AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : ரயிலில் விற்பனை செய்ய இருந்த சமோசாக்களின் மீது கால் வைத்திருந்த வியாபாரி.. இணையத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வீடியோ!

Man Placed Foot On Samosas Before Selling It | சமூக ஊடகங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், ஓடும் ரயிலில் வியாபாரி ஒருவர் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த சமோசாக்களின் மீது கால் வைத்து பயணம் செய்யும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Viral Video : ரயிலில் விற்பனை செய்ய இருந்த சமோசாக்களின் மீது கால் வைத்திருந்த வியாபாரி.. இணையத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 26 May 2026 23:21 PM IST

இந்த உலகில் நம்மை சுற்றி நடைபெறும் சுவாரஸ்யமான, முக்கியமான சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் நாளுக்கு நாள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகும். சில குற்ற சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களுக்கு கடும் கண்டங்கள் எழுந்து அதற்காம உரிய தண்டனையும் பெற்று தரப்படும். இந்த நிலையில், ஓடும் ரயிலில் சமோசா வியாபாரி ஒருவர், சமோசாக்களின் மீது காலை வைத்துக்கொண்டு பயணம் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

சமோசாக்களின் மீது கால் வைத்து பயணம் செய்த வியாபாரி

இந்திய ரயில்களில் பயணம் செய்யும்போது தவிர்க்க முடியாத ஒன்றாக வடை, சமோசா போன்ற சிற்றுண்டிகள் இருக்கும். என்னதான் ரயில் பயணத்தின்போது இந்த வடை, சமோசா உள்ளிட்டவை அதிக மக்களால் விரும்பி சாப்பிடப்பட்டாலும், அவற்றின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுப்பட்டு வருகின்றன. சில சமயங்களில் சுகாதாரமற்ற முறையில் அந்த உணவு பொருட்கள் தயாரிக்கப்படுவது மற்றும் விற்பனை செய்யப்படுவது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் தான் தற்போது இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : திடீர் ட்ரெண்டான கரப்பான்பூச்சி கட்சி.. சோஷியல் மீடியாவில் குவியும் ஆதரவாளர்கள்.. என்ன நடந்தது?

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் சமோசா வியாபாரி ஒருவர் ரயிலில் கீழே அமர்ந்துக்கொண்டு தொலைபேசியில் பேசிக்கொண்டு இருக்கிறார். அவர் தனது காலை, தான் விற்பனை செய்வதற்காக வைத்திருக்கும் சமோசா கூடையில் வைத்துக்கொண்டு இருக்கிறார். இதனை ஒரு நபர் ரகசியமாக வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : கடையை தேடு வரும் மாடு.. தினந்தோறும் தோசை சுட்டு கொடுக்கும் உரிமையாளர்.. இணையத்தை கவர்ந்த வீடியோ!

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், அந்த வியாபாரியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து பலரும் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.

Follow Us