AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விரைவில் வாட்ஸ்அப்பில் வரும் “Spoiler Messages” அம்சம்.. பயன் என்ன?

WhatsApp Rolling Out Spoiler Messages | வாட்ஸ்அப் தொடர்ந்து பல்வேறு புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது ஸ்பாய்லர் மெசேஜஸ் என்ற அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளது. அதன் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

விரைவில் வாட்ஸ்அப்பில் வரும் “Spoiler Messages” அம்சம்.. பயன் என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 26 May 2026 19:54 PM IST

உலக அளவில் மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் முக்கிய செயலியாக மெட்டா (Meta)  நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) உள்ளது. ஏற்கனவே உள்ள பயனர்களை தக்க வைக்கவும், புதிய பயனர்களை ஈர்க்கும் விதமாகவும் வாட்ஸ்அப்பில் பல்வேறு புதிய புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஸ்பாய்லர் மெசேஜஸ் (Spoiler Messages) என்ற அம்சத்தை வாட்ஸ்அப் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. அது என்ன அம்சம், அதன் சிறப்புகள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஸ்பாய்லர் மெசேஜஸ் அம்சத்தை அறிமுகம் செய்யும் வாட்ஸ்அப்

பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக வாட்ஸ்அப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், பயனர்களின் சாட்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கும் நோக்கில் ஸ்பாய்லர் மெசேஜ் என்ற அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளது. வாபீட்டார் இன்ஃபோ (WABeta Info) தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது, இந்த புதிய அம்சம் புதிய குறுஞ்செய்திகளை Blurred Layers கீழ் மறைக்கும். ஓடிபி, மொபைல் எண் உள்ளிட்ட மிகவும் ரகசியமான மற்றும் முக்கியமான தகவல்களை பாதுகாப்பாக பகிர்ந்துக்கொள்ள இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இதையும் படிங்க : கடும் வெயிலில் காரில் வைக்கக்கூடாத 5 பொருட்கள் – பெரும் விபத்தை ஏற்படுத்தலாம் – நிபுணர்கள் எச்சரிக்கை

ஸ்பாய்லர் மெசேஜ் அம்சம் எப்படி செயல்படும்?

இந்த ஸ்பாய்லர் மெசேஜ் அம்சத்தை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்றால் நீங்கள் மெஜ்சேஜ் அனுப்பும் பகுதியில் டைப் அல்லது பேஸ்ட் செய்ய வேண்டும். அனுப்ப வேண்டிய தகவலை டைப் செய்த பிறகு அதனை லாங் பிரஸ் செய்து தேர்வு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது Translate, Cut, Copy மற்றும் Select All ஆகிய ஆப்ஷன்கள் தோன்றும். அதுமட்டுமன்றி, மூன்று புள்ளிகள் தோன்றும். அதனை கிளிக் செய்யும் பட்சத்தில் Share, Undo, Bold, Italic, Strikethrough, Monospace, Spoiler மற்றும் Manage App ஆகிய அம்சங்கள் தோன்றும்.

இதையும் படிங்க : கூகுளில் ஏஐ பதில்களால் குழப்பமா? அதனை எப்படி நிறுத்துவது?

அவற்றில் Spoiler ஆப்ஷனை தேர்வு செய்து உங்களது ரகசிய தகவல்களை பாதுகாப்பாக அனுப்பலாம். இந்த அம்சம் விரைவில் வாட்ஸ்அப் செயலியில் அமலுக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us