AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மனைவியை நண்பர்களுக்கு ரூ.50,000-க்கு விற்ற கணவன்.. ஒரு வாரம் தொடர்ந்து பெண்ணுக்கு நடந்த கொடூரம்.. அதிர்ச்சி சம்பவம்!

Man Sold Wife To Friends | குஜராத்தை சேர்ந்த நிகேஷ் என்ற நபர் தனது மனைவியை தனது நண்பர்களுக்கு ரூ.50,000-க்கு விற்பனை செய்துள்ளார். அவர்கள், அந்த பெண்ணை ஒரு அறையில் அடைத்து வைத்து தொடர்ந்து 7 நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

மனைவியை நண்பர்களுக்கு ரூ.50,000-க்கு விற்ற கணவன்.. ஒரு வாரம் தொடர்ந்து பெண்ணுக்கு நடந்த கொடூரம்.. அதிர்ச்சி சம்பவம்!
மனைவியை நண்பர்களுக்கு விற்ற நபர்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 28 May 2026 00:53 AM IST

பலான்பூர், மே 27 : குஜராத்தின் (Gujarat) பலான்பூர் நகரில் வசித்து வருபவர் நிகேஷ் படேல். இவருக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இருவரும் கணவன் – மனைவியாக வாழ்ந்து வந்த நிலையில், தனது மனைவியை காணவில்லை என கூறி அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

ரூ.50,000 பணத்துக்காக மனைவியை நண்பர்களுக்கு விற்ற கணவர்

நிகேஷ் அவரது நண்பர்கள் சஞ்சய் தாகூர், அஷோக் தாகூர் மற்றும் சச்சின் தாகூர் ஆகியோரிடம் ரூ.50,000 பெற்றுக்கொண்டு தனது மனைவியை அவர்களிடம் விற்றுள்ளார். இந்த நிலையில், அவர்கள் மூவரும் நிகேஷின் மனைவியை ஒரு அறையில் அடைத்து வைத்து அடுத்தடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். ஏழு நாட்களாக அந்த பெண்ணுக்கு இந்த கொடுமைகள் நடந்துள்ளன.

இதையும் படிங்க : இந்தியாவில் நுழைந்தது எபோலா?.. உகாண்டாவில் இருந்து பெங்களூரு திரும்பிய பெண்ணுக்கு அறிகுறி

10 பேரை கைது செய்து விசாரணை மேற்கொள்ளும் காவல்துறை

பெண்ணை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த நிலையில், மறைத்து வைக்கப்பட்டு இருந்த அந்த பெண்ணை மீட்டு போலீசார் கவுன்சிலிங் வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய 10 பேரை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சைக்கோ மனநிலையில் நிகேஷ் – காவல்துறை அதிகாரி சொன்ன பகீர் தகவல்கள்

இந்த விவகாரம் தொடர்பாக கூறிய காவல்துறை சூப்பிரெண்டு கேமித், நிகேஷ் சைக்கோ மனநிலையில் இருந்துள்ளார். திருமணம் முடிந்து 12 ஆண்டுகள் கடந்தபோதும் வேறும் 2 பெண்களுடன் அவர் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார். மனைவியை பிடிக்கவில்லை என்று அவர் விவாகரத்து செய்யவும் முயற்சி செய்துள்ளார்.

இதையும் படிங்க : NEET 2026 கட்டணம் திரும்பப் பெற இன்றே கடைசி நாள்.. இதை உடனே பண்ணுங்க!

இந்த நிலையில் தான், மனைவியை நண்பர்களுக்கு விற்றுவிட்டு அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் வேறு ஒரு பெண்ணை வீட்டிற்கு அழைத்துவர முயற்சி செய்துள்ளார். இந்த கொடூர சம்பவம் குறித்து போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us