யூடியூபில் இனி ஏஐ வீடியோக்கள் குறித்த கவலை இல்லை.. அசத்தல் அம்சம் அறிமுகம்!
No Worries About AI Videos In YouTube | தற்போதைய காலக்கட்டத்தில் செயற்கை நுண்ணறிவு அம்சம் நுழையாத துறைகளையே பார்க்க முடியாது. அந்த அளவிற்கு அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில், யூடியூப் ஏஐ வீடியோக்களை கண்டறிய அசத்தல் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.
உலகத்தையே ஆட்டி படைக்கும் ஒரு அசத்தலான தொழில்நுட்ப அம்சமாக செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) உருவெடுத்துள்ளது. தற்போதைய சூழலில் செயற்கை நுண்ணறிவு நுழையாத துறைகளே இல்லை. அறிவியல், மருத்துவம், கல்வி என அனைத்து துறைகளிலும் மிக பரவலாக செயற்கை நுண்ணறிவு அம்சம் பயன்படுத்தப்படுகிறது. அதிலும் சமூக ஊடகங்களில் செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் ஆதிக்கம் மிக அதிகமாகவே உள்ளது. குறிப்பாக, சமூக ஊடகங்களில் ஏஐ வீடியோக்கள் மிக பரவலாக வைரலாகி வருகின்றன. இந்த நிலையில் தான் ஏஐ வீடியோக்களை கண்டறியும் வகையில் புதிய அம்சத்தை யூடியூப் (YouTube) அறிமுகம் செய்துள்ளது. அது என்ன அம்சம், எப்படி செயல்படும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
யூடியூபில் ஆதிக்கம் செலுத்தும் ஏஐ வீடியோக்கள்
கூகுளின், யூடியூபை பயன்படுத்தாத நபர்களே இருக்க மாட்டார்கள். வீடியோ பார்ப்பது, படம் பார்ப்பது, பாடல்கள் கேட்பது என பல விதமான பொழுதுபோக்கு அம்சங்களை பொதுமக்கள் யூடியூப் மூலம் பெற்று வருகின்றனர். முன்பெல்லாம் மனிதர்களால் உருவாக்கப்படும் வீடியோக்கள், திரைப்படங்களின் பாடல்கள் மற்றும் வீடியோக்கள் யூடியூபில் பகிரப்படும். ஆனால், தற்போது செயற்கை நுண்ணறிவு அம்சத்தால் உருவாக்கப்பட்ட வீடியோக்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. பல போலி வீடியோக்களும் வைரலாகி வருகின்றன. இதன் காரணமாக எது உண்மை என தெரியாமல் பயனர்கள் குழம்பி வருகின்றனர். இந்த நிலையில் தான் ஏஐ வீடியோக்களை கண்டுபிடிக்க யூடியூபில் இந்த புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : வாட்ஸ்அப்பில் நம் சாட் பேக்கப்பிற்கு ஆபத்து? எப்படி தவிர்ப்பது? இதோ எளிய வழி




ஏஐ வீடியோக்களை கண்டுபிடிப்பது எப்படி?
ஏஐ வீடியோக்களை பயனர்கள் மிக எளிதாக கண்டறியும் வகையில், ஏஐ வீடியோக்களின் மீது ஏஐ காட்சிகள் என அடையாள குறிப்பு காட்டப்படும். யூடியூபில் வரும் ஷார்ட்ஸ் வீடியோக்களில் இந்த லேபிள் தோன்றும். இதன் மூலம் பயனர்கள் தாங்கள் பார்க்கும் வீடியோக்கள் உண்மையானதா அல்லது செயற்கை நுண்ணறிவு அம்சத்தால் உருவாக்கப்பட்டதா என்பது குறித்து சுலபமாக தெரிந்துக்கொள்ளலாம்.
இதையும் படிங்க : ஒன்பிளஸ் கம்யூனிட்டி சேல் 2026.. ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி.. எப்போது வரை?
யூடியூபில் ஏஐ வீடியோக்களால் ஏராளமான குழப்பங்கள் நீடித்து வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக யூடியூப் இந்த அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.