AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் நடப்பட்ட 13.4 கோடி மரங்கள் – 1.2 கோடி மரக்கன்றுகள் இலக்கு

சத்குரு தொடங்கிய மண்ணை காப்போம், காவிரி கூக்குரல் இயக்கம் இதுவரை 13.4 கோடி மரங்களை நடப்பட்டு, 2.6 லட்சம் விவசாயிகளை மர அடிப்படையிலான விவசாயத்திற்கு மாற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் 2026-27ஆம் ஆண்டில் 1.2 கோடி மரக்கன்றுகளை நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் நடப்பட்ட 13.4 கோடி மரங்கள்  – 1.2 கோடி மரக்கன்றுகள் இலக்கு
Cauvery Calling
Karthikeyan S
Karthikeyan S | Published: 30 May 2026 15:08 PM IST

சத்குரு தொடங்கிய மண்ணை காப்போம், காவிரி கூக்குரல் இயக்கம் இதுவரை 13.4 கோடி மரங்களை நடப்பட்டு, 2.6 லட்சம் விவசாயிகளை மர அடிப்படையிலான விவசாயத்திற்கு மாற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் 2026-27ஆம் ஆண்டில் 1.2 கோடி மரக்கன்றுகளை நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதுதில்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த தகவலை திட்ட இயக்குநர் ஆனந்த் எதிராஜுலு தெரிவித்தார். காவிரி நதியை மீட்டெடுத்து, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் சத்குருவின் வழிகாட்டுதலின் கீழ் இந்த இயக்கம் செயல்பட்டு வருகிறது.

70 ஆண்டுகளில் 40% நீர்வரத்து குறைவு

காவிரி நதி கடந்த 70 ஆண்டுகளில் தனது நீர்வரத்தில் 40 சதவீதத்திற்கும் அதிகமான அளவை இழந்துள்ளதாகவும், அதன் இயற்கை மரக்கவசத்தில் 87 சதவீதம் அழிந்துவிட்டதாகவும் அவர் கூறினார். இதனை சரிசெய்ய தனியார் விவசாய நிலங்களில் மொத்தம் 242 கோடி மரங்களை நட வேண்டும் என்ற இலக்குடன் காவிரி காலிங் இயக்கம் செயல்பட்டு வருகிறது.

இதுகுறித்து பேசிய ஆனந்த் எதிராஜுலு, 13.4 கோடி மரங்கள் என்பது வெறும் எண்ணிக்கை அல்ல. அதன் பின்னால் 2.6 லட்சம் விவசாயிகள் தங்களது விவசாய முறையை நிரந்தரமாக மாற்றியுள்ளனர். ஒற்றை பயிர் சாகுபடியில் இருந்து மர அடிப்படையிலான விவசாயத்திற்கு மாறியுள்ள இந்த மாற்றமே எதிர்காலத்தில் காவிரி ஆண்டு முழுவதும் ஓடுவதற்கு உதவும்” என்றார்.

மரங்களின் அடிப்படையிலான விவசாயம் மூலம், மண் வளம் மேம்படுகிறது, நீரை சேமிக்கும் திறன் அதிகரிக்கிறது. நிலத்தடி நீர் உயர்கிறது. விவசாயிகளின் வருமானம் பல மடங்கு அதிகரிக்கிறது என அவர் தெரிவித்தார்.

ஐ.நா. விருது பெற்ற தமிழ்நாடு விவசாயி

செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 58 வயது விவசாயி வள்ளுவன், தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) நடத்திய Soil Health Guardians என்ற போட்டியில் 2024ஆம் ஆண்டு வள்ளுவன் விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அவர் கூறுகையில், குறைந்த விவசாயம், கவர் கிராப்பிங் போன்ற முறைகளை பின்பற்றியதன் மூலம் மண்ணின் வளம் அதிகரித்தது. தென்னை தோட்டத்தை பல அடுக்குகள் கொண்ட உணவுக் காடாக மாற்றினேன். மரவகைகள், மிளகு, பழவகைகள் ஆகியவற்றை இணைத்து சாகுபடி செய்ததால் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு குறைந்தது. மேலும் என் வருமானம் ஆறு மடங்கு அதிகரித்துள்ளது” என்றார்.

காவேரி கூக்குரல் இயக்கத்தின் கீழ். கடலூரில் முழுமையாக பெண்களால் நிர்வகிக்கப்படும் ஆசியாவின் மிகப்பெரிய நர்சரி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்டுக்கு 85 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. திருவண்ணாமலையில் மேலும் 15 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த இரண்டு மையங்கள் மூலம் தமிழ்நாட்டில் 45 விநியோக மையங்களுக்கும், கர்நாடகாவில் 8 மையங்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன.

இதன் மூலம் விவசாயிகளுக்கு தேக்கு, செம்மரம், ரோஸ்வுட் உள்ளிட்ட 29 உயர்மதிப்புள்ள மரவகைகள் வழங்கப்படுகின்றன. மரவகை கன்றுகள் வெறும் ₹5க்கும், பழம் மற்றும் பூ வகை கன்றுகள் ரூ.10க்கும் வழங்கப்படுகின்றன.

Follow Us