததால் வேறு வழியின்றி உறவினர்கள் மண்டபத்தை விட்டு வெளியேறி அருகில் உள்ள நதிக்கரைக்கு சென்றுள்ளனர். இதன் காரணமாக அந்த திருமண விழாவில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த வித ஆபத்தும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் அந்த பகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது.