உலக அளவில் முதல் இடம்… தேநீர் தரவரிசையில் மகுடம் சூடிய “இந்தியாவின் மசாலா டீ”
India Masala Tea Ranks First : உலக அளவில் தேநீர் தொடர்பாக டேஸ்ட் அட்லஸ் சார்பில் திரட்டப்பட்ட பட்டியலில் முதல் 100 தேநீரில் இந்தியாவில் பிரபலமான மசாலா டீ முதல் இடத்தை பிடித்துள்ளது. இது உலக அளவில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.
இந்தியாவில் மசாலா டீ என்பது ஒரு சாதாரண டீயாக மட்டும் இல்லாமல் அன்றாட வாழ்வில் ஒரு இன்றியமையாத அங்கமாக மாறி உள்ளது. இந்தியாவின் மிக பிரபலமான மசாலா டீ உலகின் சிறந்த 100 தேனீர்களின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து உலக அளவில் பாராட்டைப் பெற்றுள்ளது. இந்தியாவில் ஏலக்காய், இஞ்சி, கட்டிங் டீ என பலர் விரும்பும் பல விதமான தேநீர் வகைகள் இருந்து வருகின்றன. இருந்தாலும் நாடு முழுவதும் தேநீர் பிரியர்களின் முக்கிய தேர்வாக மசாலா டீ க்கு எப்போதும் ஒரு தனி இடம் இருந்து வருகிறது. பொதுவாக மசாலா டீ கருப்பு தேநீர், பால், சர்க்கரை மற்றும் ஏலக்காய், இஞ்சி, லவங்கப்பட்டை, கிராம்பு, மிளகு போன்ற நறுமண மசாலா பொருட்களின் கலவையுடன் காய்ச்சி தயார் செய்யப்படுகிறது. அப்படி அடிப்படை செய்முறை மாறாமல் இருந்தாலும் ஒவ்வொரு குடும்பத்தினரும் மற்றும் தேநீர் விற்பனையாளர்கள் தங்களின் தனித்துவமான மாற்றங்களை சேர்ப்பதன் மூலம் மசாலா டீ ஒரு தனி சுவையே பெறுகிறது.
மேலும் படிக்க: Viral Video : வியட்நாம் விமான நிலையத்தில் கப்ரா நடனமாடிய இந்தியர்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
உலகம் முழுவதும் பிரபலம் அடைந்த மசாலா டீ
கடந்த சில ஆண்டுகளாக மசாலா டீ உலக அளவில் பிரபலம் அடைந்துள்ளது. மேலும், பல்வேறு சர்வதேச கஃபேக்கள் மற்றும் மெனுக்களில் இந்தியாவின் மசாலா டீ இடம் பெற செய்துள்ளனர். இருந்தாலும் பெரும்பாலான மக்கள் சாலையோர கடைகளில் தேநீர் அருந்தவே விரும்புகின்றனர். மசாலா டீ கடந்த 19- ஆம் நூற்றாண்டின் பிரிட்டிஷ் தேயிலை வர்த்தகத்துடன் நெருங்கிய தொடர்புடையதாகும். அந்த காலத்தில் தேயிலை சந்தையில் சீனா பெரிய அளவிலான உரிமையை கொண்டிருந்தது.




19- ஆம் நூற்றாண்டில் தொடங்கிய மசாலா டீ
ஐரோப்பாவில் கருப்பு தேயிலைக்கான தேவை அதிகரித்து வந்ததன் காரணத்தால் பிரிட்டிஷார் தேயிலை சாகுபடிக்காக மாற்று இடங்களை தேடத் தொடங்கினார். அதன்படி அவர்கள் இந்தியாவில் தேயிலை தோட்டங்களை அமைத்தனர். இந்த காலக் கட்டத்தில் தான் மசாலா டீ முதன் முதலில் தோன்றியதாகவும் 20- ஆம் நூற்றாண்டில் தான் பரவலாக பிரபலமானது என்று டேஸ்ட் அட்லஸ் குறிப்பிடுகிறது. இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள பல தேயிலை வகைகள் இந்தியாவை சேர்ந்தவை ஆகும். இதில்,
- 1- ஆம் இடத்தில் மசாலா டீ.
- 16- ஆவது இடத்தில் டார்ஜிலிங் தேநீர்.
- 13- ஆவது இடத்தில் ( அசாம்) சாய் டீ.
- 39- ஆவது இடத்தில் ( கேரளம்) சுலைமான் டீ.
- 41- ஆவது இடத்தில் (ஹிமாச்சல பிரதேசம்) காங்ரா டீ.
- 43- ஆவது இடத்தில் (ஜம்மு காஷ்மீர்) நூன் டீ. ஆகிய டீ வகைகள் இடம் பெற்றுள்ளது.
மேலும் படிக்க: பாகிஸ்தான் உளவு அமைப்போடு ரகசிய தொடர்பு.. காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் பிடியில் சிக்கிய நபர்!