AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

7,200 mAh பேட்டரி உடன் விவோ எஸ்60 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.. முழு விவரம் இதோ!

Vivo S60 Series Smartphone Launched In China | இந்தியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள ஸ்மார்ட்போன் நிறுவனமாக விவோ உள்ளது. இந்த நிலையில், அந்த நிறுவனம் தனது விவோ எஸ்60 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

7,200 mAh பேட்டரி உடன் விவோ எஸ்60 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.. முழு விவரம் இதோ!
விவோ எஸ்60 சீரீஸ்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 02 Jun 2026 16:04 PM IST

இந்தியாவில் அதிக மக்களால் பயன்படுத்தக்கூடிய மிக முக்கிய ஸ்மார்ட்போன் (Smartphone) நிறுவனங்களில் ஒன்றாக விவோ (Vivo) உள்ளது. ஏராளமான மக்கள் விவோ ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வரும் நிலையில், அந்த நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தனது விவோ எஸ்60 சீரீஸ் (Vivo S60 Series) ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

விவோ எஸ்60 சீரீஇஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

விவோ நிறுவனம் தனது விவோ எஸ்60 (Vivo S60) மற்றும் எஸ்60இ (Vivo S60e) ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த விவோ எஸ்60 சீரீஸ் ஸ்மார்ட்போன்களில் 90 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் கூடிய 7,200 mAh பேட்டரி அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சீரிஸில் உள்ள இரண்டு ஸ்மார்ட்போன்களும் கையில் வைத்து பயன்படுத்துவதற்கு ஏதுவாக மிகவும் மெல்லிய தோற்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க : அதிகரிக்கும் சைபர் மோசடிகள் – வாட்ஸ்அப்பின் 5 பாதுகாப்பு அம்சங்கள் இதோ

விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

இந்த விவோ எஸ்60 மற்றும் எஸ்60இ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 6.59 இன்ஸ் பிளாட் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் பிரீமியம் மெட்டல் ஃபிரேம் மற்றும் கிளாஸ் ரியர் பேனல்களை கொண்டுள்ளன. ஆனால், இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் வெவ்வேறு பிராசசர்களை கொண்டுள்ளன.

இதையும் படிங்க : ஃபேஸ்புக், இன்ஸ்டா, வாட்ஸ்அப் செயலிகளுக்கு Plus அம்சத்தை அறிமுகம் செய்த மெட்டா.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

விவோ எஸ்60 ஸ்மார்ட்போன் குவால்கம் ஸ்னாப்டிராகன் 8எஸ் கென் 3 சிப்செட் அம்சத்தை கொண்டுள்ள நிலையில், விவோ 60இ ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 7500 பிராசசர் அம்சத்தை கொண்டுள்ளது. புகைப்படம் எடுப்பதற்காக இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 50 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

விவோ எஸ்60 சீரீஸ் – விலை பட்டியல் இதோ

  • 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ எஸ்60இ ஸ்மார்ட்போன் 2,899 யுவானுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.40,703 ஆகும்.
  • 12ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ எஸ்60இ ஸ்மார்ட்போன் 3,599 யுவானுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.50,525 ஆகும்.
  • 12ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ எஸ்60 ஸ்மார்ட்போன் 3,599 யுவானுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, இந்திய மதிப்பில் ரூ.50,255 ஆகும்.
  • 12ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ எஸ்60 ஸ்மார்ட்போன் 3,999 யுவானுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.56,140 ஆகும்.

இந்த ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Follow Us