AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகம் டூ டெல்லி.. முப்படைகளின் 3- ஆவது தலைமை தளபதி.. யார் இந்த ராஜா சுப்ரமணி!

Chief Of Defence Staff Raja Subramani: இந்திய முப்படைகளின் 3- ஆவது தலைமை தளபதியாக தமிழகத்தை பூர்விகமாக கொண்ட ராஜா சுப்ரமணி என்பவர் இன்று பதவி ஏற்றுக் கொண்டார். ராஜா சுப்ரமணி என்பவர் குறித்த முழு விவரங்களை இந்தப்பதிவில் பார்க்கலாம்.

தமிழகம் டூ டெல்லி.. முப்படைகளின் 3- ஆவது தலைமை தளபதி.. யார் இந்த ராஜா சுப்ரமணி!
முப்படைகளின் தலைமை தளபதி ராஜா சுப்ரமணி
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 31 May 2026 14:39 PM IST

இந்தியாவின் புதிய முப்படைகளின் தலைமை தளபதியாக ஜெனரல் என். எஸ். ராஜா சுப்ரமணி இன்று ஞாயிற்றுக்கிழமை ( மே 31- ஆம் தேதி) பொறுப்பேற்றுக்கொண்டார். பாகிஸ்தான் மற்றும் சீனா குறித்த நிபுணர் என்று பரவலாக அறியப்படும் இவர் லட்சியம் மிக்க ராணுவ போர்க்களமயமாக்கல் திட்டத்தை செயல்படுத்துவது மற்றும் முப்படைகளின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது ஆகிய முதன்மை பொறுப்புகளுடன் இன்று முப்படைகளின் தலைமை தளபதியாக பதவியேற்றார். இவர், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் ராணுவ ஆலோசகராக பணியாற்றியுள்ளார். கடந்த ஜூலை 31- ஆம் தேதி ராணுவ துணை தலைமை தளபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். பதவி ஏற்ற சிறிது நேரத்திலேயே முப்படைகளின் ஒருங்கிணைப்பையும், ஒத்திசைவையும் மேம்படுத்துவதற்கான அமைப்பு சார் சீர்திருத்தங்களும் ஆயுத படைகளின் உருமாற்றமும் தனது முதன்மை நோக்கம் என்று கர்ஜித்தார்.

பிராந்திய ஒருமைப்பாட்டை காக்க உறுதி பூண்டுள்ளோம்

நமது ஆயுதப்படைகளின் உள் நாட்டு ஆயுதங்களின் மேம்பாடு, ஒருங்கிணைப்பு ஆகியவற்றை விரைவு படுத்தப்படும். தேசிய நலன்களை காப்பதில், நமது பாதுகாப்பு படைகள் தொடர்ச்சியாக தொழில்முறை இதனையும், செயல்பாட்டு தீர்க்கமான முடிவு எடுக்கும் திறன் வெளிப்படுத்தி உள்ளன. நமது நாட்டின் இறையாண்மையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். இந்திய குடிமக்களுக்கு நான் ஒரு உறுதியளிக்கிறேன். ஆயுதப்படைகள் அர்ப்பணிப்பு, துணிவு, கண்ணியம் மற்றும் தொழில் முறை திறனுடன் தேசத்துக்கு தொடர்ந்து சேவை செய்யும்.

மேலும் படிக்க: 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மாம்பழங்களுக்கு ஜப்பான் தடை: காரணம் என்ன?

40 ஆண்டுகளுக்கும் மேலாக ராணுவ பணி

உள்நாட்டு ஆயுத அமைப்புகளின் மேம்பாடு மற்றும் அவற்றை ஆயுதப்படைகளில் சேர்ப்பது மற்றும் ஒருங்கிணைப்புகளை விரைவுப்படுத்துவதற்காக பாடுபடுவேன். பாதுகாப்பு படை தலைமை தளபதியாக ஒருங்கிணைந்த ராணுவ கட்டளைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் களமயமாக்கல் மாதிரியை செயல்படுத்துவதே ஜெனரல் சுப்பிரமணியின் முதன்மை பணியாக இருக்கும். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த தனது புகழ்பெற்ற பணி காலத்தில் பல்வேறு வகையான மோதல்கள் மற்றும் நிலப்பரப்புகளில் பணியாற்றியதோடு ஏராளமான கட்டளை, பணியாளர் மற்றும் பயிற்சி வகுப்பு பதவிகளை வைத்துள்ளார். அதன்படி,

  • 2024 ஜூலை 1 முதல் 2025 ஜூலை 31 வரை ராணுவ தலைமை துணை தளபதியாக பணிபுரிந்துள்ளார்.
  • 2023 மார்ச் முதல் 2024 ஜூன் வரை மத்திய கட்டளை பிரிவின் தலைமை தளபதியாக பணியாற்றி உள்ளார்.
  • தேசிய பாதுகாப்பு அகாதமி மற்றும் இந்திய ராணுவ அகாதமி ஆகியவற்றில் பட்டம் பெற்றவர்.
  • 1985 டிசம்பர் 14- ஆம் தேதி கார்வால் ரைபிலின் 8- ஆவது பட்டாலியன் அதிகாரியாக பணிபுரிந்துள்ளார்.
  • இங்கிலாந்தின் பிராக்னெல் நகரில் கூட்டு படைகள் கட்டளை, பணியாளர் கல்லூரி, தேசிய பாதுகாப்பு கல்லூரி ஆகியவற்றை முன்னாள் மாணவர் ஆவார்.
  • லண்டன் கிங்ஸ் கல்லூரியில் முதுகலை பட்டம், சென்னை பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஆய்வில் எம்ஃபில் பட்டம் பெற்றுள்ளார்.
  • தமிழ்நாட்டில் சென்னையை பூர்விகமாக கொண்டவர் ஆவார்.

மேலும் படிக்க: காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் நடப்பட்ட 13.4 கோடி மரங்கள் – 1.2 கோடி மரக்கன்றுகள் இலக்கு

Follow Us