AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்தியாவில் நுழைந்தது எபோலா?.. உகாண்டாவில் இருந்து பெங்களூரு திரும்பிய பெண்ணுக்கு அறிகுறி!!

Ebola scare in Bengaluru: அதன்படி, உகாண்டாவில் இருந்து பெங்களூரு கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த அந்தப் பெண்ணுக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அந்தப் பெண்ணுக்கு லேசான உடல் வலி மற்றும் எபோலா வைரஸ் தாக்கத்திற்கான ஆரம்பக்கால அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்தியாவில் நுழைந்தது எபோலா?..  உகாண்டாவில் இருந்து பெங்களூரு திரும்பிய பெண்ணுக்கு அறிகுறி!!
மாதிரிப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 27 May 2026 10:49 AM IST

ஆப்பிரிக்க நாடுகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் எபோலா வைரஸ் (Ebola Virus) பாதிப்பு, இந்தியாவிலும் நுழைந்துவிட்டதோ என்ற பலத்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் இருந்து சமீபத்தில் பெங்களூரு திரும்பிய ஒரு பெண்ணுக்கு எபோலா வைரஸ் தாக்கத்திற்கான தீவிர அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, அவர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கெம்பகவுடா விமான நிலையத்தில் தீவிர சோதனைஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளில் எபோலா வைரஸ் பரவி வருவதால், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களிலேயே தீவிர முன்னெச்சரிக்கை சோதனைகளை நடத்த இந்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது.

இதையும் படிக்க: ‘தீவிரமெடுக்கும் எபோலா வைரஸ் பரவல்’.. இந்த நாடுகளுக்கு அவசியமின்றி பயணிப்பதை தவிர்க்க மத்திய அரசு அறிவுறுத்தல்!

பெங்களூரு வந்த பெண்ணுக்கு அறிகுறி:

அதன்படி, உகாண்டாவில் இருந்து பெங்களூரு கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த அந்தப் பெண்ணுக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அந்தப் பெண்ணுக்கு லேசான உடல் வலி மற்றும் எபோலா வைரஸ் தாக்கத்திற்கான ஆரம்பக்கால அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு, பெங்களூருவில் உள்ள அரசு நடத்தும் தொற்றுநோய் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பு மற்றும் மேலதிக மதிப்பீட்டிற்காகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

மருத்துவமனை அறிக்கை மற்றும் இரத்தப் பரிசோதனை:

தனிமைப்படுத்தப்பட்டுள்ள அந்தப் பெண்ணின் தற்போதைய உடல்நிலை குறித்து தொற்றுநோய் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு லேசான உடல் வலி மட்டுமே உள்ளது. அதைத் தவிர்த்து அவர் தற்போதைக்கு ஆரோக்கியமான நிலையிலேயே காணப்படுகிறார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரது இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, இறுதி உறுதிப்படுத்தலுக்காகப் பூனேவில் உள்ள தேசிய நச்சுயிரி நிறுவனம் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தற்போதைக்கு அந்தப் பரிசோதனை முடிவுகளுக்காகக் காத்திருக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம், கர்நாடக மாநில சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து இந்தச் சூழலை மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. உலக சுகாதார அமைப்பின் (WHO) வழிகாட்டுதலின்படி தேவையான அனைத்து பொதுச் சுகாதார நெறிமுறைகளும் முறையாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன. அதேநேரம், தற்போதைய நிலை வரை இந்தியாவில் யாருக்கும் எபோலா வைரஸ் பாதிப்பு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பெங்களூரில் ஏர் இந்தியா விமானம் விபத்து… “டெய்ல் ஸ்ட்ரைக்” குறித்து பரபரப்பு தகவல்!

மத்திய சுகாதாரத்துறையின் முன்னெச்சரிக்கை:

ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளில் எபோலா வைரஸ் தாக்கம் தொடர்ந்து பரவி வருவதால் உலக நாடுகள் அனைத்தும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஏற்கனவே வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களிலேயே தீவிர முன்னெச்சரிக்கை சோதனைகளை நடத்த உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us