AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பாகிஸ்தான் உளவு அமைப்போடு ரகசிய தொடர்பு.. காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் பிடியில் சிக்கிய நபர்!

Jammu And Kashmir Man Arrested: பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் உளவாளிக்கு இந்திய ராணுவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பியதாக ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் மற்றும் இந்திய ராணுவத்தினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாகிஸ்தான் உளவு அமைப்போடு ரகசிய தொடர்பு.. காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் பிடியில் சிக்கிய நபர்!
ஜம்மு காஷ்மீரில் ஒருவர் கைது
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 28 May 2026 14:40 PM IST

ஜம்மு காஷ்மீர் மாநிலம், மக்வால் கிராமத்தை சேர்ந்தவர் கரண். இவர், சில மாதங்களுக்கு முன்பு ஸ்னாப் சாட் மூலம் ஐ. எஸ். ஐ. தீவிரவாத அமைப்பை சேர்ந்த ஒரு பெண் உளவாளியால் ஏமாற்றப்பட்டதாகவும், பாகிஸ்தானின் இன்டர் சர்வீசஸ் இன்டெலிஜென்சிகாக உழவு பார்த்ததாக கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்தனர். இவர், பஞ்சாபில் எல்லை பாதுகாப்பு படை வீரர் போல நடித்து அடிக்கடி அந்த பெண் உளவாளியிடம் பேசியது மற்றும் ஆபாச வீடியோ அழைப்புகள் மேற்கொண்டது ஆகியவற்றை போலீசார் ஆதாரமாக சேகரித்தனர். மேலும், கரண் தன் செல்வாக்கின் கீழ் இருப்பதை அந்த பெண் உறுதி செய்தவுடன் ராஜெளரியின் சுந்தர்பானி பகுதிக்கு தான் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், அங்கு செல்போன் இணைப்பு மோசமாக இருப்பதாகவும் கூறி ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒருவரின் வாட்ஸ் ஆப் கடவுச்சொல்லை கேட்டுள்ளார்.

ராணுவ பதுங்கு குழிகள்-பாதுகாப்பு தளங்கள்

இதற்கு, காரணம் தனது தாயின் வாட்ஸ் ஆப் ஓடிபியை அந்த பெண்ணுக்கு பகிர்ந்து உள்ளார். அதன் மூலம், அந்த பெண் தீவிரவாதி கரணின் தாய் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி உள்ளார். இதைத் தொடர்ந்து, அந்த பெண் உளவாளி ஜம்மு அருகே உள்ள ராணுவ பதுங்கு குழிகள், பாதுகாப்பு தளங்கள், மேம்பாலங்களின் புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை அனுப்புமாறு கரணிடம் கூறினார். இதற்காக காரணின் வங்கி கணக்கு முதல் தவணையாக ரூ.2,000 உள்ளார். அவர் மேலும் பணம் கேட்டபோது, ராணுவ உளவுத்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டது.

மேலும் படிக்க: ‘வெப்ப அலை’ எச்சரிக்கை.. “வெளியில் செல்வதைத் தவிருங்கள்”.. நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி முக்கிய அறிவுறுத்தல்!!

ராணுவ உளவுத்துறையின் ரகசிய கண்காணிப்பு

அதன்படி, ராணுவ உளவுத்துறை அவரை ரகசிய கண்காணிப்பில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதில், அவரது உளவு நடவடிக்கை உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஜம்முவில் உள்ள காவல்துறைக்கு ராணுவம் தகவல் தெரிவித்தது. அதன் அடிப்படையில், போலீஸ் படை மக்வாலில் கரணை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரது செல்போனை பறிமுதல் செய்த போலீசார் அதில் சமூக ஊடக கணக்கில் மற்றும் டிஜிட்டல் தளங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். விசாரணையின் போது அவர் முக்கியமான தகவல்களை பகிர்ந்தது ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

பதான்கோட்டில் எல்லை தாண்டிய நடமாட்டம்

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பஞ்சாபில் பதான்கோட்டில் ஜம்மு- பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள சுஜன் போரில் ராணுவ மற்றும் துணை ராணுவ படையினர் வாகன அணிவகுப்பின் போது மர்ம நபர்களின் நடமாட்டம் எல்லை தாண்டி உள்ளது. கையாளுனர்களுக்காக நேரலையில் ஒளிபரப்புவதற்காக சிசிடிவி கேமராவை பொருத்தியதாக கூறப்படும் பல்ஜித் சிங் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க: எரிபொருள் விலை உயர்வு.. உள்நாட்டு விமானச் சேவைகளை அதிரடியாகக் குறைக்க திட்டம்.. ஷாக் தகவல்!!

Follow Us