போஸ்ட்பெய்ட் சிம்மில் இண்டர்நெட் ஸ்பீட் அதிகமாக இருக்குமா? உண்மை என்ன?
Postpaid vs Prepaid SIM : சிம் கார்டு வாங்கும் பயனர்கள் பலருக்கும் போஸ்ட்பெய்ட் பயனர்கள் உண்மையில் நல்ல நெட்வொர்க் மற்றும் ஹை ஸ்பீட் இண்டர்நெட்டை பெறுகிறார்களா? அல்லது அது வெறும் விளம்பர யுக்தியா என்ற கேள்வி எழுகிறது. அதுகுறித்து விளக்கமாக பார்க்கலாம்.
ஒரு சிம் கார்ட் வாங்கும் போது, பெரும்பாலான மக்கள் போஸ்ட்பெய்ட் சிம் சிறந்த நெட்வொர்க், அதிக நெட்வொர்க் ஸ்பீட் ஆகியவை கிடைக்கும் என கருதுகின்றனர். பல தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்கள் போஸ்ட்பெய்ட் திட்டங்களை ஒரு பிரீமியம் சேவை என விளம்பரப்படுத்துகின்றன. ஆனால் உண்மையில் போஸ்ட்பெய்ட் பயனர்கள் உண்மையில் நல்ல நெட்வொர்க் மற்றும் ஹை ஸ்பீட் இண்டர்நெட்டை பெறுகிறார்களா? அல்லது அது வெறும் விளம்பர யுக்தியா என்ற கேள்வி எழுகிறது. அதுகுறித்து விளக்கமாக பார்க்கலாம்.
போஸ்ட்பெய்ட் மற்றும் ப்ரீபெய்ட் சிம்களுக்கு உள்ள வித்தியாசம் என்ன ?
ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் சிம்களுக்கு இடையிலான மிக முக்கியமான வித்தியாசம் அவற்றின் கட்டணம் செலுத்தும் முறையில் தான் உள்ளது. ஒரு ப்ரீபெய்ட் இணைப்பில், பயனர் சேவைகளைப் பயன்படுத்துவதற்கு முன்பே அதற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் ஒரு போஸ்ட்பெய்ட் இணைப்பில், பயனர் முதலில் சேவைகளைப் பயன்படுத்த முடியும் . பின்னர் தான் பயன்படுத்திய சேவைக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் கட்டணம் செலுத்த வேண்டும்.
இதையும் படிக்க : 25 ஆண்டுகளுக்கு பிறகு கூகுளில் வந்த புதிய மாற்றம்.. இனி தேடுதல் முன்பை போல இருக்காது!




பெரும்பாலான தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பயனர்கள் இருவருக்கும் ஒரே மாதிரியான நெட்வொர்க் கட்டமைப்பையே பயன்படுத்துகின்றன. இதன் பொருள் என்னவென்றால், போன் கால், கவரேஜ் பகுதி மற்றும் அடிப்படை நெட்வொர்க் ஆகியவை பொதுவாக இரு பயனர்களுக்கும் ஒரே மாதிரியாகவே இருக்கும். காணக்கூடிய ஒரே வித்தியாசங்கள், சில கூடுதல் அம்சங்கள் மற்றும் பிரீமியம் சேவைகளில் மட்டுமே காணப்படுகின்றன.
போஸ்ட்பெய்ட் சிம் கார்டுகளில் இணைய வேகம் அதிகமாக இருப்பதாகப் பயனர்கள் பெரும்பாலும் கருதுகின்றனர். சில தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் அதிக விலை கொண்ட போஸ்ட்பெய்ட் திட்டங்களில் சிறந்த டேட்டா திட்டங்கள் மற்றும் சேவைகள் கிடைப்பதில் முன்னுரிமை போன்ற சிறப்பு அம்சங்களே இந்தக் கருத்துக்கு காரணம். நெட்வொர்க் பிரச்னை மிகுந்த பகுதிகளில், சில போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு சில நேரம் சீரான இணைய வேகம் கிடைக்கலாம். உண்மையான இணைய வேகம் என்பது, அப்பகுதியில் உள்ள நெட்வொர்க் கவரேஜ், பயனர்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களின் செயல்திறன், இருப்பிடம் உள்ளிட்ட பல காரணிகள் தீர்மானிக்கின்றன. எனவே, போஸ்ட்பெய்ட் இணைப்பைத் தேர்ந்தெடுப்பது மட்டுமே அதிவேக இண்டர்நெட் ஸ்பீட் கிடைப்பதற்கு காரணமாக அமையாது.
இதையும் படிக்க : நம் வாட்ஸ்அப் உரையாடல்களை பிறர் பார்க்கும் ஆபத்து – தவிர்க்க உதவும் ஆப் லாக் வசதி – எப்படி பயன்படுத்துவது?
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏன் போஸ்ட்பெய்ட் திட்டங்களை ஊக்குவிக்கின்றன? தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போஸ்ட்பெய்ட் திட்டங்களை அதிகளவில் ஊக்குவிக்கின்றன, ஏனெனில் அவை நீண்ட காலத்திற்குப் பயனர்களைத் தக்கவைத்துக்கொள்வதை உறுதிசெய்து, நிறுவனத்திற்கு ஒரு நிலையான வருவாய் ஆதாரத்தை வழங்குகின்றன. போஸ்ட்பெய்ட் திட்டங்கள் ஓடிடி சந்தாக்கள், சர்வதேச ரோமிங், ஃபேமிலி பிளான் மற்றும் பிரீமியம் வாடிக்கையாளர் சப்போர்ட் போன்ற கூடுதல் சலுகைகளையும் வழங்குகின்றன. இதனால்தான் பலர் போஸ்ட்பெய்ட் திட்டங்ககளை தேர்ந்தெடுக்கின்றனர். இருப்பினும், நெட்வொர்க் தரம் எப்போதும் போஸ்ட்பெய்ட் சேவைகளுடன் நேரடியாகத் தொடர்புடையதாக இருப்பதில்லை.