AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நம் வாட்ஸ்அப் உரையாடல்களை பிறர் பார்க்கும் ஆபத்து – தவிர்க்க உதவும் ஆப் லாக் வசதி – எப்படி பயன்படுத்துவது?

WhatsApp App Lock : நாம் சிஸ்டம் அருகில் இல்லாத போது மற்றவர்கள் நம் வாட்ஸ்அப்பில் உள்ள தனிப்பட்ட உரையாடல்களை பார்க்கும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த நிலையில் இந்த பிரச்னையை தவிர்க்க வாட்ஸ்அப் வெப்பில் ஆப் லாக் வசதியை பயன்படுத்த நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

நம் வாட்ஸ்அப் உரையாடல்களை பிறர் பார்க்கும் ஆபத்து – தவிர்க்க உதவும் ஆப் லாக் வசதி – எப்படி பயன்படுத்துவது?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 20 May 2026 16:06 PM IST

சமீபகாலமாக வாட்ஸ்அப்பை ஆஃபிஸ் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டில் பயன்படுத்தும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே நேரம் ஆஃபிஸ் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் போது நமது பிரைவசி மற்றும் பாதுகாப்பு குறித்த கவலைகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக நாம் சிஸ்டம் அருகில் இல்லாத போது மற்றவர்கள் நம் வாட்ஸ்அப்பில் உள்ள தனிப்பட்ட உரையாடல்களை பார்க்கும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த நிலையில் இந்த பிரச்னையை தவிர்க்க வாட்ஸ்அப் வெப்பில் ஆப் லாக் வசதியை பயன்படுத்த நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். அதனை எப்படி பயன்படுத்துவது என பார்க்கலாம்.

ஆப் லாக் வசதியை எப்படி பயன்படுத்துவது?

ஆப் லாக் என்பது நமது வாட்ஸ்அப் வெப்பை பாஸ்வேர்டு மூலம் பாதுகாக்கும் வசதியாகும். இந்த வசதியை நாம் பயன்படுத்தும்போது ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை வாட்ஸ்அப் தானாகவே லாக் ஆகிவிடும். பின்னர் சரியான பாஸ்வேர்டை உள்ளிட்டால் மட்டுமே அதனை பயன்படுத்த முடியும். இதனால் நம் அனுமதி இன்றி பிறரலால் நம் வாட்ஸஅப் உரையாடல்களை பார்க்க முடியாது.

இதையும் படிக்க : mAadhaar செயலி நிறுத்தம்? புதிய ஆதார் செயலியை மட்டும் பயன்படுத்த அறிவுறுத்தல்

  • இதற்காக குரோம் அல்லது வேறு ஏதேனும் புரௌசரில் வாட்ஸ்அப் வெப் லாகின் செய்ய வேண்டும்.
  • பின்னர் அதில் வலதுபுறம் மேல் பகுதியில் உள்ள மூன்று டாட்களை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதில் App Lock என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • பின்னர் App lock வசதியை Enable செய்து பாஸ்வேர்டு உறுவாக்க வேண்டும். பின்னர் பாஸ்வேர்டை உறுதிப்படுத்த வேண்டும்.
  • பன்னர் லாக் செய்யப்படும் நேரத்தை தேர்வு செய்ய வேண்டும்.
  • 1 நிமிடம், 15 நிமிடம், 1 மணி நேரம், 8 மணி நேரம் போன்ற இடைவெளிகளை தேர்வு செய்து Auto Lock வசதியையும் அமைக்கலாம்.

வாட்ஸ்அப்பின் சாட் லாக் வசதி

இதனை நீக்குவதும் எளிது. வாட்ஸ்அப் செட்டிங் பகுதியில் Privacy Setting பகுதிக்கு சென்று ஆப் லாக் வசதியை நீக்கலாம். மேலும் வாட்ஸ் அப் நிறுவனம் விரைவில் சாட் லாக் வசதியையும் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த வசதி மூலம் தனிப்பட்ட உரையடால்களை தனி ஃபோல்டரில் மறைந்து பாதுகாக்க முடியும். அதை ஓபன் செய்ய சீக்ரெட் கோட் பயன்படுத்த வேண்டியிருக்கும். இந்த வசதி ஏற்கனவே மொபைல் வாட்ஸ்அப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : அதிகரிக்கும் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிகள் – வந்தாச்சு சிபிஐயின் அபய் ஏஐ

தற்போது அலுவலகங்கள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் பலரும் ஷேர்டு கம்ப்யூட்டர் (Shared Computer) முறையை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் தனிப்பட்ட உரையாடல்கள் மற்றும் முக்கிய தகவல்கள் மற்றவர்களுக்கு தெரியாமல் பாதுகாக்க App Lock போன்ற வசதிகள் மிகவும் அவசியமாகி வருகின்றன.

Follow Us